சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டிச.18 - மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்களை அணி திரட்டும் ஸ்டாலின்! டெல்லிக்கு ஸ்ட்ராங் மெசேஜ்!

Google Oneindia Tamil News

சென்னை: பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி டிசம்பர் 18ஆம் தேதி அன்று மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்களை அழைத்து சென்னையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்துகிறார் ஸ்டாலின்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றே கால் ஆண்டு மட்டுமே உள்ள நிலையில் இந்தப் பொதுக்கூட்டம் மூலம் டெல்லிக்கு ஸ்ட்ராங்க் மெசேஜ் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகாதா என பாஜக எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் அதற்கு வாய்ப்பில்லை என்பது போல் இந்தக் கூட்டத்தை முன்னெடுத்திருக்கிறார் ஸ்டாலின்.

இதனிடையே திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அன்பழகன் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான தீர்மான விவரம் வருமாறு;

பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா! டிச.15ஆம் தேதி தமிழகம் முழுவதும் 100 திமுக பொதுக்கூட்டங்கள்! பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா! டிச.15ஆம் தேதி தமிழகம் முழுவதும் 100 திமுக பொதுக்கூட்டங்கள்!

முதலில் நான் மனிதன்

முதலில் நான் மனிதன்

"முதலில் நான் மனிதன், இரண்டாவது நான் அன்பழகன், மூன்றாவது நான் சுயமரியாதைக்காரன், நான்காவது நான் பேரறிஞர் அண்ணாவின் தம்பி, ஐந்தாவது கலைஞரின் தோழன். இந்த உணர்வுகள் என் உயிர் உள்ளவரை என்னோடு இருக்கும்" என்று தன்னை முன்மொழிந்து கொண்டு, அதன்படியே வாழ்ந்து, கொள்கையுணர்வு மறையாமல் நம் நெஞ்சில் நிலைத்து, நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர் இனமானப் பேராசிரியர்.''

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி

''சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் டிசம்பர்-17 (சனிக்கிழமை) அன்று பேராசிரியர் பெருந்தகை அவர்களின் பொது வாழ்வைப் போற்றிடும் கவியரங்கம் நடைபெறும். டிசம்பர்-18 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வடசென்னையில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெறும்.''

கிளை டூ மாவட்டம்

கிளை டூ மாவட்டம்

''இனமானப் பேராசிரியர் அவர்களின் பிறந்த நாளான 19-12-2022 (திங்கட்கிழமை) அன்று மாவட்ட - ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் - கிளைக் கழகங்களின் சார்பிலும், துணை அமைப்புகளான அணிகள் சார்பிலும் இனமானப் பேராசிரியரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்திடவும் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.''

புகழ் வணக்கம்

புகழ் வணக்கம்

''தமிழ்நாடு - புதுச்சேரி மாநிலங்களில் மட்டுமின்றி கழக அமைப்புகள் உள்ள மாநிலங்கள் அனைத்திலும், கழக உணர்வாளர்கள் உள்ள இடங்கள் தோறும், இல்லங்கள் தோறும் இனமானப் பேராசிரியர் பெருந்தகையின் புகழ் ஒளி பரவிடச் செய்வோம். அந்த நன்னாளில் நாடெங்கும் முழங்கட்டும் திராவிடக் கொள்கை முரசம்.''

English summary
On December 18, on the occasion of Professor Anbazhagan centenary, Stalin invited the leaders of the Secular Progressive Alliance to hold a grand public meeting in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X