சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா மீண்டும் மீண்டும் வரும்.. நம்மை விடாமல் பின் தொடரும்.. சீன மருத்துவர் குழு எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் பாதிப்பு இப்போதைக்கு குறையாது மனித குலத்துடன் இன்னும் பல வருடங்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு தொடர்ந்து இருக்கும், அடிக்கடி இது திரும்பி வரும் சீன மருத்துவர் குழு தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு இப்போதைக்கு குறையாது மனித குலத்துடன் இன்னும் பல வருடங்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு தொடர்ந்து இருக்கும், அடிக்கடி இது திரும்பி வரும் சீன மருத்துவர் குழு தெரிவித்துள்ளது.

Recommended Video

    கொரோனா மீண்டும் வரும்.. சீன மருத்துவர் குழு எச்சரிக்கை

    கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு 4 மாதங்கள் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் இதன் தீவிரம் குறையவில்லை. பல நாடுகளில் இப்போதுதான் கொரோனா வைரஸ் தீவிரம் அடைய தொடங்கி உள்ளது.

    கொரோனா காரணமாக உலகம் முழுக்க 3,155,767 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுக்க 218800 பேர் பலியாகி உள்ளனர். மொத்தம் 965566 பேர் உலகம் முழுக்க குணமடைந்து உள்ளனர்.

    இன்னும் 2 வாரம்.. சென்னையில் கொரோனா பரவலுக்கு பேனிக் பையிங் காரணம் இல்லை.. வேறு எங்கோ தவறு நடக்கிறதுஇன்னும் 2 வாரம்.. சென்னையில் கொரோனா பரவலுக்கு பேனிக் பையிங் காரணம் இல்லை.. வேறு எங்கோ தவறு நடக்கிறது

    மீண்டும் வரும்

    மீண்டும் வரும்

    இந்த நிலையில் இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து சீனாவில் உள்ள இன்ஸ்டிடுயூட் ஆப் பேத்தோஜென் பயாலஜி கல்வி நிறுவனத்தை சேர்ந்த சீனாவின் உயர் மருத்துவக்குழு முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில், கொரோனா வைரஸ் பாதிப்பு இப்போதைக்கு குறையாது. மனித குலத்துடன் இன்னும் பல வருடங்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு தொடர்ந்து இருக்கும். அடிக்கடி இது திரும்பி வரும். இதை மொத்தமாக அழிப்பது மிக மிக கடினம்.

    தொடரும் வைரஸ்

    தொடரும் வைரஸ்

    ப்ளூ வைரஸ் எப்படி உலகை அடிக்கடி தாக்கியதோ அதேபோல் இந்த கொரோனா வைரஸ் மீண்டும் மீண்டும் மனித இனத்தை தாக்கும். இதற்கு முன் வந்த சார்ஸ் வைரஸ் மொத்தமாக குணப்படுத்தப்பட்டது. மனிதர்கள் மொத்தமாக சார்ஸ் வைரஸிடம் இருந்து தப்பித்தனர். ஆனால் இந்த கொரோனா வைரஸ் அப்படி கிடையாது. சார்ஸ் வைரஸ் வந்தால் உடனே அதற்கான அறிகுறி தெரியும்.

    அறிகுறி இல்லை

    அறிகுறி இல்லை

    அப்படி அறிகுறி வந்தவுடன் அந்த நபரை தனிமைப்படுத்தி எளிதாக சார்ஸ் பரவுவதை தடுக்க முடியும். ஆனால் கொரோனா வைரஸ் வந்தால் அப்படி கிடையாது. கொரோனா வைரஸ் இப்போதெல்லாம் அறிகுறி இல்லாமலே பரவுகிறது. மக்கள் தங்களுக்கு கொரோனா இருப்பதே தெரியாமல் வெளியே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒருவர் தனக்கு கொரோனா இருப்பது தெரியாமலே மற்ற நபர்களுக்கு கொரோனாவை பரப்ப முடியும்.

    எப்போதும் நம்முடன் இருக்கும்

    எப்போதும் நம்முடன் இருக்கும்

    இதனால் உலகில் எங்காவது இந்த வைரஸ் பரவிக்கொண்டே இருக்கும். இதை மொத்தமாக கட்டுப்படுத்த முடியாது. மொத்தமாக இந்த வைரஸை உலகில் இருந்து அழித்து விட முடியாது. சார்ஸ் வைரஸ் தாக்குதலுக்கும் இதற்கும் உள்ள ஒரே வேறுபாடு இதுதான். சீனாவில் கூட இப்போதும் பலருக்கு கொரோனா ஏற்படுகிறது. அங்கு இப்போதும் அறிகுறி இல்லாமல் பலருக்கு கொரோனா பரவுகிறது.

    இதற்கு நாம் பழக வேண்டும்

    இதற்கு நாம் பழக வேண்டும்

    இப்படி இந்த வைரஸ் நம்முடன் எப்போதும் இருக்க வாய்ப்புள்ளது. நாம் இதனுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும். அதேபோல் சீசனுக்கு தகுந்தபடி இந்த வைரஸ் மீண்டும் மீண்டும் வர வாய்ப்புள்ளது. அதேபோல் பொது இடங்களில் இந்த வைரஸ் உயிர் வாழும் என்பதால் அதன் மூலமும் இந்த வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. மொத்தமாக இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை இதில் இருந்து தப்பிக்க முடியாது.

    தடுப்பூசி இல்லை

    தடுப்பூசி இல்லை

    இதற்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது மட்டுமே ஒரே தீர்வாக இருக்க முடியும். அதேபோல் கொரோனா வைரஸ் வெயிலில் பரவுவது கொஞ்சம் கஷ்டம். இதனால் ஆசிய நாடுகளின் வரும் நாட்களில் வைரஸ் பரவும் வேகம் குறையும். ஆனால் மொத்தமாக இந்த வைரஸ் பாதிப்பு நம்மைவிட்டு நீங்காது. இதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்று சீன மருத்துவர் குழு தெரிவித்துள்ளது.

    English summary
    Coronavirus will come back and it can be seasonal says, Chinese doctors.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X