Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிவசங்கர்பாபாவிற்கு 17 வரை காவல் நீட்டிப்பு...முழங்காலிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஆதரவாளர்கள்

சிவசங்கர் பாபாவுக்கு மேலும் 15 நாள் நீதிமன்ற காவலை நீட்டித்து வரும் 17ஆம் தேதி வரை அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு: மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட சிவசங்கர்பாபாவின் நீதிமன்ற காவல் செப்டம்பர் 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சிவசங்கர்பாபாவை விடுதலை செய்யக்கோரி நீதிமன்ற வாசலில் பாபாவின் ஆதரவாளர்கள் முழுங்காலிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Recommended Video

    சிவசங்கர் பாபா நல்லவர்.. அவரை விட்டுருங்க.. நீதிமன்றத்திற்கு வெளியே முட்டி போட்டு பக்தர்கள் அழுகை

    செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் இயங்கி வரும் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவசங்கர் பாபா தலைமறைவானார். சிவசங்கர்பாபா வெளிநாடு தப்பிக்காமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக்அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

    சிவசங்கர் பாபா கைது

    சிவசங்கர் பாபா கைது

    டெல்லியில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபாவை கடந்த ஜூன் 16ஆம் தேதி சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சிவசங்கர் பாபா. தற்போதுவரை சிவசங்கர் பாபா மீது 3 வழக்குகள் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

    ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

    கைதுக்குப் பிறகு சிவசங்கர் பாபாவுக்கு இருமுறை நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதனை சுட்டிக் காட்டி அவருக்கு ஜாமீன் கோரி வருகிறது சிவசங்கர் பாபா தரப்பு. இருப்பினும் சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது.

    குற்றப்பத்திரிக்கை தாக்கல்

    குற்றப்பத்திரிக்கை தாக்கல்

    இந்த நிலையில் கடந்த மாதம் 14ஆம் தேதி சிபிசிஐடி போலீசார் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். 40 சாட்சியங்களின் அடிப்படையில் இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியரான பாரதி சீனிவாசன், நடன ஆசிரியர் சுஷ்மிதா, தீபா ஆகிய 3 பேர் பெயரும் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது.

    கட்டாய பாலியல் கொடுமை

    கட்டாய பாலியல் கொடுமை

    இதனிடையே பள்ளி மாணவிகளை வலுக்கட்டாயமாக அழைத்து சிவசங்கர் பாபா வன்கொடுமை செய்ததாக சிபிசிஐடி நடத்திய விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. சுஷில் ஹரி பள்ளியில் 2011, 2012 ,2013 படித்த மாணவர்களை வலுக்கட்டாயமாக வன்கொடுமை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    மூன்றாவது வழக்கில் குற்றப்பத்திரிக்கை

    மூன்றாவது வழக்கில் குற்றப்பத்திரிக்கை

    சிவசங்கர் பாபாவுக்கு எதிராக இரண்டாவது குற்றப்பத்திரிக்கை தயாராகிவிட்டதாக சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா மீது சில நாட்களில் இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. மூன்றாவது போக்சோ வழக்கில் குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணியில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    2 பிள்ளைகளுக்கு தகப்பன்

    2 பிள்ளைகளுக்கு தகப்பன்

    சமீபத்தில் அவர் அளித்துள்ள ஜாமீன் மனுவில் தான் ஒரு ஆண்மையற்றவன் என்பதால் யாரையும் பாலியல் வன்கொடுமை செய்யவில்லை என்று சிவசங்கர் பாபா கூறியுள்ளார். சென்னை அரசு மருத்துவமனையில் தனக்கு மேற்கொண்ட ஆண்மை பரிசோதனையில் தனக்கு ஆண்மை இல்லை என முடிவு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் சிவசங்கர் பாபா ஆன்மீகப் பணிக்கு வருவதற்கு முன்பாக அவருக்கு திருமணமாகி மகன், மகள் இருக்கின்றனர்.

    மாணவியின் தாயாருக்கு தொந்தரவு

    மாணவியின் தாயாருக்கு தொந்தரவு

    இந்த சூழ்நிலையில் சுஷில் ஹரி பள்ளியில் படித்த முன்னாள் மாணவி அளித்த புகாரின் பேரில் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெங்களூருவைச் சேர்ந்த முன்னாள் மாணவியின் தாய் ஒருவர் அளித்த புகாரின் பேரில் மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் மாணவியின் தாய்க்கு சிவசங்கர் பாபா பாலியல் தொந்தரவு அளித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    15 நாட்கள் சிறை

    15 நாட்கள் சிறை

    சிவசங்கர் பாபா மீது இருக்கும் 3 போக்சோ வழக்குகளில் நீதிமன்ற காவல் முடிவடைந்த காரணத்தால் புழல் சிறையில் இருக்கும் அவர் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி அம்பிகா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். சிவசங்கர் பாபாவுக்கு மேலும் 15 நாள் நீதிமன்ற காவலை நீட்டித்து வரும் 17ஆம் தேதி வரை அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    முழங்காலிட்டு போராட்டம்

    முழங்காலிட்டு போராட்டம்

    சிவசங்கர் பாபாவை பார்த்து அவரது பக்தர்கள் அவர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு உள்ளதாகவும், அவரை விடுதலை செய்யக்கோரியும் முழங்காலிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அனைவரையும் அப்புறப்படுத்திய காவலர்கள் சிவசங்கர் பாபாவை சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+