சென்னையில் அதிகரிக்கும் கொரோனா..அச்சத்தில் மக்கள்..மீண்டும் லாக்டவுன் வருமா? - அமைச்சர் சொல்வதென்ன?
சென்னையில் கொரோனா பாதிப்பு வேகம் அதிகமாக இருந்தாலும் உயிரிழப்பு இல்லை என்பதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை: சென்னையில் 9 மற்றும் 13 ஆகிய இரண்டு மாநகராட்சி மண்டலங்களில் கொரோனா பாதிப்பு வேகம் அதிகமாக இருந்தாலும் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். கொரோனாவால் உயிரிழப்பு இல்லை என்பதால் பொதுமக்கள் பதற்றப்படத் தேவையில்லை என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். உயிரிழப்புகள், உடல் நலம் பாதிப்பு ஒரு புறம் என்றால் பொருளாதார இழப்பு அனைத்து தரப்புக்கும் ஏற்பட்டது. மாணவர்களின் கல்வியும் பெருமளவில் பாதிக்கப்பட்டது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்பட்ட மூன்றாவது அலையிலிருந்து விரைவில் விடுபட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். கடந்த சில மாதங்களாக அனைத்து பணிகளும் வழக்கம் போல் நடைபெற்று வந்தன.
பள்ளிகளிலும் தேர்வுகள் நிறைவடைந்து அடுத்த கல்வி ஆண்டு இன்னும் 10 நாள்களில் தொடங்க உள்ளது.
இந்த சூழலில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. முக்கியமாக சென்னையில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

சென்னையில் பரவும் கொரோனா
சென்னை தி.நகர் கிரி சாலையில் உள்ள குடியிருப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா தொற்று இந்தியா முழுவதும் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளதாக தெரிவித்தார்.

உயிரிழப்பு இல்லை
தமிழகத்தில் சுகாதரத்துறை, உள்ளாட்சி அமைப்புகளை மிகுந்த கவனத்துடன் இருக்க முதல்வர் அறிவுறுத்தல் வழங்கி உள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு மேலாக உயிரிழப்பு இல்லாத பாதிப்பு என்கிற நிலை இருந்து வருகிறது.
சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பாதிப்பு சற்று அதிகரிப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது. அதன்படி போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கல்லூரிகளில் அதிகரிப்பு
அண்ணா பல்கலைக்கழகம், சத்ய சாய், ஐஐடி, விஐடி ஆகிய கல்லூரிகளில் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது ஆனால் 4 கல்லூரிகளிலும், மாணவர்கள் மாஸ்க் அணிவது, உணவருந்தும் போது சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து வருகின்றனர். இதனால் தொற்று பாதிப்பு இந்த கல்லூரிகளில் வெகுவாக குறைந்து வருகிறது. விஐடியில் 196 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில், 3 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் 193 பேர் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டு மண்டலங்களில் அதிகம்
சென்னையில் 9 மற்றும் 13 ஆகிய மண்டலங்களில் தொற்று அதிகமாக உள்ளது. சென்னையில் 15 இடங்கள் கொரோனா கட்டுப்பாடு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 370 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் உள்ளனர். சென்னையில் மொத்தம் 370 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமையில் உள்ளனர். சென்னையிலும் ஒரு சில இடத்தில் மட்டும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபருக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர்
தி.நகரில் ஒரு குடும்பத்தில் 6 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தாலும் 6 பேரும் நலமுடன் இருக்கிறார்கள். பாதிப்பின் வேகம் சற்று அதிகமாக இருந்தாலும் உயிரிழப்பு போன்ற நிலை இல்லாததால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டிய தேவையில்லை. தொற்று பாதிப்பு எங்கெல்லாம் அதிகரிக்கிறதோ அங்கெல்லாம் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக சென்று தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications