செல்வராகவன் இப்படி பண்ணுவார்னு நினைச்சுக் கூட பாக்கல! திடீர் பதிவிட்ட மோகன் ஜி! என்னாச்சு அவருக்கு!
சென்னை : பகாசூரன் படத்தில் நடித்துள்ள இயக்குனர் செல்வராகவன் ஒரு நொடி கூட தன்னை இயக்குனராக காட்டிக் கொள்ளவில்லை எனவும், சின்ன கருத்து கேட்டால் கூட உங்க முடிவே இறுதியானது என சொல்லியதாக பகாசூரன் படத்தின் இயக்குனர் மோகன் ஜி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம் உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குனரான மோகன் ஜி, தற்போது செல்வராகவனுடன் பாகாசுரன் திரைப்படத்தை முடித்துவிட்டு படத்தின் வெளியீட்டு வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில். இன்று படத்தின் டீசர் வெளியாக இருக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் குறித்து நெகிழ்ச்சியாக பேசி வருகிறார் மோகன் ஜி.

இயக்குனர் செல்வராகவன்
இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் ஒரு நொடி கூட தன்னை இயக்குனராக காட்டிக் கொள்ளவில்லை எனவும், சின்ன கருத்து கேட்டால் கூட உங்க முடிவே இறுதியானது என சொல்லியதாக பகாசூரன் படத்தின் இயக்குனர் மோகன் ஜி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்," இயக்குனர் திரு செல்வராகவன் சார் இயக்கிய காதல் கொண்டேன் திரைப்படம் பார்த்த பின் தான் சினிமா மீது எனக்கு மோகம் ஏற்பட்டது..

கோகன் ஜி
யாரிடமும் பணியாற்றாமல் நேரடியாக இயக்குனர் ஆனாலும் செல்வராகவன் சார் அவர்களையே மானசீக குருவாக ஏற்றுக்கொண்டேன்.. என் முதல் படமான பழைய வண்ணாரப்பேட்டை பட டைட்டிலும் அதில் வரும் வில்லன் கதாபாத்திரமான பட்டறை குமாரும் இவருடைய தாக்கம் தான்.. பின் திரெளபதி படத்திலிருந்து எனக்கென ஒரு பாணியை தேர்வு செய்து கொண்டேன்..

பகாசூரன்
குருவாக ஏற்றுக் கொண்டவரையே என் இயக்கத்தில் நடிக்க வைப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை.. அவருடன் #பகாசூரன் திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம் என் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும்.. அவரை ரசித்து ரசித்து இயக்கி உள்ளேன்.. அவரும் நடிகராக மட்டுமே இருந்தாரே தவிர ஒரு நொடி கூட தன்னை இயக்குனராக காட்டிக் கொள்ளவில்லை.. சின்ன கருத்து கேட்டால் கூட உங்க முடிவே இறுதியானது என நடிகராக மட்டுமே இருந்து படத்தை வேகமாக முடித்து தந்தார்..

குருவாக அண்ணனாக..
அவர் நடிப்பை பற்றி நான் சொல்வதை விட நீங்களே சற்று நேரத்தில் தெரிந்து கொள்வீர்கள்.. குருவாக, அண்ணனாக என் மீது உள்ள விமர்சனங்களை ஏற்று கொண்டு பகாசூரன் படத்தின் கதைக்காக இதில் நடித்த செல்வராகவன் சாருக்கு இந்த நேரத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.. செல்வராகவன் சாருக்கு இருக்கும் கோடி கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்.. அவருக்கு என்னுடைய அன்பளிப்பு இந்த பகாசூரன் திரைப்படம்.. காத்திருந்து பாருங்கள்.." என கூறியுள்ளார்.
-
கோவை, நீலகிரியில் 2 நாட்களுக்கு மழை வெளுக்க போகுது.. தென் தமிழகத்திலும் மழை கொட்டும்.. வானிலை அலர்ட் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர்












Click it and Unblock the Notifications