சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெள்ளையர் இந்தியாவை ஆண்டார்! ’குடும்பங்கள்’ ஒவ்வொரு மாவட்டத்தை ஆள்கிறார்! யாரை சீண்டுகிறார் தங்கர்?

Google Oneindia Tamil News

சென்னை : ஒரு சில வெள்ளைக்காரர்கள் இந்தியாவை ஆண்டது போல ஒவ்வொரு மாவட்டத்தையும் ஒரு சில குடும்பங்கள் மட்டுமே இந்த தேர்தல் அரசியலால் ஆண்டு கொண்டு இருக்கின்றன என இயக்குநரும் நடிகருமான தங்கர் பச்சான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பலத்த விவாதங்களை உண்டு பண்ணி இருக்கிறது.

இந்தியா 76 ஆவது சுதந்திர தினம் கோலாகலமாக நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் அரசியல் பிரபலங்கள் திரைப்படங்கள் பொதுமக்கள் என பலரும் வீடுகளில் தேசிய கொடி ஏற்றி தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

தொடர்ந்து பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஸ்டேட்டஸ்களை வைத்து தங்கள் தேசப்பற்றினை வெளிப்படுத்தினர்.

குடும்ப அரசியல் தலைவிரித்தாடுகிறது.. ஒழித்துக்கட்ட வேண்டும்.. சுதந்திர தினத்தில் அண்ணாமலை சூளுரைகுடும்ப அரசியல் தலைவிரித்தாடுகிறது.. ஒழித்துக்கட்ட வேண்டும்.. சுதந்திர தினத்தில் அண்ணாமலை சூளுரை

தங்கர் பச்சான்

தங்கர் பச்சான்

இந்த நிலையில் வெள்ளைக்காரர்கள் பல ஆண்டுகள் இந்தியாவை ஆண்டது போல சில மாவட்டங்களில் அரசியல்வாதிகள் ஆண்டு வருவதாக இயக்குனரும் நடிகரும் தயாரிப்பாளருமான தங்கர்பச்சான் ட்விட்டரில் பதிவிட்டு இருப்பது விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அழகி, சொல்ல மறந்த கதை, ஒன்பது ரூபாய் நோட்டு உள்ளிட்ட பல படங்களை நடிகராகவும் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர் சங்கர் பச்சான் கடந்த சில வருடங்களாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.

தேர்தல் அரசியல்

தேர்தல் அரசியல்

அவர் அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இல்லையில் தான் தற்போது வெளியிட்டிருக்கும் ட்விட்டர் கருத்து சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,"அப்பழுக்கற்ற தூய்மையான எண்ணத்தோடு மக்களுக்கு பாடுபடுவது என்ற எண்ணத்தோடு மட்டுமே ஒரு ரூபாய் கூட செலவழிக்க முடியாத ஒருவர் இனிமேல் நாடாளுமன்ற உறுப்பினராகவோ சட்டமன்ற உறுப்பினராகவோ தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதா?

 சுதந்திரம்

சுதந்திரம்

இது என்னுடைய கேள்வி மட்டுமே அல்ல வாக்குகளை கையில் வைத்துக் கொண்டிருக்கிற ஒவ்வொரு இந்திய வாக்காளர்களின் கேள்வி அரசியல் தொழிலை தேர்ந்தெடுத்து விட்டால் எந்த தொழிலை தொடங்கி விடலாம் எதையும் சாதித்து விடலாம் என்கிற நிலையை தான் இந்த விடுதலை (சுதந்திரம்) நமக்கு பெற்று தந்திருக்கிறது.

சில குடும்பங்கள்

சில குடும்பங்கள்

ஒரு சில வெள்ளைக்காரர்கள் இந்தியாவை ஆண்டது போல் ஒவ்வொரு மாவட்டத்தையும் ஒரு சில குடும்பங்கள் மட்டுமே இந்த தேர்தல் அரசியலால் ஆண்டு கொண்டிருக்கின்றனர் இதில் சுதந்திரம் என சொல்லப்படுகின்ற விடுதலை எதை சாதித்துக் கொண்டிருக்கிறது" என அதில் கூறியுள்ளார். இதில் மாவட்டங்களில் ஒருசில குடும்பங்களில் என யாரை குறிப்பிட்டிருக்கிறார் தங்கர் பச்சான் என விவாதம் எழுந்துள்ளது.

English summary
Director Thangar Bachchan posted that every district is ruled by a few families this year just like a few white men ruled India ; ஒரு சில வெள்ளைக்காரர்கள் இந்தியாவை ஆண்டது போல ஒவ்வொரு மாவட்டத்தையும் ஒரு சில குடும்பங்கள் மட்டுமே இந்த ஆண்டு கொண்டு இருக்கின்றன என இயக்குநர் தங்கர் பச்சான் பதிவிட்டுள்ளது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X