சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வர்தாவுக்கு சற்றும் சளைக்காத புயல்.. மிரட்டி விட்டு கிளம்பிச் சென்ற கஜா!

Google Oneindia Tamil News

Recommended Video

    மிரட்டி விட்டு கிளம்பிச் சென்ற கஜா!- தமிழ்நாடு வெதர்மேன்- வீடியோ

    சென்னை: வர்தா புயலுக்கு சற்றும் சளைக்காத வகையில் உலுக்கி எடுத்து விட்டுப் போயிருக்கிறது கஜா புயல் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

    தமிழகத்தை மிரட்டிய புயல்களில் முக்கிய இடத்தைப் பிடித்து விட்டது கஜா. இந்தப் புயல் உருவானது முதலே தமிழகம் பரபரப்பாகிப் போனது.

    தமிழகத்தை சமீப ஆண்டுகளில் மிரட்டிய புயல் என்றால் அது வர்தா தான். வர்தா புயலின்போது மிகப் பலத்த காற்றை தமிழகம் சந்தித்தது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் சந்தித்தன.

    12,000 மின் கம்பங்கள் சேதம்.. 2 நாட்களுக்கு மின்சாரம் இருக்காது.. மக்களுக்கு ஷாக் செய்தி 12,000 மின் கம்பங்கள் சேதம்.. 2 நாட்களுக்கு மின்சாரம் இருக்காது.. மக்களுக்கு ஷாக் செய்தி

    வர்தாவும், கஜாவும் ஒன்றே

    வர்தாவும், கஜாவும் ஒன்றே

    அதே அளவிலான பாதிப்பை தற்போது கஜா புயலும் ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறுகிறார். இதுதொடர்பான ஒரு ஒப்பீட்டையும் அவர் போட்டுள்ளார்.

    அதிராம்பட்டினத்தில் பேயாட்டம்

    அதிராம்பட்டினத்தில் பேயாட்டம்

    கஜா புயலானது அதிராம்பட்டினத்தில் அதிகபட்சமாக மணிக்கு 111 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக் காற்றைக் கொடுத்து அந்தப் பகுதியை சூறையாடியுள்ளது. அதேபோல நாகப்பட்டனத்தில் மணிக்கு 100 கிலோமீட்டர், காரைக்காலில் மணிக்கு 92 கிலோமீட்டர் வேகம் என தாண்டவமாடியுள்ளது கஜா.

    வர்தாவின் தாண்டவம்

    வர்தாவின் தாண்டவம்

    வர்தா புயலும் கிட்டத்தட்ட இதே அளவில்தான் இருந்தது. ஆனால் மீனம்பாக்கத்தில் அது மணிக்கு 122 கிலோமீட்டர் வேகத்தில் மிக பலத்த பேய்க்காற்றாக மாறி உலுக்கி எடுத்து விட்டது.

    பீதி ஏற்படுத்திய புயல்

    பீதி ஏற்படுத்திய புயல்

    அதேபோல நுங்கம்பாக்கத்தில் மணிக்கு 114, எண்ணூரில் 89 கிலோமீட்டர் வேகம் அப்போது காற்றின் வேகம் பதிவாகியிருந்தது. எப்படியோ தமிழகத்தை உலுக்கி எடுத்த கஜா புயல் ஒரு வழியாக கரையைக் கடந்திருப்பது அனைவரையும் நிம்மதி அடைய வைத்துள்ளது.

    English summary
    Cyclone Gaja has registered a record wind speed in Athirampattinam and Nagapattinam. Which is not lesser than Cyclone Vardah.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X