மாண்டஸ் புயல் கரையை கடக்கும் நேரம், இப்போ எங்கே இருக்குன்னு தெரிஞ்சிக்கனுமா.. இதோ சூப்பர் வசதி!
சென்னை: புயல் எங்கு உள்ளது.. புயல் எப்போது கரையைக் கடக்கும் என்ற விவரங்கள் போன்றவற்றை மக்களே எளிதாக அறிந்து கொள்ளும் வசதிகளும் வந்து விட்டன. அந்த வகையில் ...என்ற இணையதளத்தில் மக்களே புயல் பற்றிய விவரங்களை பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. பருவமழை தொடக்கத்தில் நல்ல மழை பெய்தது.
அதன்பிறகு மழை குறைந்து பனிப்பொழிவு அதிகரித்தது. வறண்ட வானிலையும் நிலவியது.

காற்றழுத்த தாழ்வு நிலை
மழைக்காலத்தில் இப்படி மாறுபட்ட சூழல் நிலவுகிறதே...மழை அடுத்து எப்போது வரும் என்று மக்கள் பேசிக்கொள்ளும் அளவுக்கு மாறியிருந்தது. குறிப்பாக சென்னையில் அதிகாலை நேரங்களில் கடும் பனிப்பொழிவு இருந்தது. தென் மாவட்டங்களிலும் இதே நிலைதான் இருந்தது. இந்த நிலையில், கடந்த 5 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டது.

புயலின் வேகம்
அதன்படியே காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியது. மாண்டஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் இன்று நள்ளிரவு மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்க உள்ளது. இந்தப் புயலினால் தமிழக வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.புயல் கரையக் கடக்கும் போது பலத்த சூறைக்காற்றும் வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலின் நகரும் வேகம் மணிக்கு 15 கிலோ மீட்டரிலிருந்து 12 கிலோ மீட்டராக குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் எப்போது கரையை கடக்கும்
இந்த புயல் வலு குறைந்து மாமல்லபுரம் அருகே இன்று இரவு கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் குறித்த செய்திகள் மக்கள் உன்னிப்பாக கவனித்து வரும் நிலையில், புயல் தற்போது எங்கே உள்ளது. அது எப்போது கரையைக் கடக்கும் என்ற தகவல்களை மக்களே நேரடியாக கூட பார்த்து அறிந்து கொள்ளலாம். அதாவது windy என்ற இணையதளத்தில் புயல் இருக்கும் இடம் அது எப்போது கரையைக் கடக்கும் என்ற தகவல்கள் காற்று செல்லும் திசை ஆகியவற்றை அனைவரும் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. நீங்கள் நேரத்தை கிளிக் செய்தால் அப்போது புயல் எங்கே இருக்கும் என்ற விவரத்தை அறிந்து கொள்ள முடியும்.

மக்களுக்கு புரியும் வகையில்..
இந்த இணையதளத்தில் காற்றின் திசை, அது எங்கே திரும்பி செல்கிறது.. போன்ற விவரங்கள் அனைத்தும் அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. வழக்கமாக புயல் என்றாலே மக்கள் மனதில் ஒரு பதற்றம் ஏற்படும். ஏனென்றால் அது ஏற்படுத்தி செல்லும் சேதம் ஆகியவையே மக்களின் பதற்றத்திற்கு காரணமாக உள்ளது. அதற்காக வாட்ஸ் அப்பில் பரவும் வதந்திகளையும் உண்மைக்கு மாறான தகவல்களையும் மக்கள் நம்பி விடவும் செய்கின்றனர்.

உண்மை நிலவரங்கள்
அதற்குபதிலாக இதுபோன்ற இணையதளங்களில் கூட நேரடியாக மக்கள் புயல் குறித்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம். அல்லது. செய்தி இணையதளங்களும் உடனுக்கு உடன் உண்மையான தகவல்களை அளித்து வருகின்றன. இதையும் பார்த்து புயல் குறித்த உண்மை நிலவரங்களை அறிந்து கொள்ளலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications