காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது... எங்கெங்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு
தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி குமரிக்கடல் பகுதிவரை நீடிப்பதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி குமரிக்கடல் பகுதிவரை நீடிப்பதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
Recommended Video
தெற்கு தாய்லாந்து மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது இன்று மாலை தெற்கு அந்தமான் கடற்பகுதிக்கு நகரக்கூடும், இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 2 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அதனை அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெற்று 4 ஆம் தேதி வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்பகுதியை நெருங்கக்கூடும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.
தென் மாவட்டங்களில் விடிய விடிய மழை கொட்டித்தீர்த்தது. கடந்த 24 மணி நேரத்தில் தேனி மாவட்டம் வீரபாண்டியில் 12 செமீ மழை பதிவாகியுள்ளது. திருப்புவனம் (சிவகங்கை), பாபநாசம் (திருநெல்வேலி), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), காயல்பட்டினம் (தூத்துக்குடி) தலா 9 செமீ மழை பதிவாகியுள்ளது. மணிமுத்தாறு (திருநெல்வேலி), பரமக்குடி (ராமநாதபுரம்), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), மண்டபம் (ராமநாதபுரம்), ஆய்க்குடி (தென்காசி) தலா 8, கோவிலங்குளம் (விருதுநகர்), மதுரை விமான நிலையம் (மதுரை), சிவகாசி (விருதுநகர்), ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), தனியமங்கலம் (மதுரை) தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது. வாலிநோக்கம் (ராமநாதபுரம்), உத்தமபாளையம் (தேனி), ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்), சோழவரம் (திருவள்ளூர்), உசிலம்பட்டி (மதுரை), மதுராந்தகம் (செங்கல்பட்டு), கயத்தாறு (தூத்துக்குடி), வத்திராயிருப்பு (விருதுநகர்),), சேரன்மகாதேவி (திருநெல்வேலி), திருவாடானை (இராமநாதபுரம்), காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை), கூடலூர் (தேனி), தென்காசி (தென்காசி) தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளது.

மிதமான மழை
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய தினம் திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

டிசம்பர் 04 வரை மழை
நாளைய தினம் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். டிசம்பர் 2,3ஆம்தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிசம்பர் 4ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மிதமான மழை
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு. நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.. அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மீனவர்கள் கவனம்
வங்க கடல் பகுதிகளில் இன்று தெற்கு தாய்லாந்து மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது இன்று மாலை தெற்கு அந்தமான் கடற் பகுதிக்கு நகரக்கூடும், இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 2 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அதனை அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெற்று 4 ஆம் தேதி வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்பகுதியை நெருங்கக்கூடும்.

பலத்த காற்று வீசும்
இதன் காரணமாக இன்று தெற்கு அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நாளைய தினம் அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நாளை மறுநாள் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் பேசக்கூடும். 03 ஆம் தேதியன்று மத்திய வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் பேசக்கூடும். 4 ஆம் தேதியன்று மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காற்றழுத்த தாழ்வுப்பகுதி
தற்போது மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மகாராஷ்டிரா - கோவா கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். இதன் காரணமாக இன்றும் நாளையும் தென்கிழக்கு அரபிக்கடல், கேரள கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications