பூதக்கண்ணாடியில் “ஜீரோ”.. சுதந்திரத்தில் ஆர்எஸ்எஸ் பங்கு? சாவர்க்கர் மேட்டரால் களமிறங்கிய காங்கிரஸ்
சென்னை: ஆர்.எஸ்.எஸ். நிறுவனர்களில் ஒருவரான சாவர்க்கர் மீது ராகுல் காந்தி அவதூறாக பேசி வருவதற்காக காவல் நிலையத்தில் புகாரளிக்க இருப்பதாக அவரது பேரன் தெரிவித்து இருக்கும் நிலையில் சுதந்திர போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் பங்கு பூஜ்ஜியம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தெரிவித்து உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் பிறந்த சாவர்க்கர் இந்து மகா சபாவின் தலைவராக இருந்தவர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிறுவர்களில் ஒருவராக உள்ளார்.
பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்பினரால் தலைவராக போற்றப்படும் சாவர்க்கரை சுதந்திர போராட்ட தியாகி என அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
ஆனால், இந்த கூற்றை காங்கிரஸ், இடதுசாரிகள், திராவிட கட்சிகள், அம்பேத்கரிய இயக்கங்கள் மறுத்து வருகின்றன. அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட சாவர்க்கர் வெள்ளையருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தவர் என பல ஆண்டுகளாக வரலாற்று ஆதாரங்களுடன் அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ராஜ்நாத் சிங்
சாவர்க்கர் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்ததாக கூறப்படும் தகவலுக்கு இந்துத்துவா அமைப்பினர் மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், கடந்த ஆண்டு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மகாத்மா காந்தியின் அறுவுறுத்தலின்படியே சாவர்க்கர் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தார் எனக்கூறியது அப்போது சர்ச்சைக்கு உள்ளானது

ராகுல் காந்தி
ஆனால், ராகுல் காந்தி தொடர்ந்து சாவர்க்கரை விமர்சித்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் பேசிய அவர், "சாவர்க்கர் ஜி, தான் எழுதிய புத்தகத்தில் 'எனது நண்பர்களுடன் சேர்ந்து சென்று இஸ்லாமியர்களை தாக்கும் தினமே எனக்கு மகிழ்ச்சியான நாள்' என குறிப்பிட்டு இருக்கிறார். எனவே அவருக்கு மரியாதை தரும் விதமாக சாவர்க்கர் ஜி என்று நான் அழைக்க மாட்டேன்." என்றார்.

பென்ஷன் பெற்ற சாவர்க்கர்
கடந்த செவ்வாய்கிழமை பழங்குடியின தலைவர் பிர்ஸா முண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிக்ழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், "அந்தமான் சிறையில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு சாவர்க்கர் மன்னிப்பு கடிதம் எழுதினார்.

பிர்ஸா முண்டா
தன்னை விடுதலை செய்யுமாறு அவர் மன்றாடினார். அவர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் ஓய்வூதியம் வாங்கினார். விடுதலைக்கு பின் பிரிட்டிஷ் படைகளில் சேர்ந்தார். பிர்ஸா முண்டா, சாவர்க்கருக்கு இடையே வித்தியாசம் உள்ளது. 24 வயதில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டவர் பிர்ஸா முண்டா. இன்றும் அவரது கொள்கைகளை எதிர்த்து வருகிறது பாஜக." என்றார்.

சாவர்க்கர் பேரன்
இந்த நிலையில் மும்பையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சாவர்க்கர் பேரன் ரஞ்சித் சாவர்க்கர், "கடந்த 2017 ஆம் ஆண்டு ராகுல் காந்தி என் தாத்தாவை அவமதித்து வருகிறார். ராகுல் காந்தி திட்டமிட்டு சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கரை அவமதித்து வருகிறார். அவர் மீது நான் போலீசில் புகாரளிக்க உள்ளேன். வாக்கு வங்கி அரசியலுக்காக சாவர்க்கரை காங்கிரஸ் அவமதித்து வருகிறது." என்றார்.

மன்னிப்பு கடிதம்
சாவர்க்கர் பேரன் பேட்டியை சுட்டிகாட்டி பாஜகவினர் மற்றும் இந்துத்துவ அமைப்புகள் ராகுல் காந்தியை விமர்சித்தனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி சாவர்க்கரின் மன்னிப்பு கடிதத்தையே வெளிப்படையாக காட்டினார். இந்த நிலையில் இன்று ட்விட்டரில் ஒரு படத்தை வெளியிட்டுள்ள தமிழ்நாடு காங்கிரஸ், சுதந்திர போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் பங்கு பூஜ்ஜியம் என விமர்சித்து உள்ளது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications