பாஜக + தேமுதிக.. டீலிங் முடிந்தது.. ஆனால் பிரேமலதா வைத்த முக்கிய கண்டிஷன்.. என்ன நடந்தது?
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்க தேமுதிக ஆலோசனை செய்து வருகிறதாம். பாஜகவிடம் முக்கியமான கோரிக்கை ஒன்றை தேமுதிக வைத்துள்ளதாம்.
கடந்த லோக்சபா தேர்தலுக்கு தமிழ்நாட்டில் அதிமுக மெகா கூட்டணி அமைத்து இருந்தது. அதிமுக + பாஜக + பாமக + தேமுதிக இணைந்து லோக்சபா தேர்தலை சந்தித்தன. ஆனால் சட்டசபை தேர்தலின் போதே இந்த கூட்டணி உடைந்தது. தேமுதிக வெளியேறி அமமுகவுடன் கூட்டணி வைத்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக கூட்டணி மேலும் கரைந்தது. பாமக முதலில் கூட்டணியில் இருந்து வெளியேறியது.

அதிமுக ஆலோசனை: இந்த நிலையில் 2024 லோக்சபா தேர்தலுக்கான ஆலோசனைகளை அதிமுக தீவிரமாக மேற்கொள்ள தொடங்கி உள்ளது. லோக்சபா தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக சார்பாக நேற்று முதல்நாள் ஆலோசனை செய்யப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகத்தில், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அதிமுக தொகுதி பங்கீட்டு குழு ஆலோசனை செய்தது.
கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனை செய்தனர். அதாவது யாருடன் கூட்டணி வைக்கலாம்.. யாருடன் கூட்டணி வைக்க கூடாது.. எத்தனை இடங்கள் கொடுக்கலாம் என்பது தொடர்பாக ஆலோசனை செய்தனர்.
யாரும் பங்கேற்கவில்லை: ஆனால் லோக்சபா கூட்டணி பேச்சுவார்த்தைக்காக அதிமுக நடத்திய இந்த கூட்டத்தில் யாரும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது வேறு கட்சிகள் எதுவும் பங்கேற்கவில்லை. கூட்டணியில் இடம் கேட்க பெரிய கட்சி தொடங்கி சிறிய கட்சி வரை எதுவும் வரவில்லை.
முக்கியமாக பாமக, தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டு கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையை மேற்கொள்வதற்காக அதிமுகவிடம் செல்லவில்லை.
இந்த நிலையில்தான் பாஜக மூன்றாவது அணியை லோக்சபா தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி பாஜக + ஓ பன்னீர்செல்வம் + டிடிவி தினகரன் + பாரி வேந்தரின் ஐஜேகே + மற்றும் சில சிறிய கட்சிகள் இணைந்து மூன்றாவது கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டணியில் பாமக, தேமுதிக சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான திரைமறைவு பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
முக்கியமான கோரிக்கை: 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்க தேமுதிக ஆலோசனை செய்து வருகிறதாம். பாஜகவிடம் முக்கியமான கோரிக்கை ஒன்றை தேமுதிக வைத்துள்ளதாம்.
அதன்படி லோக்சபா தேர்தலில் 2 - 4 இடங்கள் ஒரே ஒரு ராஜ்ய சபா தொகுதியை கேட்க தேமுதிக முடிவு செய்துள்ளதாம். பொதுவாக தேமுதிக அதிக இடங்களை கேட்பது வழக்கம். ஆனால் இந்த முறை.. இடங்களை குறைவாக கேட்டு.,. ஒரு ராஜ்ய சபா சீட் கண்டிப்பாக வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கிறதாம்.
விஜயகாந்த் சமீபத்தில் பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். இதனால் பாஜக - தேமுதிகஇடையே நல்ல உறவு உள்ளது. அதோடு தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி கேப்டன் என்று கூறி மறைந்த விஜயகாந்தை வெகுவாக பாராட்டி இருந்தார். இந்த நிலையில்தான் பாஜகவுடன் கூட்டணியில் ஐக்கியம் ஆக தேமுதிக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
-
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்?












Click it and Unblock the Notifications