புறக்கணித்த மகன்கள்.. வேறு வழியில்லை.. 4 கி.மீ தாய் உடலை சுமந்து சென்று இறுதிச் சடங்கு செய்த மகள்கள்
சென்னை: தாயின் இறுதிச் சடங்குக்கு அவருடைய மகன்கள் வராததால், அவருடைய நான்கு மகள்களும் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் தாயின் சடலத்தை தோளில் சுமந்து சென்று இறுதிச் சடங்குகள் செய்த சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது.
ஒடிசா மாநிலம் பூரி நகரில் இருக்கிறது மங்கல்காட் பகுதி. இப்பகுதியில் ஜதி நாயக் என்ற 80 வயதான மூதாட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார். மூதாட்டிக்கு இரு மகன்கள், மற்றும் 4 மகள்கள் உள்ளனர்.

உயிரிழந்த மூதாட்டி
தன்னுடைய பிள்ளைகள் ஆறு பேருக்கும் சிறப்பாகத் திருமணம் செய்துவைத்தார் ஜதி நாயக். நான்கு மகள்களும் அவர்களது கணவன் வீட்டில் வசித்து வருகின்றனர். மகன்களும் அவர்களது மனைவிகளுடன் வசித்து வருகின்றனர். இதனால் ஜதி நாயக் ஒடிசாவில் தனியாக வசித்து வருகின்றார். இரு மகன்களும் பல வருடங்களாகத் தாயைப் பராமரிக்காமல் வந்துள்ளனர். இந்நிலையில், வயது மூப்பின் காரணமாக மூதாட்டி ஜதி நாயக் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

வராத மகன்கள்
தாயார் உயிரிழந்தத் தகவலை, அவருடைய மகன்களுக்கு அக்கம் பக்கத்தினர் தெரியப்படுத்தினர். ஆனாலும் தாயின் இறப்புக்கு இரு மகன்களும் கடைசி வரை வரவில்லை. இரு மகன்களும் இறுதிச் சடங்கை புறக்கணித்ததையடுத்து, ஜதி நாயக்கின் நான்கு மகள்களும் தாங்களே தாயின் இறுதிச்சடங்கை நடத்த முடிவு செய்தனர். தங்கள் முன் இருந்த அத்தனைக் கலாசார தடையை உடைத்து தங்கள் தாயைத் தகனம் செய்ய தயாரானார்கள்.

இறுதிச் சடங்கு செய்த மகள்கள்
சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த மகள்களால், தகனம் செய்யும் இடத்துக்கு தாயின் உடலை வண்டியில் கொண்டு செல்ல முடியாத நிலை. எனவே, தாங்களே தாயின் உடலை தகனத்திற்கு எடுத்துச் செல்ல தேவையான பாடையைத் தயார் செய்திருக்கிறார்கள். அவர்களின் வீட்டிலிருந்து தகனம் செய்யும் இடம் நான்கு கிலோமீட்டர். தாயின் உடலைத் தோளில் சுமந்துகொண்டு 4 கிலோமீட்டர் நடந்தே தகனம் செய்யும் மைதானத்தை அடைந்தார்கள். அதன்பிறகு தங்கள் தாய்க்கு தாங்களே இறுதிச் சடங்குகளைச் செய்துள்ளனர்.

நீதான் மகன்
ஜதி நாயக்கின் மருமகன்களில் ஒருவரிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் இந்த சம்பவம் குறித்துக் கேட்கையில், சில நாட்களுக்கு முன்பு ஜதி நாயக், எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது என்னிடம், "நீ என் மூத்த மகன், என் இரண்டு மகன்களில் யாருமே என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை" என்று கூறியிருக்கிறார். மகன்கள் வராததால் மகள்களே, நான்கு கிலோமீட்டர் சுமந்துவந்து தாய்க்கு இறுதிச்சடங்கு செய்த சம்பவம் ஒடிசாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications