சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிரடி மாற்றம்.. கொரோனா டெஸ்ட் செய்தாலே இனி 14 நாட்கள் தனிமை கட்டாயம்.. சென்னையில் புது ரூல்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் இனிவரும் நாட்களில் கொரோனா தொற்று இருக்கிறதா என்று பரிசோதனை மேற்கொண்டாலே அந்த நபர் மற்றும் அவரது குடும்பத்தினர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சென்னை மாநகரட்சி தெரிவித்து உள்ளது.

சென்னையில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து இருக்கிறது.சென்னையில் 1406 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27398 ஆக உயர்ந்துள்ளது. சென்னையின் நிலைமை மிக மோசமாக மாறி வருகிறது.

தமிழகத்தில் இன்று புதிதாக 1875 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38716 ஆக உயர்ந்து இருக்கிறது.

ஒரே நாளில் 23 கொரோனா பலி.. அதிர்ச்சி அளித்த அந்த 10 பேரின் மரணம்.. தமிழகத்தில் தொடரும் சோகம்! ஒரே நாளில் 23 கொரோனா பலி.. அதிர்ச்சி அளித்த அந்த 10 பேரின் மரணம்.. தமிழகத்தில் தொடரும் சோகம்!

விதிமுறை என்ன

விதிமுறை என்ன

இந்த நிலையில் சென்னையில் கொரோனா சோதனை செய்வதற்கான புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டு உள்ளது. சென்னையில் இனிவரும் நாட்களில் கொரோனா தொற்று இருக்கிறதா என்று பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டாலே அந்த நபர் மற்றும் அவரது குடும்பத்தினர் 14 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.

கொரோனா பரிசோதனை தனிமை

கொரோனா பரிசோதனை தனிமை

பொதுவாக ஒருவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு அவர்களுக்கு நெகட்டிவ் என்று வந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள். இந்த நிலையில் இனிமேல் சென்னையில் ஒருவர் கொரோனா சோதனை மையத்திற்கு சோதனை செய்து கொண்டாலே அவர்கள் 14 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள். நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்தாலும் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதோடு அவரது குடும்பத்தினரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சென்னை மாநகரட்சி தெரிவித்து உள்ளது.

சென்னை மட்டும் இப்படி

சென்னை மட்டும் இப்படி

சென்னையில் மட்டும்தான் இந்த விதிமுறை கொண்டு வரப்பட்டு உள்ளது. சென்னையில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில் இப்படி அறிவிப்பு வெளியாகி உள்ளது. கொரோனா சோதனை மையங்களுக்கு வரும் நபர்களுக்கு கொரோனா இல்லை என்றாலும் கூட அதே சோதனை மையம் வரும் வேறு சில நபர்கள் மூலம் அவர்களுக்கு கொரோனா வர வாய்ப்புள்ளது. இதன் மூலம் கொரோனா பரவ வாய்ப்புள்ளது. இதனால் இந்த புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகம் நிலை என்ன

தமிழகம் நிலை என்ன

சென்னையில் கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் என்று கூறுகிறார்கள். லாக் டவுன் விதிமுறைகள் தீவிரமாக்கப்படலாம் என்றும் கூறுகிறார்கள். தமிழகத்தில் சென்னையில்தான் அதிகமான கொரோனா சோதனைகள் செய்யப்படுகிறது. இதனால் நாளுக்கு நாள் சென்னையில் கேஸ்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Coronavirus: People those who undergo PCR test will be quarantined for 14 days in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X