இனி இருமல் மருந்து டாக்டர் பரிந்துரையின்றி வாங்க முடியாது.. வருகிறது மத்திய அரசின் புது கட்டுப்பாடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே இனிமேல் இருமல் மருந்து வாங்க முடியும் என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு கொண்டுவரப்போகிறதாம்.. கலப்பட இருமல் மருந்தால் 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இப்படியொரு புதிய கட்டுப்பாடு விரைவில் வர உள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய பிரதேசம் சிந்த்வாரா மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கோல்ட்ரிப் இருமல் மருந்து காரணமாக ஒரு குழந்தை இறந்துவிட்டது.. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் மேலும் சில குழந்தைகள் கிட்னி செயல்பாடு இழந்து, அடுத்தடுத்து உயிரிழக்க துவங்கின.. அந்தவகையில் 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அங்கு உயிரிழந்தன.

சளி, இருமல், காய்ச்சல்

சளி, இருமல், லேசான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவர்கள் கோல்ட்ரிப் மற்றும் நெக்ஸ்ட்ரோ-டிஎஸ் சிரப்புகள் உள்ளிட்ட வழக்கமான மருந்துகளை பரிந்துரைத்துள்ளனர்.. அதன்படியே குழந்தைகளுக்கு அந்த இருமல் மருந்து தரப்படட்ன.

ஆனால், அதை சாப்பிட்ட சில நாட்களுக்குள்ளேயே அந்த குழந்தைகளுக்கு சிறுநீர் வெளியேறுவது குறைய துவங்கியது.. இது சம்பந்தமான டெஸ்ட்களை எடுத்தபோதுதான், கிட்னி தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக டயாலிசிஸ் ஆரம்பமானது.. ஆனால், குழந்தைகள் இறந்துவிட்டனர்.

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்

இதற்கு பிறகுதான் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில், குழந்தைகளின் கிட்னியில் டைஎதிலீன் கிளைகோல் இருப்பது கண்டறியப்பட்டது. இது, விஷத்துடன் தொடர்புடைய ஒரு வகை நச்சு ரசாயனமாகும். அதாவது பெயிண்ட் மற்றும் மை போன்ற பொருட்களில் பயன்படுத்தப்படும் ஒரு நச்சு பொருளாகும்.

பிறகு, சம்பந்தப்பட்ட இருமல் மருந்தை தயாரித்த தனியார் மருந்து கம்பெனியின் ஓனர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டார். தமிழக போலீஸாரின் உதவியுடன் மத்திய பிரதேச மாநில போலீஸார் இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்... அத்துடன், மருந்து நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு ஆலை மூடப்பட்டது.

இருமல் மருந்துக்கு தடை

மேலும், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அந்த இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டது. காஞ்சிபுரம் அருகே சுங்குவார்ச்சத்திரத்தில் மருந்து ஆலையை வைத்திருக்கிறார் ரங்கநாதன்.. இதையடுத்து, ரங்கநாதனிடம் மத்தியப் பிரதேச போலீஸார் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணைகளும் நடந்து வருகின்றன.

எனினும், இருமல் மருந்து குடித்து குழந்தைகள் இறந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி விட்டது. இந்த சம்பவம் நடந்ததுமே பல்வேறு மாநிலங்கள் சில இருமல் மருந்துகளை தடை செய்தன..அதுமட்டுமல்ல, உலக சுகாதார அமைப்பு (WHO) ஒரு மருத்துவ எச்சரிக்கையை வெளியிட்டது. இது போன்ற இருமல் மருந்துகளின் விநியோகத்தை முறையாக கண்காணிக்காமல் இருப்பது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அலர்ட் செய்திருந்தது.

மருத்துவர்கள் பரிந்துரை

இப்படிப்பட்ட சூழலில், டாக்டர்களின் பரிந்துரை இன்றி இனிமேல் இருமல் மருந்து வாங்க முடியாது என்று புதிய உத்தரவினை மத்திய அரசு பிறப்பிக்க போகிறதாம்.மருத்துவர்கள் பரிந்துரை இன்றி இனிமேல் இருமல் மருந்து வாங்க முடியாது, மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே இருமல் மருந்து வாங்க முடியும் என்ற கட்டுப்பாட்டினை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது..

தற்போது உள்ள விதிகளின்படி மருந்து விநியோகிப்பதற்கான உரிமம் இன்றி இருமல் மருந்தை விற்பனை செய்ய முடியும். இனி வரும் மாற்றங்களின்படி, மருந்து விற்பனை நிலையங்களில் மட்டுமே இனி இருமல் மருந்து விற்பனை செய்யப்படும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+