ஆளுநர் வெளியேறினப்போ.. முதல்வர் சிரிச்சாரே.. அய்யோ.. ஸ்டாலின் இமேஜ் எங்கேயோ போயிடுச்சி.. லியோனி
சென்னை: முதல்வர் ஸ்டாலினின் இமேஜ் பயங்கரமாக பில்டப் ஆகியிருக்கிறது என்றும் இனி 20 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சிதான் என்றும் திண்டுக்கல் லியோனி தெரிவித்தார்.
சென்னை வடகிழக்கு மாவட்டம் சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் பாடியநல்லூர் மொண்டியம்மன் நகரில் பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக கொள்கை பரப்புச் செயலாளரும் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவருமான திண்டுக்கல் லியோனி கலந்து கொண்டார்.
அவர் பொதுமக்களுக்கு தையல் இயந்திரங்களையும் மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனங்களையும் வழங்கினார். பின்னர் பொதுக் கூட்டத்தில் லியோன பேசுகையில் பாரம்பரியம் எது என்பதை பதவிப்பிரமாணத்தின் போது நிலைநாட்டியவர்தான் முதல்வர் ஸ்டாலின்.

ஆளுநர்
ஆளுநரை பார்த்த முதல்வரின் லுக் மற்றும் சிரிப்பு பார்வையிலே அற்புதமான செய்தியை வெளிப்படுத்தியவர். எதிர்க்கட்சிக்காரர்கள் ஆளுநரை வெளியேறுமாறு சட்டசபையில் கூச்சலிட்டனர். ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கையெழுத்து போடாமல் இருந்ததால் ஆளுநரை எதிர்த்து கோஷமிட்டனர்.

கையெழுத்திட்ட உரை
ஆளுநர் அவரே கையெழுத்திட்ட உரையை முழுமையாக படிக்காததால் முதல்வர் ஸ்டாலின் அதே இடத்திலே எதிர்ப்பை தெரிவித்தார். அப்போது ஆளுநர் சட்டசபையை விட்டு வெளியேறியதை பார்த்து முதல்வர் புண்முறுவல் பூத்தார். முதல்வர் சட்டசபையில் செயல்பட்ட விதம் பெரியாரின் மண்ணிலே பாஜகவின் எந்த செயலும் எடுபடாது.

பாஜக அதிமுக
பாஜகவும் அதிமுகவும் அரைகுறை கட்சிகள், 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40 என திமுக தேர்தலில் வெற்றி பெறும். அதிமுகவில் ஒருவரை ஒருவர் கட்சியை விட்டு நீக்கிக் கொண்டு வருகிறார்கள். கட்சி நடத்தி இனி ஒரு பிரயோஜனமும் இல்லை. எதிர்ப்பு என்று சொல்ல ஒருவரும் இல்லை. எனவே அடுத்த 20 ஆண்டுகளுக்கு இனி தமிழகத்தை ஸ்டாலின்தான் ஆட்சி செய்வார்.

திராவிட மாடல்
திராவிட மாடல் ஆட்சியைப் பார்த்து பாஜகவிற்கும் அதிமுகவிற்கும் மிகப் பெரிய கோபம் வந்துவிட்டது. கருப்பு சட்டை போட அருகதையே இல்லாதவர்கள் கருப்பு சட்டை அணிந்து கொண்டு சட்டசபைக்கு வருகிறார்கள். சுயமரியாதையை இழந்த எடப்பாடி பழனிசாமி கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவிப்பதா என கேள்வி எழுப்பினார். சட்டசபையில் எடப்பாடியும் ஓபிஎஸ்ஸும் அருகருகே உட்கார்ந்த போதிலும் முகபாவணையில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டதை காமெடியாக நடித்து காட்டினார் லியோனி.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications