திரையுலகில் சித்தார்த் பண்ணுன அட்டகாசம் தெரியாதா? மரியாதையா பேசுங்க.. சிஆர்பிஎப் வீரர் சீற்றம்!
சென்னை : கூட்டமே இல்லாத மதுரை விமான நிலையத்தில் எனது வயதான பெற்றோர்களை சிஆர்பிஎப் அதிகாரிகள் 20 நிமிடம் துன்புறுத்தியதாக நடிகர் சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸ்ஸிள் குற்றம் சாட்டியிருந்த நிலையில் இது தொடர்பாக சிஆர்பிஎப் வீரர் வெளியிட்டுள்ள வீடியோ வேகமாகப் பரவி வருகிறது.
நடிகர் சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸ்ஸில்," கூட்டமே இல்லாத மதுரை விமான நிலையத்தில் எனது வயதான பெற்றோர்களை சிஆர்பிஎப் அதிகாரிகள் 20 நிமிடம் துன்புறுத்தியதாகவும் என் பெற்றோர் கையில் இருக்கும் நாணயங்களை எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள்" என்று பதிவு செய்திருந்தார்.
மேலும் தொடர்ந்து ஹிந்தியில் பேசியதால் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று கூறியும் அவர்கள் தொடர்ந்து ஹிந்தியில் பேசினார்கள் என்றும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவில் இப்படித்தான் இருக்கும் என்றும் தெரிவித்தார்கள் என்றும் "வேலை இல்லாதவர்கள் எல்லாம் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்" என்றும் மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

நடிகர் சித்தார்த்
இதனால் மீண்டும் இந்தி திணிப்பு குறித்த விவகாரம் பெரிதானது. இந்நிலையில் நடிகர் சித்தார்த்துக்கு பதிலளிக்கும் வகையில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் பேசியுள்ளார். அதில்," சித்தார்த் அவர்களே..நீங்கள் மதுரை விமான நிலையத்தில் உங்கள் பெற்றோரை இந்தியில் பேச வேண்டும் என சிஆர்பிஎப் வீரர்கள் துன்புறுத்தியதாகச் சொல்லியிருக்கீங்க. முதலில் எங்களை ஆங்கிலத்தில் பேச வேண்டுமென சொல்வதற்கு நீங்க யாரு.. ஒரு இந்தியாவின் துணை ராணுவ படையை ஆங்கிலத்தில் பேச சொல்வதற்கு நீ யார்.. நாங்கள் என்ன பிரிட்டிஷ்காரர்களா அல்லது வெள்ளைக்காரர்களா. இந்திய மொழிகளில் ஏதாவது ஒரு மொழியை பேச சொல்லுங்கள் நாங்கள் பேசுகிறோம்..

சிஆர்பிஎப் வீரர்
அங்கே ஏதாவது ஒரு அதிகாரி தமிழ் காரர் இருந்திருப்பார். அவரை கூப்பிட்டு தமிழில் பேச சொல்லி இருக்கலாம் இல்லை.. தெலுங்கு தெரியும் என்றால் தெலுங்கு காரங்க இருப்பாங்க.. நீங்க எப்படி ஆங்கிலத்தில் பேசுங்கள் என சொல்லலாம் நாங்கள் என்ன வெள்ளைக்காரர்களா.. வெள்ளைக்காரர்களே இந்தி தான் இங்கு வந்து கற்றுக் கொண்டிருக்கிறார்கள். உன்னை நாங்க துன்புறுத்திட்டோமா.. இன்னொரு பதிவும் போட்டு இருந்த எங்கள் பெற்றோர் பையில் சில்லறை காசு இருந்தது என சொல்லி இருக்கிறீர்கள். சில்லறை காசை எடுங்க எந்த மொழியில் சொன்னாங்க,,

அட்டகாசம்
அதை எப்படி நீ புரிஞ்சுகிட்ட.. சைகைலா சொன்னாங்களா.. நீ எப்படி புரிஞ்சிகிட்ட அத சொல்லு பர்ஸ்ட்.. வேலையில்லாதவர்கள் ரொம்ப துன்புறுத்துறாங்கன்னு சொல்லி இருக்க.. நீ ரொம்ப வேலையில் இருக்கியா. திரையுலகில் நீ என்னென்ன அட்டகாசம் பண்ணியிருக்கேன்னு யாருக்கும் தெரியாதா.. ட்யூட்டி பார்ப்பவர்களை கண்ணியமாக பேச வேண்டும் என்பதை முதலில் கற்றுக்கொள்.. அது அவர்கள் வேலை அரை மணி நேரம் அல்ல இரண்டு மணி நேரம் நாலும் நிக்கணும்.. சந்தேகத்தில் நிக்க வச்சா நின்னு தான் ஆகணும் எங்க ஒரு நிமிஷம் அங்க இருந்து நகர்ந்து பாரு.

நாங்க பவர்
ஏன்னா டூட்டி பார்க்கிற இடத்துல நாங்க பவர். எதற்கெடுத்தாலும் கூழ கும்பிட்டு போற அரசியல்வாதி என்று நினைத்தாயா,, எங்கள எதுக்கெடுத்தாலும் சரி சார் ஓகே சார் சொல்றதுக்கு.. டிபார்ட்மெண்ட் பவர் என்றால் என்னென்ன முதலில் புரிந்துகொள்.. உங்க பெற்றோர் மட்டும் கிடையாது டிபார்ட்மெண்டில் இருக்கும் வீரர்களோட பெத்தவங்க வந்தாலும் கூட அவங்க கடமையை முடித்து தான் ஆவாங்க.. அதே மாதிரி ஆங்கிலத்தில் பேச சொல்வதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.. இந்தி தெரியலன்னு வெட்கப்பட்டு சொல்லிட்டு போ இந்தி கத்துக்கல சார் இந்தி தெரியாது சார்..

ஆங்கிலம் தெரியாது
ஆங்கிலம் தெரியாது என்று சொல்வதற்கு நாங்க வெட்கப்படணும்னு அவசியம் கிடையாது.. அதை படிக்கணும்னு அவசியமும் கிடையாது.. அலுவல் மொழி இந்தி இருக்கு நாங்க அத கத்துகிறோம்.. தமிழ் தெரியும். தெலுங்கு காரங்க கிட்ட தெலுங்கு பேசுவோம். மலையாளக்காரங்ககிட்ட மலையாளம் பேசுவோம்.. நீ தான் வெளியூர்ல வெள்ளைக்காரங்க கூட சுத்துறவன் அதனால் உனக்கு தான் ஆங்கிலம் தெரியணும்.. வார்த்தையை பார்த்து யூஸ் பண்ணுங்க ஜெய்ஹிந்த்" என அந்த வீடியோவில் பேசியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இவர் விசிக தலைவர் திருமாவளவன் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications