உலகம் முழுவதும் தீவிரமாக பரவும் கொரோனா - 23,45,21,223 பேர் பாதிப்பு - 47 லட்சம் பேர் மரணம்
உலகம் முழுவதும் ஒரே நாளில் 4,81,330 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 23,45,21,223 பேராக அதிகரித்துள்ளது.
சென்னை: உலகம் முழுவதும் ஒரே நாளில் 4,81,330 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 23,45,21,223 பேராக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 4,56,294 பேர் மீண்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் மொத்த எண்ணிக்கை 21,13,14,782 பேராக உயர்ந்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா கடந்த 2 ஆண்டுகளாக உலக மக்களை தன் பிடிக்குள் வைத்துள்ளது. கொரோனாவின் கோரப்பிடியில் 23 கோடி பேர் சிக்கியுள்ளனர். 47 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். பல நாடுகள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.

உலகம் முழுவதும் பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. பல கோடி மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. உலகம் முழுவதும் கொரோனாவால் ஒரே நாளில் 7,624 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனாவால் உலகம் முழுவதும் மொத்தம் 47,96,219 பேர் மரணமடைந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் 1,84,10,222 கோடி பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 88,961 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா முதல் அலையில் அதிகம் பாதிக்கப்பட்டது அமெரிக்காதான். இரண்டாம் அலையில் இந்தியா சிக்கியது. இந்த நிலையில் மூன்றாம் அலை பல நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது.
அமெரிக்காவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் ஒரே நாளில் 1,10,950 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மொத்தம் 4,43,11,452 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து 3,37,08,092 பேர் மீண்டுள்ளனர். அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவால் 1,722 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் மரணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 7,16,664 பேராக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் டெல்டா வைரஸ் காரணமாகவே கடந்த சில மாதங்களாக கொரோனா அதிகரித்து வருகிறது. அங்கு கொரோனாவினால் உயிரிழப்பு ஏற்படுவது மீண்டும் அதிகரித்துள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா தனது குடிமக்களில் 75சதவிகித மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. நோய்த் தொற்றால் எளிதில் பாதிக்கக்கூடிய 65 வயதைக் கடந்தவர்களுக்கும், நோய் எதிர்ப்புத் தன்மை குறைவாக உள்ளவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி எனப்படும் மூன்றாவது டோஸ் தடுப்பூசி போட அனுமதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் நாட்டின் பொது சுகாதாரத் தேவைகளுக்குச் சிறந்த சேவையை வழங்க முடியும் என அமெரிக்க நோய்த் தடுப்பு மையம் தெரிவித்திருந்தது. அதன் பொருட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மூன்றாவது தடுப்பூசியைப் செலுத்திக்கொண்டார்.
அமெரிக்காவில் முதல் கொரோனா அலையின்போது பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தைத் தாண்டியது இந்த நிலையில் மீண்டும் அமெரிக்காவில் கொரோனாவால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications