சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கரையைக் கடந்த புயல் நீடிக்கும் கனமழை..பள்ளி கல்லூரிகளுக்கு இன்று எங்கெங்கு லீவு தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, திருப்பத்தவேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், நீலகிரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயலால் இன்றும், நாளையும் தமிழகம் முழுவதும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மாவட்டத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் சென்னையை பொறுத்தவரை நேற்று முன்தினம் முதல் நேற்று இரவு வரை விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது.

Cyclone Mandous: Schools and colleges diclares holidays due to heavy rain

இந்நிலையில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் இரண்டாவது நாளாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி வெளியிட்ட அறிவிப்பில், "கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல திருவள்ளூர் மாவட்டம், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

சென்னை, திருவள்ளூர், கடலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, திருப்பத்தவேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், நீலகிரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல், சிறுமலை பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொடைக்கானல், சிறுமலை பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

English summary
Schools and colleges in Chennai, Kanchi, Chengalpattu and Tiruvallur districts have been declared holiday for the second day following the heavy rain warning. The Meteorological Department has warned that heavy rains will occur across Tamil Nadu today and tomorrow due to Cyclone Mandus. Especially Chennai, Kanchipuram, Chengalpattu and Chennai districts are likely to receive heavy rainfall. At the same time, for Chennai, it started raining from the day before yesterday till last night.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X