மெடிக்கல்லில் அலறல் சத்தம்.. துடிதுடித்து போன இளம்பெண்.. அப்படியே ஜம்ப் பண்ணி ஓடிய போலி மருத்துவர்
சென்னை: கடலூர் மாவட்டத்தில் உள்ள பிரபல மெடிக்கல்லில் நடைபெற்ற சம்பவம் ஒன்று அப்பகுதி மக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள கச்சிமைலூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் (வயது 50) இவர் ராமநத்தத்தில் வீட்டை வாடகைக்கு எடுத்து ஓம்சக்தி என்ற பெயரில் மெடிக்கல் நடத்தி வருகின்றார். இவர் மருத்துவம் படிக்கவில்லை என்றாலும் தன்னையே மருத்துவர் என்று பொய்யாக அழைத்து வருகிறார்.

மருத்துவம் பார்ப்பார்
இவர் தலைவலி, காய்ச்சல் என்று வருபவர்களுக்கு வைத்தியம் பார்த்து வந்துள்ளார். அது மட்டும் இல்லாமல் கருக்கலைப்பு சிகிச்சையும் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுக்கா மேட்டுபாளையம் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் மற்றும் அவரது மனைவி அனிதா (வயது 27) இவரிடம் சிகிச்சை பெற வந்துள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

கருக்கலைப்பு
இந்த நிலையில் மூன்றாவதாக அனிதா கர்பம் அடைந்து உள்ளார் .இதனால் அனிதாவின் வயிற்றில் வளரும் குழந்தையை கருக்கலைப்பு செய்ய நினைத்து ராமநத்தத்தில் உள்ள முருகனின் மெடிக்கலுக்கு கரு கலைப்பு செய்வதற்கு வந்துள்ளனர்.முருகன் மெடிக்கல் பக்கத்தில் இதற்கு என்று தனியாக வைத்துள்ள அறைக்கு அனிதாவை அழைத்து சென்று கருகலைப்பு சிகிச்சை அளித்துள்ளார். இதில் அனிதா மயக்கம் அடைந்துள்ளார்.

அலறல்
செய்ய தெரியாமல் கருக்கலைப்பு செய்ததில் அனிதா அலறி துடித்து கத்தி இருக்கிறார். அதன்பின் அனிதாவிற்க்கு மாலை வரை மயக்கம் தெளியாமல் இருந்துள்ளது. மேலும் இரத்த போக்கு அதிகரித்துள்ளது. இதனால் அந்த பெண் வலியில் துடித்து இருக்கிறார். இதனை அடுத்து முருகன் அனிதாவையும் அவரது கணவரையும் தனது காரில் ஏற்றிக் கொண்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார்.

முருகன் தலைமறைவு
மருத்துவமனையின் உள்ளே அனிதா மற்றும் அவரது கணவர் இருவரையும் அனுப்பி வைத்து விட்டு முருகன் அங்கிருந்து, சுவர் எகிறி குதித்து தனது காரில் தப்பிச் சென்றுள்ளார். அனிதாவை அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து அங்குள்ள மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி அனிதா உயிரிழந்துள்ளார். இதனை அறிந்து அங்கு வந்த ராமநத்தம் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவான போலி மருத்துவர் முருகனை தேடி வருகின்றனர்
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications