போலீஸ் ஸ்டிக்கர்..தனிப்பட்ட வாகனங்களில் பயன்படுத்த தடை - டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு
காவலர்கள் தங்கள் சொந்த தேவைக்காக பயன்படுத்தும் வாகனங்களில் போலீஸ் என்ற போர்டு அல்லது ஸ்டிக்கர்களை பயன்படுத்தக்கூடாது என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: உயர் நீதிமன்ற உத்தரவுப்படி காவலர்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் என்ற போர்டு அல்லது ஸ்டிக்கர்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காவலர்கள் தங்கள் சொந்த தேவைக்காக பயன்படுத்தும் வாகனங்களில் போலீஸ் என்ற போர்டு அல்லது ஸ்டிக்கர்களை பயன்படுத்தக்கூடாது என்றும் அலுவலக ரீதியாக பயன்படுத்தும் வாகனங்களில் மட்டுமே போலீஸ் என்ற ஸ்டிக்கர் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி 2012 ஆம் ஆண்டு மத்திய அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. கருப்பு ஸ்டிக்கர்களை நான்கு சக்கர வாகனங்களில் பயன்படுத்தக் கூடாது என்றும் இதை அடிப்படையாக வைத்து கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றில் சில உத்தரவுகளை பிறப்பித்தது. காவல்துறை உயரதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களிலும் கருப்பு ஸ்டிக்கர் பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன் போலீஸ் என்ற போர்டு மற்றும் ஸ்டிக்கரை காவலர்கள் தங்கள் தனிப்பட்ட வாகனங்களில் பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் தமிழக காவல்துறை தலைமை இயக்குநரும்,சட்டம் ஒழுங்கு டிஜிபியுமான சைலேந்திரபாபு அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் தமிழகத்தில் உள்ள காவல்துறை உயரதிகாரிகள் அலுவலக வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கரை ஒட்டக்கூடாது. காவலர்கள் தங்கள் சொந்த தேவைக்காக பயன்படுத்தும் வாகனங்களில் போலீஸ் என்ற போர்டு அல்லது ஸ்டிக்கர்களை பயன்படுத்தக்கூடாது என்றும் அலுவலக ரீதியாக பயன்படுத்தும் வாகனங்களில் மட்டுமே போலீஸ் என்ற ஸ்டிக்கர் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து காவல்துறை ஆணையர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தங்கள் கீழ் பணிபுரியும் காவலர்கள் தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் போர்ட் அல்லது ஸ்டிக்கர் பயன்படுத்தி வந்தால் உடனடியாக அகற்ற வேண்டும் என அறிவுறுத்துமாறு டிஜிபி தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்த உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும், உத்தரவை பின்பற்றியது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அனைத்து காவல் ஆணையர்கள், ஐஜிக்கள், டிஐஜிக்கள், எஸ்பிக்களுக்கு தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை மூலம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications