சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வந்தது 'அதிவிரைவு பரிசோதனை'.. 50 ரூபாயில் கொரோனாவை கண்டுபிடிச்சிடலாம்.. சூப்பர் தகவல் !

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவில் வரும் புதன்கிழமை முதல் மிக துரிதமான' பரிசோதனை முறை என்று அழைக்கப்படும் அதிவிரைவு பரிசோதனை பயன்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் இந்த சோதனை எப்படி மேற்கொள்ளப்படும் என்பது குறித்தும், தற்போது மேற்கொள்ளபடும் பிசிஆர் பரிசோதனைக்கும் இதற்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன என்பது குறித்தும் இப்போது பார்ப்போம்.

Recommended Video

    கொரோனா சிகிச்சைக்கான செலவு எவ்வளவு தெரியுமா..?

    இந்தியா முழுவதும் வெளிநாடுகளில் இருந்த வந்த 15லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். இதில் பல ஆயிரம் பேருக்கு கொரோன அறிகுறி உள்ளது. இவர்களை விரைவாக சோதிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.

    ஆனால் தற்போது இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனை முறையில் முடிவுகள் தெரிய 2 முதல் 3 மணி நேரம் ஆகிறது. எனவே கொரோனா வைரஸ் பரிசோதனை என்பத நாடு முழுவதும் மிக குறைவாகவே செய்யப்படுகிறது. சரியான புள்ளி விவரங்கள் என்பது இதுவரை அரசால் வெளியிடப்படவில்லை. எனினும் ஒவ்வொரு மாநிலங்களும் எத்தனை பேரை பரிசோதிக்கிறோம் என்பதை வெளியிட்டுள்ளன.

    ஆடையை கயிறாக கட்டி ஆஸ்பத்திரியில் இருந்து குதித்து தப்பி ஓடிய கொரோனா நோயாளி.. அதிர்ச்சி தகவல் ஆடையை கயிறாக கட்டி ஆஸ்பத்திரியில் இருந்து குதித்து தப்பி ஓடிய கொரோனா நோயாளி.. அதிர்ச்சி தகவல்

    நாளை முதல் வருகிறது

    நாளை முதல் வருகிறது

    உதாரணமாக தமிழகத்தில் இதுவரை 5000 பேருக்கு கொரோனா வைரஸ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இனி வரும் நாட்களில் கொரோனா வைரஸ் பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஆகும். அப்போது தான் ஊரடங்கின் நோக்கமே நிறைவேறும். எனவே மத்திய அரசு விரைவாக கொரோனா வைரஸ பரிசோதனையை அறிவதற்காக மிக துரிதமான' பரிசோதனை முறை கருவியை இறக்குதி செய்துள்ளது. இந்த கருவியை வரும் புதன்கிழமை முதல் பயன்படுத்த உத்தரவிட்டுள்ளது.

    ஸ்வாப் டெஸ்ட் முறை

    ஸ்வாப் டெஸ்ட் முறை

    இந்நிலையில் இந்த ரேபிட் ஆன்டிபாடி டெஸ்ட்க்கு தற்போது மேற்கொள்ளப்படும் ஸ்வாப் டெஸ்க்கும் என்ன வித்தியாசம் என்பதையும் இரண்டும் எப்படி மேற்கொள்ளப்படுகின்றன. தற்போதைய நிலையில் எது சிறந்தது என்பதையும் இப்போது பார்ப்போம்-. தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டுபிடிக்க `ஸ்வாப் டெஸ்ட்' என்ற பரிசோதனையை பய்ன்படுத்துகிறார்கள் . இந்த சோதனையில்
    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மூக்கு மற்றும் தொண்டைப் பகுதிகளில் சுரக்கப்படும் நீர், ஸ்வாப் பரிசோதனைக்காக எடுக்கப்படுகிறது. அத்துடன், மூக்கு மற்றும் தொண்டைப் பகுதிக்கு இடையில் (Nasopharayngeal Swab) உள்ள மாதிரியும் பரிசோதனைக்காக எடுக்கப்படுகிறது. அவ்வாறு எடுக்கப்பட்ட மாதிரிகள் பாலிமரேஸ் செயின் ரியாக்‌ஷன் (Polymerase Chain Reaction- PCR) பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

    கண்டுபிடிப்பது எளிது

    கண்டுபிடிப்பது எளிது

    இந்த பிசிஆர் சோதனையின் சிறப்பு அம்சம் என்னவென்றால் சோதிக்கப்பட்ட நோயாளியின் மாதிரியில் ஒரு வைரஸ் இருந்தால்கூட, அதன் தன்மையை அறியச்செய்ய முடியும். வைரஸின் நோய் தொற்றிய ஆரம்ப காலத்திலேயே (Incubation period), அதாவது அறிகுறிகளற்ற முதல் 14 நாள்களிலேயே இந்த நோய்த்தொற்று ஒருவருக்கு உள்ளதா இல்லையா என்பதை அறிய முடியும். இந்த பரிசோதனை முடிவுகள் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் கிடைத்துவிடும். எனவே நோய் ஒருவருக்கு உள்ளதா இல்லையா என்பதை முழுமையாக அறிய பிசிஆர் பரிசோதனை சிறந்ததாக பார்க்கப்படுகிறது.

    ரேபிட் அவசியம் ஏன்?

    ரேபிட் அவசியம் ஏன்?

    ஆனால் இந்த பிசிஆர் சோதனையை முறையைவிடவும் அதிவிரைவாக சோதிப்பதற்காக ரேபிட் ஆன்டிபாடி டெஸ்ட் முறையை இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்துள்ளது. இதற்கான ஒரு லட்சம் கிட்டுகள் தமிழகத்திற்கு மட்டும் வந்துள்ளது. இந்த கையடக்க கருவியில் மிக எளிதாக அதிவிரைவாக ஒருவருக்கு கொரோனா இருப்பதை கண்டுபிடித்துவிட முடியும்.

    மிக எளிதாக சோதனை

    மிக எளிதாக சோதனை

    டெங்கு, குழந்தை உருவானதைக் கண்டறிதல் போன்ற சோதனைகள் எப்படி கையடக்ககருவியில் சோதிக்கப்படுகிறதோ அதேபோல் கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் பரவலை கண்டுபிடிக்கவும் இப்போது ரேபிட் டெஸ்ட் எனப்படும் சோதனை பயன்படுத்தப்படுகிறது. இந்த சோதனையின் மூலம் பல்லாயிரம் பேருக்கு கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை சில நிமிடங்களில் அறிய முடியும்.

    நிறப்பகுப்பியல் சோதனை

    நிறப்பகுப்பியல் சோதனை

    இந்த சோதனையை செய்ய மருத்துவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்படும் போது அந்த வைரஸின் Antigenஐ எதிர்க்க, அவர் உடலில் எதிர்ப்புரதம் (Antibody) உருவாகும். அதாவது IgM, IgG என்ற ஆன்டிபாடீஸ் உருவாகும். ரேபிட் பரிசோதனை கருவியில் அந்த இரு ஆன்டிபாடிகளைக் கண்டுபிடிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்தப் பரிசோதனைக்கு நோயாளியின் ரத்தம், பிளாஸ்மா மற்றும் சீரம் ஆகியன மாதிரியாகப் பயன்படுத்தப்படுகின்றது. .அந்த மாதிரிகளில் IgM, IgG ஆன்டிபாடீஸ் இருப்பின், அந்த பரிசோதனைப் கருவியில் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் நிறம் மாறும். இந்த நிறப் பகுப்பியல் சோதனை மூலம் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது.

    நம்பகத்தன்மை எப்படி

    நம்பகத்தன்மை எப்படி

    ஒரு பரிசோதனை அட்டையின் விலை 50 ரூபாய்தான். பரிசோதனை முடிவுகளை உடனே தெரிந்துகொள்ள முடியும். காலதாமதம் ஏற்படாது. நிறைய மக்களுக்கு குறைந்த நேரத்தில் பரிசோதனை செய்துவிடலாம். அறிகுறி உள்ளவர், இல்லாதவர்கள், தொற்று உள்ளவர்கள் என அனைவருக்கும் இந்தப் பரிசோதனையைச் செய்ய முடியும். ஆனால் PCR பரிசோதனையை ஒப்பிடும் போது இந்த அதிவிரைவு பரிசோதனையின் நம்பகத்தன்மை குறைவு. ஏனெனில் ஒருவருக்கு வைரஸை எதிர்க்கும் ஆன்டிபாடி இருந்தால் மட்டுமே பாசிட்டிவ் என்று வரும். ஆனால் ஒருவருக்கு கொரோனா த் தொற்று இருந்தும் ஆன்டிபாடி உருவாகும் காலத்துக்கு முன்பே பரிசோதனை செய்தால், பரிசோதனை நெகட்டிவ்வாகத்தான் இருக்கும். எனினும் தற்போதைய சூழலில் அதிகம் பேருக்கு சோதனை செய்ய வேண்டியதிருப்பதால் ரேபிட் டெஸ்ட் நிச்சயம் அவசியமான ஒன்று ஆகும்.

    English summary
    Differences between PCR tests vs rapid antibody tests for Covid-19 . which test is best fro coronavirus
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X