1 வாரத்திற்கு பின் குறைந்தது.. தமிழகத்தில் இன்று 5864 கொரோனா கேஸ்கள்.. மொத்தமாக 239978 பேர் பாதிப்பு
சென்னை: தமிழகத்தில் இன்று 5864 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 239978 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக தினமும் 6000-7000 கேஸ்கள் வந்தது. சில நாட்கள் 7 ஆயிரத்திற்கும் நெருக்கமான கேஸ்கள் வந்தது. இப்படி ஒரு வாரமாக தினமும் 6 ஆயிரத்திற்கும் அதிகமான கேஸ்கள் வந்த நிலையில் இன்று குறைந்துள்ளது.
அதேபோல் இன்று சென்னையில் 1175 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சென்னையில் மொத்தமாக 98767 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை எப்படி
சென்னையில் தற்போது ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 12785 ஆக உள்ளது. சென்னையில் இன்று 2092 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தமாக 83890 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மிக அதிகமாக இன்று 97 பேர் பலியாகி உள்ளனர்.மொத்தமாக 3837 பேர் இதுவரை தமிழகத்தில் பலியாகி உள்ளனர் .

டிஸ்சார்ஜ் எப்படி
தமிழகத்தில் இன்று 5295 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள். 178178 பேர் இதுவரை மொத்தமாக தமிழகத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 57962 ஆக உள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

சோதனை எத்தனை
இன்று 61202 மாதிரிகள் தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. 2597862 மாதிரிகள் இதுவரை தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 59437 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 2501919 பேருக்கு தமிழகத்தில் இதுவரை கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. சோதனைகளை தமிழகம் துரிதப்படுத்தி உள்ளது.

சென்னைக்கு அடுத்து
சென்னைக்கு அடுத்து இன்று செங்கல்பட்டில் 354 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 14197 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று திருவள்ளூரில் 325 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 13481 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று ராணிப்பேட்டையில் 272 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 4769 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications