போய் வாருங்கள் அப்பா.. குமரி அனந்தன் மறைவுக்கு தமிழிசை சவுந்தரராஜன் கண்ணீர் அஞ்சலி
சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் இன்று காலமானார். இசை இசை என்று கூப்பிடும் என் அப்பாவின் குரல் இன்று காற்றில் இசையோடு கலந்துவிட்டது.. போய் வாருங்கள் அப்பா என்று குமரி அனந்தன் மறைவுக்கு தமிழிசை சவுந்தரராஜன் கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் காலமானார். அவருக்கு வயது 93. பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையும், மறைந்த எம்பி வசந்தகுமாரின் அண்ணனுமான குமரி ஆனந்தன் வயது மூப்பு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார்.

இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குமரி அனந்தன் உயிரிழந்தார். தந்தையின் மறைவுக்கு தமிழிசை சவுந்தராராஜன் கண்ணீர் அஞ்சலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழிசை கூறியிருப்பதாவது:-
தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை... தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன் என்று.... பெருமையாக பேச வைத்த என் தந்தை திரு.குமரி அனந்தன் அவர்கள்... இன்று என் அம்மாவோடு.. இரண்டர கலந்து விட்டார்... குமரியில்.. ஒரு கிராமத்தில் பிறந்து.. தன் முழு முயற்சியினால்... அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக... தமிழ் மீது.. தீராத பற்று கொண்டு... தமிழிசை என்ற பெயர் வைத்து...
இசை இசை... என்று கூப்பிடும் என் அப்பாவின்... கணீர் குரல்... இன்று காற்றில்.. இசையோடு கலந்து விட்டது.... வாழ்க்கை இப்படித்தான் வாழ வேண்டும் என்று... சீரான வாழ்க்கை வாழ்ந்தவர்... இன்று தான் வளர்த்தவர்கள் எல்லாம்... சீராக வாழ்வதைக் கண்டு... பெருமைப்பட்டு.. வாழ்த்திவிட்டு.. எங்களை விட்டு மறைந்திருக்கிறார்...
என்றும். .. அவர் பெயர் நிலைத்திருக்கும். தமிழக அரசியலில்.. பாராளுமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசியவர் இன்று தமிழோடு காற்றில் கலந்துவிட்டார் என்று சொல்ல வேண்டும்.... மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா... நீங்கள் மக்களுக்கு என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தீர்களோ... அதை மனதில் கொண்டு... உங்கள் பெயரில்... நாங்கள் செய்வோம் என்று... உறுதியோடு... உங்களை வழி அனுப்புகிறோம்...
உங்கள் வழி உங்கள் வழியில்...... நீங்கள் எப்பொழுதும் சொல்வதைப் போல... நாமும் மகிழ்ச்சியாக இருந்து.. மற்றவர்களின் மகிழ்விக்க வேண்டும்.. என்று உங்கள் ஆசை ஆசையை.. எப்போதும் நிறைவேற்றுவோம்... போய் வாருங்கள் அப்பா தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன்... நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்.... இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
காங்கிரஸுடன் மொத்தமாக ஐக்கியமாகும் திரிணாமுல்.. உட்கட்சி பூசலை சமாளிக்க மம்தா அதிரடி? என்ன நடக்கிறது -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை












Click it and Unblock the Notifications