கொரோனா பரவல் தீவிரம்... தமிழகத்தில் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீடிக்க மருத்துவக்குழுவினர் பரிந்துரை

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேலும் 2 வாரங்கள் ஊரடங்கை நீடிக்குமாறு மருத்துவ நிபுணர் குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. தமிழகத்தில் கட்டுப்பாடுகளை அதிகரிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேலும் 2 வாரங்கள் ஊரடங்கை நீடிக்குமாறு மருத்துவ நிபுணர் குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. தமிழகத்தில் கட்டுப்பாடுகளை அதிகரிக்கவும் நிபுணர் குழு பரிந்துரைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர், சட்டசபை உறுப்பினர் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். ஆலோசனைக்குப் பிறகு ஊரடங்கு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கடந்த 10ஆம் தேதி வருகிற 24ஆம் தேதி காலை 4 மணி வரை இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு கூடுதல் கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்தப்பட்டது. தொற்று பரவலை கட்டுப்படுத்த இ-பதிவு முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

லாக்டவுன் அறிவிக்கப்பட்டும் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது ஒரே நாளில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர்.

தமிழகத்தில் லாக்டவுன்

தமிழகத்தில் லாக்டவுன்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்வடுத்தப்பட்டுள்ள ஊரடங்கு வருகிற 24ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. ஆனால், இந்த முழு ஊரடங்கு என்பது பாதிப்பை கட்டுப்படுத்த போதுமானதாக இருக்காது என்றும், கட்டுப்பாடுகளை அதிகரித்து ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் ஆலோசனை

நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் ஆலோசனை

இந்த நிலையில் மருத்துவ நிபுணர்கள் அடங்கிய கூட்டம் இன்று காலையில் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதீப் கவுர், குகநாதன், ராமசுப்பிரமணியன் உள்ளிட்ட 19 மருத்துவ நிபுணர்கள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். மருத்துவ நிபுணர்கள் ஆலோசனைக்கு பின்னர் சட்டமன்ற கட்சி உறுப்பினர்களின் குழுவுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

லாக்டவுன் நீடிக்க பரிந்துரை

லாக்டவுன் நீடிக்க பரிந்துரை

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும் நிபுணர்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேலும் 2 வாரங்கள் ஊரடங்கை நீடிக்குமாறு மருத்துவ நிபுணர் குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. தமிழகத்தில் கட்டுப்பாடுகளை அதிகரிக்கவும் நிபுணர் குழு பரிந்துரைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு

ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு

இதனையடுத்து சட்டமன்ற உறுப்பினர் குழுவினருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின் அடிப்படையில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசு உத்தரவு

அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. அதே போல தமிழகத்திலும் தற்போது அமலில் உள்ள ஊரடங்கை மேலும் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட அதிக வாய்ப்புள்ளதாக தலைமைச் செயலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+