சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடுத்த ஜெயலலிதா..! தமிழ்நாட்டு மம்தா குஷ்பு தான்! போட்டுத் தாக்கிய பேரரசு! என்ன காரணம் சொன்னார்?

Google Oneindia Tamil News

சென்னை : முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வரிசையில் அரசியலுக்கு வரும் பெண்கள் தான் மனதிடத்தில் ஆண்களுக்கு நிகர் எனவும், நடிகை குஷ்புவும் அந்த வரிசையில் இருக்கிறார் என இயக்குனரும் பாஜக பிரமுகருமான பேரரசு புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

தமிழ் திரையுலகிலும் சரி அரசியல் களத்திலும் சரி தற்போதைய ட்ரெண்டிங் டாப்பிக்கில் இருப்பவர் இயக்குனர் வெற்றிமாறன். ராஜராஜ சோழன் குறித்த அவரது பேச்சு தற்போது அரசியல் மட்டுமல்லாது சினிமா உலகிலும் பலத்த வரவேற்பையும் அதே நேரத்தில் கடும் எதிர்ப்பையும் பெற்றுள்ளது.

தமிழக பாஜக தொடங்கி, உள்ளூர் பிரபலங்கள் முதல் இந்திய அளவிலான அரசியல் வாதிகள் என பலரும் இயக்குனர் வெற்றிமாறனுக்கு ஆதரவையும், சில கடுமையான எதிர்ப்புகளையும் பதிவு செய்து வருகின்றனர்.

இந்து இல்லாம, ராஜராஜ சோழன் முஸ்லிமா,கிறிஸ்தவரா? வெற்றிமாறன் எப்படி சொல்லலாம் -இயக்குநர் பேரரசு கோபம்இந்து இல்லாம, ராஜராஜ சோழன் முஸ்லிமா,கிறிஸ்தவரா? வெற்றிமாறன் எப்படி சொல்லலாம் -இயக்குநர் பேரரசு கோபம்

வெற்றிமாறன் சர்ச்சை

வெற்றிமாறன் சர்ச்சை

என்ன தான் பேசினார் வெற்றி மாறன்? விசிக தலைவர் திருமாவளவனின் 60ஆவது பிறந்தநாளையொட்டி அவருக்கு மணிவிழா எடுக்கப்பட்டது. இதில் பேசிய வெற்றிமாறன்,"தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்களை பறித்துக் கொண்டிருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பதாக இருக்கட்டும்; ராஜராஜ சோழன் இந்து அரசன் என்பதாக இருக்கட்டும். இப்படிதொடர்ந்து அடையாளங்களை எடுப்பது நடந்து கொண்டிருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும். சினிமாவிலும் நிறைய அடையாளங்களை பறிக்கிறார்கள்" என பேசியிருந்தார்.

குஷ்பு கண்டனம்

குஷ்பு கண்டனம்

வெற்றிமாறனின் இந்தப் பேச்சுக்கு ஒருசேர ஆதரவும், எதிர்ப்பும் எழ ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவருக்கு பதிலளித்துள்ள பாஜக பிரபலமும் நடிகையுமான குஷ்பு,"வெற்றிமாறன் தனது பார்வையை மாற்றிக்கொள்ள வேண்டும். உலகம் எந்த பார்வையில் பார்க்கிறதோ அதைத்தான்பார்க்க வேண்டும். அனைத்திலும் தப்பு கண்டுபிடிக்க வேண்டும். தன்னுடைய நோக்கத்தில் மட்டும்தான் பார்ப்பேன் என்று அவர் சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை' என்றார்.

இயக்குனர் பேரரசு

இயக்குனர் பேரரசு

இந்நிலையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வரிசையில் அரசியலுக்கு வரும் பெண்கள்தான் மனதிடத்தில்ல் ஆண்களுக்கு நிகர் எனவும், நடிகை குஷ்புவும் அந்த வரிசையில் இருக்கிறார் என இயக்குனரும் பாஜக பிரமுகருமான பேரரசு புகழ்ந்து தள்ளியிருக்கிறார். கோவை சரளா, ராஜாத்தி பாண்டியன், சார்லஸ் வினோத் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் ஒன் வே. இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை பிரசாத் லேபில் நடந்தது.

அடுத்த ஜெயலலிதா

அடுத்த ஜெயலலிதா

இந்த நிகழ்ச்ச்சியில் பேசிய இயக்குனர் பேரரசு,"முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, தமிழகம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இவர்களைப் போல் அரசியலுக்கு வரும் பெண்கள் தான் மன திடத்தில் ஆண்களுக்கு நிகராக இருக்கின்றனர். குஷ்புவும் அந்த வரிசை தான் இருக்கிறார். அரசியலில் சவாலாக இருக்கும் அவர்களை தைரியத்தை பாராட்டுகிறேன். அரசியல் களத்தில் மனதிடத்துடன் இருக்கும் குஷ்பு மனதார பாராட்டுகிறேன்" என பேசியுள்ளார் தற்போது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

English summary
Former Prime Minister Indira Gandhi and former Chief Minister Jayalalithaa are the women who come into politics as mentally equal to men, and actress Khushbu is also in that line, director and BJP figure perarasu has praised.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X