கொரோனா 3 வது அலை: மூட்டுக்கு மூட்டு வலி... தலை வலி அறிகுறி இதுதான்....செய்யவேண்டியது என்ன?
கொரோனா மூன்றாவது அலையின் அறிகுறிகள் எப்படி இருக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். கழுத்து வலி, மூட்டு வலி தலைவலி பாதிப்பு ஏற்பட்டாலோ பசியின்மை ஏற்பட்டாலோ, நிமோனியா அறிகுறிகள் வந்தாலோ கொரோனா தாக்க வாய்ப்புள்ளதாக சுகா
சென்னை: நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கமே முடியாத நிலையில் கொரோனா மூன்றாவது அலையின் பாதிப்பு பற்றி பலரும் பேச ஆரம்பித்து விட்டனர். டெல்டா கொரோனா வைரஸ் தாக்கியவர்களுக்கு காய்ச்சல், இருமல் வர வாய்ப்பு இல்லை என்று அதே நேரத்தில் மூட்டுக்களில் வலி, தலை வலி, முதுகுவலி, உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட வாய்ப்பு உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா டெல்டா வைரஸ் அதிக வீரிய கொண்டதாக இருக்கும் கூறியுள்ள மருத்துவர்கள் இது நேரடியாக நுரையீரலை பாதித்து நிமோனியாவை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளனர். சாதாரண பரிசோதனைகள் மூலம் கொரோனா நெகடிவ் என்றுதான் தெரியவரும் என்றும் ஸ்கேன், எக்ஸ்ரே பரிசோதனை மூலம் மட்டுமே நுரையீரல் பாதிப்பை கண்டு பிடிக்க முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வேகமாக பரவும் வைரஸ் நிமோனியாவல் ஏற்படும் சுவாசக் கோளாறை ஏற்படுத்தும் கடுமையான மூச்சுத்திணறலையும் ஏற்படுத்தும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். கொரோனா இரண்டாவது அலை பாதிப்பின் போது மொத்தம் 5 சதவிகித குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். கொரோனா 3வது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்று கூறப்பட்டது. எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா, கோவிட் -19 மூன்றாவது அலைகளின் போது குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை என தெரிவித்துள்ளார். குழந்தைகள் தொற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்பது உண்மைதான், ஆனால் கோவிட் 19ன் மூன்றாவது அலை பெரும்பாலும் குழந்தைகளை பாதிக்க வாய்ப்பில்லை என்று இந்தியன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் தெரிவித்திருந்தனர்.
டெல்டா கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க அதிக நெரிசலான இடங்களுக்கு செல்லாமல் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். வெளியில் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் இரட்டை மாஸ்க்குகளைப் பயன்படுத்தவேண்டும். அடிக்கடி சானிடைசர் கொண்டு கைகளைக் கழுவ வேண்டும். இருமும் போதும் தும்மும் போதும் முகத்தை மூடிக்கொள்ளவும். நெருக்கமாக இருப்பதை தவிர்க்க வேண்டும். மூன்றாவது அலையானது முதல், இரண்டாவது அலை அதிக பாதிப்பை ஏற்படுத்தும். நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுக்கும் இந்த தகவலைத் தெரிவிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications