Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கிறிஸ்தவ" பிரியா?.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. கொதிக்கும் பாஜக.. எகிறிய அர்ஜுன் சம்பத்..!

பிரியா ராஜன் மீது அர்ஜூன் சம்பத் குற்றஞ்சாட்டி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மேயராக தற்போது பொறுப்பேற்றுள்ள பிரியா கிரிப்டோ, கிறிஸ்தவர் என்ற சந்தேகம் இப்போது தனக்கு எழுந்துள்ளதாகவும், அவரின் வாழ்வியல் முறைகளை பார்க்கும்போது உண்மையான பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களின் இடத்தை அவர் ஆக்கிரமித்துள்ளதாகவும் அர்ஜுன் சம்பத் குற்றஞ்சாட்டினார்.
சென்னை மாநகராட்சியின் இளம் மேயராக 28 வயதான பிரியா பொறுப்பேற்றுள்ளார்.. மிக இளம் வயதில் மேயர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Recommended Video

    மதமாற்ற தடை சட்டம் கொண்டு வர வேண்டும்- Arjun Sampath | Oneindia Tamil

    ஆனால், சென்னையின் தலித் மேயர் பிரியா ராஜன் என்று கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துக் கொண்ட தம்பதியின் போட்டோ கடந்த சில தினங்களாகவே சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது..

     தவறான தகவல்

    தவறான தகவல்

    ஆனால், இந்த போட்டோ தவறானது என்றும், யாரோ தேவையில்லாமல் இப்படி கிளப்பி விட்டு வருவதாகவும் நிரூபணமாகி வருகிறது. பிரியா ராஜனின் தந்தை திமுக மூத்த நிர்வாகியாக திருவிக நகர் பகுதியில் இருந்து வருகிறார்... முன்னாள் திமுக எம்எல்ஏ செங்கை சிவம் இவரது உறவினரும்கூட.. இப்படி அரசியல் பின்புலம் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்துள்ள நிலையில், அவரது வேட்புமனுவில் இந்து ஆதிதிராவிடர் என்றே குறிப்படப்பட்டுள்ளது..

    பாஜக

    பாஜக

    அப்படி இருந்தும் இந்த பிரச்சனையை தேவையில்லாமல் கிளப்பி வருவதாக கூறப்படுகிறது.. முக்கியமாக இந்த விஷயத்தை பாஜக கையில் எடுத்து வருகிறது. முக்கியமாக கராத்தே தியாகராஜன் இதை பற்றி சொல்லும்போது, "கிறிஸ்தவ மதத்தை பின்பற்றும் பிரியா தன்னை தாழ்த்தப்பட்ட இந்து பெண்ணாக காட்டிக்கொண்டு சட்டத்தை ஏமாற்றி மேயர் ஆகிவிட்டார். மேயர் வேட்பாளராக வரக்கூடிய பெண் தேர்தல் ஆணையத்திற்கு தாக்கல் செய்த மனுவில் இருந்தே கட்சித் தலைமை உஷாராக செயல்பட்டிருக்க வேண்டும்.

     பிரியா ராஜன்

    பிரியா ராஜன்

    யார் என்ன கேட்க முடியும் என்ற அசாத்திய நம்பிக்கையில் திமுகவினர் தொடர்ந்து தவறு செய்கிறார்கள்.. கட்சித் தலைவரில் துவங்கி பிரியா வரை திமுகவில் யாருமே நடைமுறைகளை பின்பற்றுவது இல்லை. இந்த விஷயத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப் போகிறோம்" என்று தெரிவித்துள்ளார். இந்த வரிசையில் பாஜகவின் ஆதரவாளரான, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தும் தன் கருத்தை தெரிவித்துள்ளார்..

     அர்ஜுன் சம்பத்

    அர்ஜுன் சம்பத்

    மயிலாடுதுறை மாவட்டம் திருவிழுந்தூர் பகுதியில் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட அர்ஜூன் சம்பத் தன்னுடைய நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்... பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.. அவர் சொன்னதாவது: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கோவில் நிலங்களை மீட்பது மற்றும் விழாக்கள் நடத்துவதன் ஆகியவற்றின் மூலம் அதிகப்படியான விளம்பரங்களை தேடி வருகிறார்..

     அர்ஜூன் சம்பத் பேட்டி

    அர்ஜூன் சம்பத் பேட்டி

    திமுக அரசு தொடர்ந்து ஆளுநரை அவமதித்து வருகிறார்.. ஆளுநருக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை வெறுப்புணர்வுடன் செய்கிறார்.. ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை என அண்ணாதுரை சொல்லி இருக்கிறார்.. ஆனால் திமுக அரசு எடப்பாடிக்கு எதிராக ஆளுநரிடம் மனு கொடுக்கிறது. தொடர்ந்து ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

    ஆதீனம்

    ஆதீனம்

    திருவாவடுதுறை ஆதீனத்தில் நடைபெறும் பட்டினப்பிரவேசம் மற்றும் கோயில்களில் நடைபெறும் பல்வேறு விழாக்கள் என சில இந்து பண்டிகைகளுக்கு திராவிட கழகம் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவதால் ஆன்மீக மக்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளனர்.. சென்னை மேயராக தற்போது பொறுப்பேற்றுள்ள பிரியா கிரிப்டோ கிறிஸ்தவர் என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

     சலசலப்பு

    சலசலப்பு

    அவரின் வாழ்வியல் முறைகளை பார்க்கும்போது உண்மையான பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களின் இடத்தை அவர் ஆக்கிரமித்துள்ளதாக தெரிகிறது. விடுதலை சிறுத்தை கட்சியில் இருக்கக்கூடிய நிர்வாகிகள் கிரிப்டோ கிறிஸ்தவர்கள் தான், இது அம்பேத்கர் கொள்கைக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய துரோகம்.. விடுதலை சிறுத்தைகள் மதமாற்றத்திற்கு வெளிப்படையாக துணை போகிறது.. தங்களை இந்துக்கள் என அடையாளம் காட்டிக் கொண்டு பட்டியல் இன மக்களை ஏமாற்றுகிறது" என்று அர்ஜூன் சம்பத் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+