கொரோனா 2வது அலை ரொம்ப மோசம்.. நாடு முழுக்க இறப்பு மிக அதிகம்.. எப்போது குறையும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா இறப்பு எண்ணிக்கை வரும் நாட்களில் குறையத் தொடங்க வாய்ப்பு உள்ளது. புள்ளி விவர டிரெண்ட் அப்படித்தான் சொல்கிறது.

கோவிட் -19 காரணமாக இந்தியாவின் இறப்பு எண்ணிக்கை இப்போது மூன்று லட்சத்தைத் தாண்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, இறப்பு எண்ணிக்கை 303,720 ஐ எட்டியுள்ளது. அவர்களில் கிட்டத்தட்ட பாதி, அதாவது, 1.5 லட்சம் இறப்புகள், பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் தொடங்கிய இரண்டாவது அலையின் போது நிகழ்ந்தன. இவற்றில் பெரும்பாலும், மார்ச் மாதத்திற்குப் பிறகு நடந்துள்ளதாம். அதுவும் கடைசி, 7 வாரங்களில், 1.4 லட்சத்துக்கும் அதிகமான இறப்புகள் பதிவாகியுள்ளன.

Corona deaths is likely to start declining in the coming days in India

உலகின் மூன்றாவது அதிகப்படியான கொரோனா இறப்பு எண்ணிக்கை நாடாக இந்தியா உள்ளது. 5.84 லட்சத்துக்கும் அதிகமான இறப்புகளைப் பதிவு செய்த அமெரிக்கா, 4.48 லட்சம் இறப்புகளை பதிவு செய்த பிரேசில் ஆகியவை முதல் இரு இடங்களில் உள்ளன. உலகளவில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா கேஸ்களில் இந்தியாவில் மட்டும் 16% உள்ளது. உலகளாவிய இறப்புகளில் 9% இந்தியாவில் உள்ளது.

இந்தியாவில் தினசரி கேஸ்கள் எண்ணிக்கை மே 6 அன்று உச்சம் கண்டது. அன்று, 4.14 லட்சத்திற்கும் அதிகமான கேஸ்கள் பதிவாகின. அதன்பிறகு புதிய கேஸ்கள் மெல்ல மெல்ல சரிவடைய தொடங்கின. இறப்பு எண்ணிக்கை பொதுவாக கேஸ்கள் எண்ணிக்கை குறைந்த இரண்டு வாரங்களுக்கு பிறகுதான் குறையும் என்பதால், அடுத்தடுத்த வாரங்களில் அந்த எண்ணிக்கை குறையும் என்று நம்பலாம்.

கடந்த இரண்டு வாரங்களில், கொரோனா இறப்பு எண்ணிக்கை ஒரு நாளைக்கு சராசரியாக 4,000ஆக இருந்த நிலையில், அது, ஒரு நாளைக்கு 4,190 ஆக உயர்ந்துள்ளது. மே மாதம் இதுவரை இந்தியா பார்த்த மோசமான மாதமாக இருந்தது. மே மாதம் இதுவரை 92,000 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். ஏப்ரல் மாதத்தை விட இது இரு மடங்காகும்.

மகாராஷ்டிராவின் தினசரி இறப்பு எண்ணிக்கையில் கிட்டத்தட்ட பாதி இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த இறப்புகளை உள்ளடக்கியது. உதாரணமாக, ஞாயிற்றுக்கிழமை, அரசு 1,320 கொரோனா வைரஸ் இறப்புகள் குறித்து அறிவித்தது. ஆனால் அவற்றில் 726 கேஸ்கள், இரண்டு வாரங்களுக்கும் மேலானவை. கர்நாடகாவிலும், தமிழ்நாட்டிலும் இதேதான் நடக்கிறது.

இறப்புகளை தாமதமாக ரிப்போர்ட் செய்வது புதியதல்ல. மார்ச் மாதத்திலிருந்து ஒரு சில இறப்புகளை இன்னும் கர்நாடகா பதிவு செய்யவில்லை. இப்போது நிகழும் சில இறப்புகள் இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குப் பிறகுதான் கணக்கிடப்படும்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை மிக அதிக எண்ணிக்கையிலான இறப்புகளை ரிப்போர்ட் செய்த சத்தீஸ்கர், டெல்லி, உத்தரபிரதேசம், உத்தரகண்ட் கடந்த சில நாட்களில் இறப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இருப்பினும், தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவின் இறப்பு விகிதங்கள் அதிகமாக இருப்பதால், மொத்த எண்ணிக்கை கூடியிருப்பதை போல தெரிகிறது.

அந்த நேரத்தில் சராசரியாக சுமார் 3.9 லட்சம் கொரோனா கேஸ்கள் பதிவாகிய நிலையில் தற்போது அது சுமார் 2.5 லட்சம் வழக்குகளாக குறைந்துள்ளது. எனவே அடுத்தடுத்த நாட்களில், கொரோனா இறப்பு எண்ணிக்கை குறையும் என்ற டிரெண்ட் இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+