சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"பூனைக்குட்டி வந்தாச்சு".. சால்ஜாப்புதான்.. காவியா? திராவிடமா?.. குறுக்கே ரர.க்கள் வேற.. மாற்று யார்

பாஜகவுக்கு மாற்று திமுகவா என்பது உண்மையா என்ற கேள்வி தமிழகத்தில் எழுந்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: நிஜமாகவே திமுகவுக்கு மாற்று பாஜகவா? தமிழகத்தில் பாஜக மெல்ல வளர்ந்து கொண்டிருக்கிறதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.. இதற்கு காரணம், திமுகவும், அதிமுகவும்தான் என்கின்றனர்..!

ஒன்று திமுக, இல்லாவிட்டால் பாஜக என்று சவால்விடுத்து அரசியல் செய்து வருகிறது கமலாலயம்.. ஆரம்பத்தில் இதை பெரிதாக கண்டுகொள்ளாத திமுகவும் சரி, அதிமுகவும், பிறகு திடீரென விழித்து கொள்ள ஆரம்பித்தன.

திமுகவை எதிர்க்கிறோம் என்ற பெயரில் பாஜக, தங்களையே ஓவர்டேக் செய்துவிட்டதே என்று அதிமுக நினைத்துள்ளது..

25 நாள் டைம்.. இல்லைனா 60 மாவட்டங்களில் செக்.. திமுகவை விடாத அண்ணாமலை.. பாஜக விதித்த கெடு! 25 நாள் டைம்.. இல்லைனா 60 மாவட்டங்களில் செக்.. திமுகவை விடாத அண்ணாமலை.. பாஜக விதித்த கெடு!

 டேமேஜ்

டேமேஜ்

நாளுக்கு நாள் தங்களை டேமேஜ் செய்து வருகிறதே என்ற திமுக நினைத்துள்ளது.. இதையடுத்துதான், திமுகவும், அதிமுகவும் பாஜகவுக்கு பதிலடியை தர ஆரம்பித்தன.. எனினும் பாஜகவுக்கு எதிராக இவைகள் எல்லாம் ஒன்று திரண்டு கொண்டிருப்பது உண்மைதானா? திமுகவுக்கு மாற்று நிஜமாகவே பாஜகதானா? என்ற சந்தேகங்கள் வலுத்து வருகின்றன.. இதுகுறித்து நாம் சில அரசியல் நோக்கர்களிடம் பேசினோம்.

 ஆக்‌ஷன் - திமுக

ஆக்‌ஷன் - திமுக

அவர்கள் நம்மிடம் சொன்னதாவது: "அதிமுகவில் 2ம் கட்ட தலைவர்கள்தானே பாஜகவை பேசினார்கள்? எடப்பாடி பழனிசாமி பேசவில்லையே? பாஜக என்றாலே ஓபிஎஸ் எப்போதுமே வாய் திறக்க மாட்டார்.. ஆனால், எடப்பாடி பழனிசாமி இதுவரை பிரதமர் மோடியின் ஆட்சி குறித்து ஏதாவது விமர்சித்துள்ளாரா? அவ்வளவு ஏன்? எல்லாவற்றிற்கும் டக்டக்கென பதில் சொல்லி கொண்டிருக்கும் ஜெயக்குமார் ஏதாவது பேசினாரா? பேசமாட்டாங்க.. 2 நாளைக்கு முன்னாடி, "பாஜக - அதிமுக உறவில் விரிசல் இல்லை என்று எடப்பாடி சொன்னாரே.. இதுதான் நிஜம்.. பூனைக்குட்டி ஏதாவது ஒரு ரூபத்தில் வெளிவந்துவிடும். அதுவரை 2ம் கட்ட தலைவர்கள் பாஜகவை விமர்சித்தது எல்லாம் வெறும் அரசியலுக்காகத்தான்..

 ஸ்டண்ட் - பாஜக

ஸ்டண்ட் - பாஜக

காரணம், இதெல்லாம் ஒரு அரசியல் ஸ்டண்ட்.. மேலிட தலைவர்களுக்கு பாஜக ரொம்ப முக்கியம். எம்பி தேர்தல் வரை இந்த கூட்டணி தொடரும். வேண்டுமானால், தமிழக பாஜகவை எதிர்த்து கொண்டும், விமர்சித்து கொண்டும் இருப்பார்கள்.. மோடி அமித்ஷா குறித்து வாய் திறக்க மாட்டார்கள்... தேர்தல் களத்தை பொறுத்தவரையிலும் சரி, ஓட்டுவங்கியை பொறுத்தவரையிலும் சரி, திமுகவை விட அதிமுகதான் ஸ்டிராங்.. இது இந்த கட்சிகளுக்கு நன்றாகவே தெரியும்.. அதிமுகவின் தயவில் 4 சீட்டுகளை வென்றுவிட்டு, இன்று அதிமுகவுக்கே செக் வைத்து வருகிறது பாஜக.. இதற்கு என்ன காரணம்?

 விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கர்

திமுக ஆட்சியில் நடைபெறும் முறைகேடுகளை அதிமுக தட்டிக் கேட்கவில்லை என்று சொல்லப்படுகிறது.. ஏன் தட்டிக் கேட்கவில்லை.. ஏற்கனவே 6 மாஜிக்களின் வீடுகளில் ரெய்டு நடந்தாகிவிட்டது.. குட்கா கேஸில், விஜயபாஸ்கர் மீதான விவகாரம் அப்படியே இருக்கிறது.. எடப்பாடியின் இடது கையான வேலுமணி வரை நெருங்கி ரெய்டு நடத்திவிட்டார்கள்.. திமுகவின் ஊழலை பற்றி பேசபோனால், தங்களுக்குதான் ஆபத்து என்பதை அதிமுக உணராமல் இல்லை..

 கனியும் காலம்

கனியும் காலம்

அதனாலேயே கப்சிப் மோடுக்கு போயுள்ளது. இந்த சைலண்ட்டைதான் அண்ணாமலை பயன்படுத்தி கொண்டு வருகிறார். எனினும் கள நிலவரம் என்பது வேறு.. அதிமுக ஒன்றிணைந்தால், இத்தனை வருட காலங்களை போல், திமுகவுக்கு மாற்று அதிமுகதான்... ஆனால், அதிமுகவில் இதே நிலை தொடர்ந்தால், அந்த கட்சியின் வாக்குகள் சிதறிப் போக வாய்ப்புள்ளது.. டிடிவி ஒருபக்கம், திமுக, பாஜக மறுபக்கம், என ஓட்டுக்களை பிரித்துவிடக்கூடும்..

 கப்சிப் மோடு

கப்சிப் மோடு

அதிலும் இப்போதைக்கு பாஜகவுக்கு வெறும் 3 சதவீதம் ஓட்டு மட்டுமே இருக்கிறது.. ஒருவேளை வெறும் 10 சதவீதத்துக்கு உயர்ந்தால்கூட போதும்.. திமுகவுக்கு மாற்று பாஜக என்ற நிலை வரலாம்.. ஆனால், அதற்கு அதிமுக இடம் தரக்கூடாது.. பாஜகவின் ஓட்டு வங்கியை ஏற விடாமல் தடுப்பதுதான், அதிமுகவுக்கும் நல்லது.. திமுகவுக்கும் நல்லது.. ஏன் தமிழகத்துக்கே நல்லது" என்று கருத்துக்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டனர்.. நாளுக்கு நாள் அண்ணாமலை திமுகவுக்கு சவால் விட்டு வரும் நிலையில், அதிமுக, திமுக என்ன செய்ய போகின்றன.. பொறுத்திருந்து பார்ப்போம்..!

English summary
Did Aiadmk and bjps senior leaders do political stunts and what will happen in the dmk politics பாஜகவுக்கு மாற்று திமுகவா என்பது உண்மையா என்ற கேள்வி தமிழகத்தில் எழுந்துள்ளது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X