சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டிஸ்சார்ஜில் செம வேகம்.. தமிழகம்தான் நம்பர் 1.. கலக்கும் மருத்துவர்கள்.. 411 பேர் குணமடைந்தனர்!

தமிழகத்தில் இன்று 105 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ள அதே சமயத்தில் இன்று மட்டும் 46 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று 105 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ள அதே சமயத்தில் இன்று மட்டும் 46 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Recommended Video

    சென்னையில் 2 செய்தியாளர்களுக்கு கொரோனா.. சுகாதாரத்துறை செய்தியாளர் சந்திப்பு ரத்து

    தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக கொரோனா பரவும் வேகம் குறைந்து வந்த நிலையில் இன்று திடீர் என்று கொரோனா வேகம் எடுத்துள்ளது. இரட்டை இலக்கங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில் இன்று மீண்டும் மூன்று இலக்கத்தை தமிழகம் அடைந்துள்ளது.

    இன்று தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,477 ஆக அதிகரித்துள்ளது.

    ஒரே நாளில் 50 பேர்.. சென்னையில் படுதீவிரம் எடுத்த கொரோனா.. 285 பேருக்கு பாதிப்பு.. என்ன நடந்தது? ஒரே நாளில் 50 பேர்.. சென்னையில் படுதீவிரம் எடுத்த கொரோனா.. 285 பேருக்கு பாதிப்பு.. என்ன நடந்தது?

    வேகம் எடுக்கிறது

    வேகம் எடுக்கிறது

    தமிழகத்தில் இன்று மட்டும் 46 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக தமிழகத்தில் 411 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகம் மற்ற மாநிலங்களை விட கொரோனா நோயாளிகளை குணப்படுத்துவதில் வேகமாக செயல்படுகிறது. கொரோனா நோயாளிகளை குணப்படுத்துவதில் தமிழகம்தான் முதல் இடத்தில் உள்ளது. இதே வேகத்தில் சென்றால் தமிழகம் விரைவில் கொரோனாவில் இருந்து விடப்பட வாய்ப்புள்ளது.

    தமிழ்நாடு நம்பர் 1

    தமிழ்நாடு நம்பர் 1

    தமிழகத்தில் 1477 பேருக்கு கொரோனா உள்ளது. 411 பேர் குணப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 1051 பேர்தான் தற்போது இருக்கும் ஆக்டிவ் நோயாளிகள். இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிகமான நபர்கள் கொரோனாவில் இருந்து குணப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் புதிதாக நபர்கள் அதிகமாக கொரோனா காரணமாக பாதிக்கப்படாமல் இருந்தால் தமிழகம் விரைவில் கொரோனாவில் இருந்து குணமடைய வாய்ப்புள்ளது.

    மற்ற மாநிலங்கள்

    மற்ற மாநிலங்கள்

    தமிழகத்திற்கு அடுத்தப்படியாக மகாராஷ்டிராவில்தான் 365 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். அங்கு 3648 பேருக்கு கொரோனா உள்ளது. 3072 ஆக்ட்டிவ் நோயாளிகள் அங்கு உள்ளனர். அங்கு 211 பேர் பலியாகி உள்ளனர். அதற்கு அடுத்து கேரளாவில் 270 பேர் கொரோனாவில் இருந்து குணப்படுத்தப்பட்டுள்ளனர். அங்கு 401 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தற்போது 129 ஆக்டீவ் நோயாளிகள் உள்ளனர்.

    புதிய கேஸ் இல்லை

    புதிய கேஸ் இல்லை

    இன்னொரு நல்ல விஷயமாக இன்று தமிழகத்தில் யாரும் கொரோனா காரணமாக பலியாகவில்லை. அதேபோல் தமிழகத்தில் 23 மாவட்டங்களில் புதிய கேஸ் இல்லை. புதுக்கோட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரியில் எந்தக் கேஸும் இதுவரை இல்லை. திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி, திருவள்ளூர், தேனி, கரூர், ராணிப்பேட்டை, தூத்துக்குடி, சேலம், வேலூர், திருப்பத்தூர், கன்னியாகுமரி, திருவண்ணாமலை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று புதிய கொரோனா நோயாளிகள் யாரும் இல்லை.

    English summary
    Coronavirus: 46 patients discharged in Tamilnadu today, so far 411 recovered.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X