ஈகோ, பிடிவாதத்தை தூக்கி போடுங்க.. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்க.. இணைந்து செயல்படுங்க..!

அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் கூட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் உயர்ந்து வருகிறது தொற்று பாதிப்பு.. ஊரடங்கும், ஒரு பாதி தளர்த்தலும், ஊரடங்கிற்குள் ஊரடங்கு என குழப்பங்கள் நிலவி வரும் நிலையில், திமுகவும் - அதிமுகவும் இன்னமும் கொரோனா தடுப்பில் ஒன்று சேராமல் அறிக்கை போர்களையும், கண்டன விமர்சனங்களையும் முன் வைத்து வருகின்றனர்.. தமிழகத்தின் அபாயம் கருதியும், தமிழக மக்களின் நலன் கருதியும் இவர்கள் இணைய வேண்டும்.. சர்வ கட்சி கூட்டத்தை உடடினாக தமிழக அரசு கூட்ட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது!!

Recommended Video

    Necessary to All Party Meeting in tamilnadu | அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்க

    இன்னமும் வைரஸ் பாதிப்பில் முதல் இடத்தில் உள்ளது சென்னை.. இதுவரை வராத கிருஷ்ணகிரிக்குள்ளும் காலை வைத்துவிட்டான் கொடூர கொரோனா.. தமிழக அரசு முன்னெச்சரிக்கை எடுத்து எல்லாவற்றையும் கட்டுக்குள் கொண்டு வருகிறது என்கிறது அதிமுக தரப்பு.. ஆனால் தினமும் அறிக்கைகளை விட்டு கேள்வி எழுப்பி வருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின்!!

    சுகாதாரத்துறையை பொறுத்தவரை எல்லா முயற்சிகளும் எடுக்கத்தான் செய்கிறது.. அதே சமயத்தில் தமிழகஅரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைநாள்தான் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாதஅளவிற்கு தமிழகத்தில் 52% சதவீதம்பேர் இன்றைக்கு கொரோனா வால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதையும் மறுக்க முடியாது.

    தளர்த்தல்?

    தளர்த்தல்?

    ஆனால் பிரச்சனை அங்கு இல்லை.. எந்த அறிகுறியுமே தெரியதவர்கள் 70 சதவீதம் இருக்கிறோம் என்பதுதான் விபரீதத்தின் உச்சம்.. இதை எப்படி கண்டறிந்து களைவது என்பதில் ஆக்கப்பூர்வமான பிளான்கள் உடனடியாக தேவைப்படுகிறது. ஊரடங்கு மட்டும் தளர்த்துவதோ, நீட்டிப்பதோ உதவாது.. ஆனால் பரவும் வேகத்தை அது கட்டுப்படுத்தும்.. அவ்வளவுதான்... அறிவியில் பூர்வமான, மருத்துவ ரீயான நடவடிக்கைதான் முக்கியம். நோய் தடுப்பு நடவடிக்கை, பொருளாதார நெருக்கடி.. இந்த இரண்டு சிக்கல்களுக்கு நடுவில் அரசு சிக்கி கொண்டுள்ளதால்தான் தொடர்ந்து மாறி மாறி அறிவிப்புகளும், அதையொட்டின குழப்பங்களும் நடந்து வருகின்றன.

    அறிக்கை

    அறிக்கை

    இந்த சமயத்திலும் மத்திய, மாநில அரசுகள் தனித்துதான் முடிவுகளை எடுத்து வருகின்றன.. எதிர்க்கட்சிகளை கலந்தாலோசிக்காதது வருத்தமாக உள்ளது.. அறிக்கை விட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என்றால், ஒரு எதிர்க்கட்சி தலைவரால் அமைச்சரவையை கூட்ட முடியாது.. அறிக்கை மட்டுமே விட முடியும்.. அதன்மூலம்தான் தன் கருத்துக்களை பதிவு செய்ய முடியும்.. அதனால் அறிக்கை விடுவதை விமர்சிப்பதுடன், தங்கள் மீதான விமர்சனங்களைகூட எதிர்கொள்ள முடியாமல் அதிமுக அரசு உருமாறி வருகிறது.

    அரவணைப்பு

    அரவணைப்பு

    ஸ்டாலின் 4 பக்கத்துக்கு அறிக்கைவிட்டால், அன்றைக்கே அப்போதே 6 பக்கத்துக்கு அறிக்கையை துணை முதல்வர் விடுகிறார்.. இது தேவையா? எதிர்க்கட்சிகளை அரவணைத்து, உடனடியாக ஆலோசனை கேட்க வேண்டும்.. "முழு ஊரடங்கை ஒருநாள் முன்னதாக அறிவித்திருக்கலாம்... போதிய கால அவகாசம் கொடுக்கப்படாததால்தான் இந்த அளவுக்குக் கூட்டம் கூடியிருக்கிறது. இதனால் ஏற்படும் விளைவுக்கு யார் பொறுப்பேற்பது? நெரிசலைத் தவிர்ப்பதற்கு, கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று ஸ்டாலின் சொல்லவேதான், நேற்று முன்தினம் 3 மணி வரை மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், பிற்பகல் 3 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்படுகிறது" என்றார் முதல்வர்.

    அறிக்கைகள்

    அறிக்கைகள்

    இப்படி இடித்துரைக்க ஒரு தரப்பு தேவைப்படுகிறது.. இப்படி குறை, நிறைகளை எடுத்து சொல்ல ஒரு தரப்பு தேவைப்படுகிறது.. அதனால்தான் அனைத்து கட்சிகளையும் அழைத்து ஆளும் தரப்பு பேசவேண்டும்.. அதேபோல, திமுக தலைவரை பொறுத்தவரை, தினந்தோறும் அறிக்கைகள் விடுவதைவிட, அந்த அறிக்கையில் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை தினமும் தெரிவிக்கலாம்.. வெறும் விமர்சனம் செய்து, "ஆளும் தரப்பு இதற்கு பதில் சொல்லி ஆக வேண்டும், முழு பொறுப்பு ஏற்க வேண்டும்" என்று கண்டனங்களை மட்டுமே பதிவு செய்யாமல் ஆலோசனைகளை சொல்லி கொண்டே இருக்கலாம்.

    அன்புமணி

    அன்புமணி

    அனைத்து கட்சி கூட்டம் கூட்டினால்தான் ஆலோசனை தருவோம் என்பதை மாற்றி, அன்புமணி ராமதாஸ் போல இறங்கிவிட வேண்டும்.. எம்பி அன்புமணியும், டாக்டர் ராமதாசும் இப்படித்தான் மக்களிடம் தினந்தோறும் அறிவுறுத்தியும், அரசுக்கு யுக்திகளை தந்தும் வருகின்றன. அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே மக்களை இப்படிதான் அணுகி வருகின்றனர்.. அறிக்கை மூலம் நிறைய டிப்ஸ்களை, ஆலோசனைகளை தந்து கொண்டே இருக்கிறார்கள்.. இதையே திமுகவும் முழுமையாக கையில் எடுக்க வேண்டுமே, எப்போதுமே எல்லாவற்றிலும் குறையை மட்டுமே காண கூடாது.. சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும்போது, எப்படி கொரோனாவைரஸ் பரவலில் அதிமுக செயல்பாடு பாராட்டப்பட்டதோ, இப்போதும் அதுபோல அரசின் நல்ல நல்ல விஷயங்களையும், சுகாதாரத்துறையையும் மனசார பாராட்ட முன்வரவேண்டும்!!

    திருமாவளவன்

    திருமாவளவன்

    அதேபோல, விசிக தலைவர் திருமாவளவன் அப்போது முதல் இப்போது வரை சொல்லி கொண்டிருக்கும் ஒரு கருத்து என்னவென்றால், "எல்லாவற்றுக்கும் ஐசிஎம்ஆர்-ஐ கேட்டுதான் எல்லா மாநில அரசுகளும் இயங்க வேண்டும்என்ற நிலையை தகர்க்க வேண்டும்.. மாநில அரசே சுயேச்சையான முடிவுகளை எடுக்க அதிகாரம் வேண்டும். விருப்பப்படி ஊரடங்கை, கூட்டிக் கொள்ளலாம், குறைத்து கொள்ளலாம் என்று தெரிவித்து வருகிறார்.. இந்த கருத்தையும் பரிசீலிக்க வேண்டும்.

    தடுப்பு

    தடுப்பு

    நேற்றுகூட ஒரு பேட்டியில் திருமாவளவன் சொல்லும்போது, "தினமும் எத்தனை பேர் பாதிப்பு என்று அறிக்கையோ, பேட்டியோ வருகிறதோ தவிர, அந்த எண்ணிக்கை சரிதானா என்பது தெரியவில்லை.. அதை ஒரு அரசு கூட்டிக்கலாம், குறைத்து கொள்ளலாம்.. அதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து வெளிப்படை தன்மையை அரசு தெரிவிக்க வேண்டும்... தளர்வு என்று சொல்லிவிட்டால் பேசிக் கான்செப்ட்டே தப்பு ஆயிடும்" என்றார்.

    ஆலோசனைகள்

    ஆலோசனைகள்

    விஞ்ஞானப்பூர்வமாக, அறிவியல்பூர்வமாக இதற்கு யாராலும் தீர்வோ, ஆலோசனையோ சொல்ல முடியாது.. குறைந்தபட்சம் சமூக விலகல், ஊரடங்கு தளர்வு குறித்த கருத்துக்களையும் கேட்டறியலாம்.. அரசியல் அனுபவமும் கொண்ட திருமாவளவன், வைகோ, டாக்டர் ராமதாஸ், உள்ளிட்ட பல மூத்த தலைவர்களையும் அழைத்து பேசினால்தான் இன்னமும் இதுபோன்ற ஆலோசனைகள் நிறையவே வெளிப்படும், முதல்வர் தன்னுடைய பிடிவாதத்தை தளர்த்தி சர்வக்கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.. இதனால் அவர் எதையும் இழக்கப்போவதும் இல்லை.. ஏற்க போவதுமில்லை.. இதுபோன்ற நெருக்கடிக் காலத்தில் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயல்படுகிறார் என்ற நற்பெயர்தான் கிடைக்கும்!!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+