தமிழகத்தில் மீண்டும் உச்சத்தை நோக்கி கொரோனா பாதிப்பு.. சென்னை, கோவையின் நிலை சீரியஸ்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,728 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிவேமாக அதிகரித்து வருகிறது.
நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 1700-ஐ கடந்துள்ளது. சென்னையில் கொரோனா பரவல் வேகம் இரட்டிப்பாகி உள்ளது. இங்கு 876 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

அதிவேகமாக பரவும் கொரோனா
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டவது அலை அதிவேகமாக குறைந்து வந்தது. இதனால் அரசும், மக்களும் நிம்மதியாக இருந்த நிலையில் ஓமிக்ரான் வைரஸ் புகுந்த நேரத்தில் இருந்து தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,728 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்த உயிரிழப்பு
இதனால் மொத்த பாதிப்பு 27,52,856 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிப்பு அதிகமாக இருந்தாலும் கொரோனா உயிரிழப்பு குறைவாக பதிவாகி ஆறுதலை தருகிறது. சென்னையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கிருஷ்ணகிரியில் 2 பேர் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 36,796 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 662 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 27,05,696 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் மிக மிக குறைவாக இருக்கிறது.

சென்னையில் ஆதிக்கம்
10,634 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக்டிவ் கேஸ்கள் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் 1,02,898 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 5,68,12,969 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 876 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாபாதிப்பு இரட்டிப்பாகி வருகிறது. திருவள்ளூரிலும் தொற்று கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.

3 மாவட்டங்களில் சதம்
செங்கல்பட்டில் 158 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 105 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவையில் நீண்ட நாட்களுக்கு பிறகு பாதிப்பு 100-ஐ கடந்துள்ளது. காஞ்சிபுரத்தில் 38 பேருக்கும், மதுரையில் 19 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 47 பேருக்கும், திருவள்ளூரில் 80 பேருக்கும், திருச்சியில் 27 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 52 பேருக்கும், ஈரோட்டில் 40 பேருக்கும், சேலத்தில் 31 பேருக்கும், நாமக்கல்லில் 18 பேருக்கும், தஞ்சாவூரில் 17 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications