சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தடுப்பூசி போட்டாதான் இனி கல்யாணத்திற்கு பெண் கிடைக்கும் போலயே - விளம்பரத்தால் கதிகலங்கும் இளைஞர்கள்

நல்ல அழகான படித்த வேலை பார்க்கும் பெண்ணுக்கு அழகான படித்த, அரசு வேலை செய்யும் மணமகன் தேவை என்ற விளம்பரங்களை வாடிக்கையாக பார்த்திருப்போம். ஆனால் கோவிஷீல்டு தடுப்பூசி போட்ட பெண்ணுக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி போட்ட மணமகன் தேவை

Google Oneindia Tamil News

சென்னை: திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயம் செய்யப்பட்டாலும் பலரது வாழ்க்கை பரிதாபகரமாகவே இருக்கிறது. பெண் கிடைக்காத பல ஆண்கள் அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டு அல்லல் படுகின்றனர். இப்போது கொரோனா வடிவத்தில் புதிதாக ஒரு சிக்கல் வந்துள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசி போட்ட பெண்ணுக்கு அதே கோவிஷீல்டு தடுப்பூசி போட்ட மணமகன் தேவை என்ற விளம்பரம்தான் ஆண்களை ஆடிப்போக வைத்துள்ளது.

Recommended Video

    பிரதமர் Modi சொன்ன மூக்கில் செலுத்தும் Nasal Vaccine எப்படி செயல்படும்? முழு தகவல்

    90 கிட்ஸ்கள் பலருக்கும் இன்னமும் திருமணம் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. 35 வயதை தாண்டியும் பெண் கிடைக்காமல் 'முதிர்கண்ணன்'களாகவே இருக்கின்றனர். என்னென்னவோ பரிகாரம் செய்து விட்டோம் பெண் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறதே என்று தினம் தினம் புலம்பிக்கொண்டிருக்கின்றனர்.

    மேட்ரிமேனியல் விளம்பரம், திருமண இணையதளங்களில் பதிவு செய்திருந்தாலும் சரியான பெண் கிடைக்கவில்லையே என்று ஏக்கத்தோடு காத்திருக்கின்றனர் திருமணமாகாத இளைஞர்கள்.

    கோவிஷீல்டு vs கோவாக்சின்.. எந்த தடுப்பூசி அதிக ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யும்..புதிய ஆய்வு முடிவுகள்கோவிஷீல்டு vs கோவாக்சின்.. எந்த தடுப்பூசி அதிக ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யும்..புதிய ஆய்வு முடிவுகள்

    திருமணத்தில் தடை

    திருமணத்தில் தடை

    பெண் பார்த்து நிச்சயம் செய்து திருமண நாளை எதிர்பார்த்து காத்திருந்த பலரையும் கொரோனா கொடுந்தொற்று காலம் குதறிப்போட்டு விட்டது. மண்டபம் இல்லாமல் கோவில் வாசலில் தாலிக்கட்டிக்கொண்டு வீட்டு வாசலில் விசேஷம் வைத்தவர்கள் பலர் இருக்கிறார். திருமணம் தடை பட்டதால் வெறுத்துப்போய் தவித்துக்கொண்டிருக்கின்றனர் சிலர்.

    என்னதான் பிரச்சினை

    என்னதான் பிரச்சினை

    செவ்வாய் தோஷம், நாகதோஷம், களத்திர தோஷம் என பல தோஷங்கள் இருந்தாலும் அதற்கேற்ப பரிகாரங்கள் செய்தும் பலருக்கும் பெண் கிடைக்காமல் போக காரணம் முன்னோர்கள் சாபமாகவும் இருக்கலாம் எனவே பித்ருக்களை சாந்தி செய்ய தர்ப்பணம் சரியாக கொடுக்க வேண்டும் என்று ஜோதிடர்கள் சொல்வதால் அதையும் செய்து விட்டு நல்ல பெண் கிடைக்க வேண்டும் என்றும் பல இளைஞர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

    ஜாதக பொருத்தம்

    ஜாதக பொருத்தம்

    ஆணுக்கும் பெண்ணுக்கும் பத்து பொருத்தம் பார்த்து திருமணம் செய்வதை விட ஜாதகம் பார்த்து திருமணம் செய்வதை விட உடலில் என்ன பிரச்சினை இருக்கிறது என்று மெடிக்கல் ரிப்போர்ட் பார்த்தும் ரத்த பரிசோதனை செய்தும் திருமணம் செய்ய வேண்டும் என்றும் கூறுவார்கள். பல மேட்ரிமோனியல் நிறுவனங்களில் பதிவு செய்யும் போது இந்த ரிப்போர்ட்களையும் கேட்க ஆரம்பித்து விட்டனர்.

    விளம்பரத்தில் இது புதுசு

    விளம்பரத்தில் இது புதுசு

    தற்போது புதிய வகை விளம்பரம் ஒன்று மணமகன் தேவை பகுதியில் வந்துள்ளது. அதுதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது எம்எஸ்சி கணிதம் படித்த சுய தொழில் செய்யும் இரண்டு டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி போட்ட பெண்ணுக்கு 28 வயது முதல் 30 வயதுக்குள் நன்கு படித்த, நகைச்சுவை உணர்வும், புத்தகம் வாசிக்கும் ஆர்வமும் கொண்ட கோவிஷீல்டு செலுத்திய மணமகன் தேவை என்ற விளம்பரம் தற்போது வைரலாக வலம் வருகிறது.

    எடிட் செய்யப்பட்டது

    எடிட் செய்யப்பட்டது

    பெரும் பரபரப்பை கிளப்பிய இந்த விளம்பரத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சசிதரூர் தடுப்பூசி போடப்பட்ட மணமகள் தடுப்பூசி போட்ட மணமகனை தேடுகிறார். இது தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் என்று கூறியுள்ளர். இந்த விளம்பரம் உண்மையில்லை என்று தற்போது தெரியவந்துள்ளது.

    கலக்கத்தில் 90 கிட்ஸ்

    கலக்கத்தில் 90 கிட்ஸ்

    மணமகன் தேவை விளம்பரம் உண்மையோ பொய்யோ, எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், நிலைமை இப்படியே நீடித்தால் எங்க நிலை என்னவாகிறது எங்க கல்யாண வாழ்க்கை கனவாகவே போய் விடுமோ என்று கலங்கித்தான் போயிருக்கின்றனர். இப்போதே முத்தின கத்திரிக்கா என்று பலரும் கிண்டலடிக்கின்றனர். கொரோனாவும் வகையாக வைத்து செய்கிறது எங்களுக்கும் எப்படியாவது கல்யாணம் நடக்க வேண்டும் என்று கடவுளை நினைத்து தினம் தினம் வேண்டிக் கொண்டுள்ளனர் 90 கிட்ஸ்.

    English summary
    In the matrimonial ad doing rounds on social media, a woman has demanded a groom who has been administered both doses of the Covishield vaccine.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X