திடீரென புதிய உச்சம்.. தமிழகத்தில் ஒரே நாளில் 6352 பேருக்கு கொரோனா.. மொத்தமாக 415590 பேர் பாதிப்பு!
சென்னை: 6352 பேர் இன்று தமிழகத்தில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக தமிழகத்தில் 4,15,590 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. கடந்த 15 நாட்களாக தினமும் 5500க்கும் அதிகமான கேஸ்கள் வருகிறது. அதிலும் கடந்த ஒரு வாரமாக தினசரி கேஸ்கள் 6 ஆயிரத்தை நெருங்கியது.
இந்த நிலையில் இன்று 6 ஆயிரத்திற்கும் அதிகமான கேஸ்கள் வந்துள்ளது. இன்று கொரோனா சோதனைகள் அதிரடியாக உயர்த்தப்பட்ட நிலையில் கேஸ்களும் அதிகம் வந்துள்ளது .

சோதனை எத்தனை
இதுவரை இல்லாத அளவிற்கு இன்று தமிழகத்தில் கொரோனா சோதனை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் செய்யப்பட்டு இருக்கும் கொரோனா சோதனை விவரம்,
இன்று 80988 மாதிரிகள் தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. 4654797 மாதிரிகள் இதுவரை தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 78973 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 4499670 பேருக்கு தமிழகத்தில் இதுவரை கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

டிஸ்சார்ஜ் எப்படி
ஆனால் இன்னொரு பக்கம் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 6045 பேர் இன்று தமிழகத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 3,55,727 பேர் மொத்தமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 52726 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை எப்படி
சென்னையில் இன்று 1285 பேர் கொரோனா காரணமாக பாதிப்பு அடைந்துள்ளனர். சென்னையில் 133173 பேர் சென்னையில் இதுவரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 87 பேர் இன்று கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். இதுவரை மொத்தமாக தமிழகத்தில் 7137 பேர் பலியாகி உள்ளனர்.

மற்ற மாவட்டங்கள்
இன்று செங்கல்பட்டில் 306 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 25366 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று கடலூர் 420 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 10755 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று கோவையில் 491 கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 14393 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications