சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சும்மாவே கட்டி உருளுவாங்க.. சுதா நியமனத்தில் வெடித்து கிளம்பும் பூசல்.. தமிழக காங்கிரஸில் பரபரப்பு

மகிளா காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்ததற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: சும்மாவே கட்டி உருளுவாங்க.. இப்போ சுதா நியமனம் விஷயத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் இன்னும் புகைச்சல் அதிகமாகி வருகிறது.. மகிளா காங்கிரஸ் தலைவியாக சுதாவை நியமனம் செய்ததில் இருந்தே இந்த விவகாரம் கிளம்பிவிட்டது.. அது எப்போது வெடிக்க போகிறது என்பதுதான் மேட்டரே!

எப்போதுமே காங்கிரஸ் மகளிரணி தலைவர் பதவியை பிடிக்க கட்சிக்குள் கடும் போட்டி நிலவும்.. எப்படியாவது தனது ஆதரவாளர்களுக்குப் பதவி வாங்கிக்கொடுத்து விட வேண்டும் ஏதாவது 2 தரப்பினர் மல்லுக்கட்டுவார்கள்..

அப்படித்தான் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரமும் ஈவிகேஎஸ் இளங்கோவனும் எதிரெதிர் துருவங்களில் நின்று, கடைசியில் டெல்லி வரைக்கும் கூட பஞ்சாயத்துக்கு போய் நின்றிருக்கிறார்கள்.

அவசரப்படாதீங்க... அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை உரிய நேரத்தில் அறிவிப்போம் என்கிறார் கே.பி முனுசாமிஅவசரப்படாதீங்க... அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை உரிய நேரத்தில் அறிவிப்போம் என்கிறார் கே.பி முனுசாமி

 ஆதரவாளர் சுதா

ஆதரவாளர் சுதா

மாநில தலைவர் பதவி போட்டியை விட மகளிர் அணி தலைவர் பதவிக்குத்தான் எப்போதுமே போட்டி அதிகமாக நடக்கும்.. அப்படித்தான், தமிழக மகளிர் காங்கிரஸில், சில மாதங்களுக்கு முன்பே கோஷ்டி பூசல் தீவிரமானது.. ஹசீனா சையதுக்குத் தலைவர் பதவியை வாங்கிக்கொடுத்துவிட வேண்டும் என்று ப.சிதம்பரம் தரப்பும், தன்னுடைய ஆதரவாளர் சுதாவிற்கு சீட் வாங்கிக்கொடுத்துவிட வேண்டும் என்று ஈவிகேஎஸ் தரப்பும் தீவிரமாக இருந்தது.

 விஜயதாரணி

விஜயதாரணி

இதற்கு நடுவில் மாணிக்கம்தாகூர் நுழைந்து ஜான்சிராணி நன்றாகதான் செயல்படுகிறார்.. அவரை மாற்றினால் அடுத்தடுத்து சண்டை சச்சரவுகள் வரும்.. அதனால் அவரே தொடரட்டுமே என்று டெல்லி தலைமையிடம் பேசியதாகவும் ஒரு தகவல் கசிந்தது. இவர்கள் எல்லாம் ஒரு பக்கம் முயன்றுவந்தால், ஏற்கனவே கிடைத்ததுபோல, இந்த முறையும் பதவிகிடைக்குமா என்று விஜயதாரணி ஒரு கணக்கு போட்டு வைத்து கொண்டிருந்தார்.

துரிதம்

துரிதம்

கடைசியில் சுதாவை மகிளா காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுத்து அறிவித்தும் விட்டனர்.. கடந்த காலங்களில் மகிளா காங்கிரசை சரியாகவும், துரிதமாகவும் கொண்டு சென்றவர் விஜயதரணிதான்.. அதுபோலவே சுதாவும் செயல்படுவாரா என்பது தெரியவில்லை..சுதா நியமனம் பெரும்பாலானோருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது போல தெரிகிறது.

முத்துக்குமார்

முத்துக்குமார்

இதற்கு காரணம், 2009-ல் ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் காங்கிரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதே இந்த சுதாதான்.. அதுமட்டுமல்ல, முத்துக்குமார் என்பவர் தீக்குளித்து இறந்த போது சோனியாவை கண்டித்து போராட்டம் நடத்தி முழக்கம் எழுப்பியதும் இதே சுதா தான்.. அதனால்தான் இவரை நியமிக்கப்பட்டதற்கு காங்கிரஸில் பலமான சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

 இளைஞர்கள்

இளைஞர்கள்

மேலும் பூசல்களும் வெடித்து வருகிறதாம்.. ஆளுக்கொரு அணியாக பிரிந்திருந்தாலும், இந்த நியமன விவகாரத்தில் மட்டும் மெஜாரிட்டியாக நின்று தமிழக தலைமைக்கு எதிர்ப்பு காட்டுகிறார்களாம்.. ஆனால் ஒன்று, யார் தலைவியாக நியமிக்கப்பட்டாலும் சரி, இப்போதுள்ள காங்கிரஸ் சூழல் மிக மோசமாக உள்ளது.. அதல பாதாளத்தில் காங்கிரஸ் உள்ளது.. கூடுதல் விறுவிறுப்பு தேவை.. இளைஞர்கள் எழுச்சி தேவை.

அழகிரி

அழகிரி

குறிப்பாக வாரிசு அரசியல், கோஷ்டி பூசல்கள்.. உள்ளடி விவகாரங்கள் போன்ற சமாச்சாரங்களை தூக்கி தூரமாக போட்டுவிட்டு.. கட்சியை பலப்படுத்த வீர்யமிக்கவர்களே தேவை. இந்த கோஷ்டி பூசலிலும், நித்தம் எழும் உள்ளடி விவகாரத்திலும் சிக்கி கொண்டு கட்சியின் மாநில தலைவர் அழகிரி திணறி கொண்டிருந்தாலும், இவைகளில் இருந்து மீண்டு வந்து, சட்டசபை தேர்தலுக்கான பலப்படுத்த வேண்டிய மிக முக்கிய பொறுப்பிலும் அவர் உள்ளார்!

English summary
Dissatisfaction has arisen over the appointment of tn mahila congress chief
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X