கொரோனா அறிகுறி..முதல்வர் மு.க ஸ்டாலின் காவேரி மருத்துவமனையில் அனுமதி - சிடி ஸ்கேன் பரிசோதனை
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சி.டி ஸ்கேன் பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மருத்துவ ரீதியான பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video
கடந்த சில வாரங்களாகவே நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தலைவர்கள் மற்றும் பிரபலங்களும் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இதுகுறித்து இரு தினங்களுக்கு முன்பு அவர் தனது ட்விட்டரில் "இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கொரோனா உறுதிசெய்யப்பட்டதை அடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்." என்று அறிவுறுத்தி இருக்கிறார்.
இந்த நிலையில் அவர் காவேரி மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு சி.டி ஸ்கேன் பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மருத்துவ ரீதியான பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் மு.க ஸ்டாலின் விரைவில் நலமடைய வேண்டும் என்று அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தவாரம் பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்வார் என்று கூறப்பட்ட நிலையில் இன்றைய தினம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications