முதல்வர் ஸ்டாலின் பேசும்போது வித்தியாசத்தை கவனிச்சீங்களா! கொரோனா தடுத்த குரல்.. கடமையாற்றி அசத்தல்
சென்னை: கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு முதல்வர் ஸ்டாலின் குணமடைந்தாலும் அவரது குரல் வளம் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தொண்டை பாதிக்கப்பட்டாலும் தொண்டு பாதிக்கப்படக்கூடாது என்று கடமையாற்றி வருகிறார் முதல்வர் மு.க ஸ்டாலின் என்கிறார்கள் திமுகவினர்.
Recommended Video
சென்னை குருநானக் கல்லூரி பொன் விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மிகவும் மெல்லிய குரலில் பேசினார். எப்போதுமே கம்பீரமாக பேசும் ஸ்டாலின் குரல் சற்றே கம்மலாக மெதுவாக ஒலித்தது.
குருநானக் கல்லூரி பொன் விழாவில் கலந்து கொள்ள எனக்கு எல்லா உரிமையும் உண்டு.1971ல் கல்லூரி தொடங்கிய போதும் ஆட்சியில் இருந்தது திமுக தான். கல்லூரிக்காக 25 ஏக்கர் நிலத்தை ஒதுக்கினார் கலைஞர். கலைஞர் ஒதுக்கியது வீண்போகவில்லை என்பதை குருநானக் கல்லூரியின் பொன்விழா நிரூபித்துள்ளது.

சோடை போகாது
கலைஞர் தொடங்கிய எதுவும் சோடை போனதாக வரலாறு இல்லை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. சென்னை மேயராக 2 முறை பொறுப்பு வகித்த போதும் குருநானக் கல்லூரி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். சிறுபான்மையினராக உள்ள சீக்கிய மக்கள் ஆற்றி வரும் கல்விப்பணி பெரும்பான்மையினரை விட மகத்தானது. குருநானக் கல்லூரி அனைத்து தரப்பு மக்களும் பயிலக்கூடிய கல்லூரியாக இருந்து வருகிறது என்று கூறினார்.

எச்சரிக்கை தொனி
அதுவரை மிக மெதுவாக பேசிய முதல்வர் ஸ்டாலின் மாணவிகளுக்கு நேரிடும் துன்பங்களைப் பற்றி பேசும் போது மட்டும் சற்று வேகமாகவும், எச்சரிக்கும் விதமாகவும் பேசினார். மாணவிகளுக்கு எதிரான செயல்களை அரசு வேடிக்கை பார்க்காது என்று கூறினார்.

பாலியல் தொல்லைக்கு எதிராக நடவடிக்கை
சமீப காலமாக நடந்த சில நிகழ்வுகள் என்னை மன வேதனை அடையச் செய்தன.கல்வி நிறுவனங்களில் பாலியல் தொல்லை புகார் எழுந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளை வருமான நோக்கத்தில் நடத்தக் கூடாது. கல்வி நிறுவனம் நடத்துவோர் தொழில் வர்த்தகமாக இல்லாமல் தொண்டாக நினைக்க வேண்டும்.

தற்கொலை எண்ணம்
மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது. தற்கொலை எண்ணத்தை மாணவர்கள் கைவிட வேண்டும். ஆசிரியர்கள், பெற்றோருடன் மனம் விட்டு பேசுங்கள்.எத்தகைய சோதனைகளையும் எதிர்கொள்ள ஆற்றல் பெற்றவர்களாக தமிழக மாணவர்கள் விளங்க வேண்டும். தொல்லைகள், அவமானத்தை மாணவிகள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்றும் பேசினார்.

கொரோனா பாதிப்பு
கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகியிருந்த முதல்வர் ஸ்டாலின் தற்போது தேறியுள்ளார். இருப்பினும், அதன் பக்க விளைவு காரணமாக சில நாட்கள் சத்தமாக பேச முடியாத நிலையிலும் கல்லூரி விழாவில் பங்கேற்று மாணவிகளுக்கு தொல்லை கொடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்று எச்சரித்துள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications