மத்திய அரசை கண்டித்து செப். 20ல் திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்: ஸ்டாலின் போட்ட அதிரடி ட்வீட்
சென்னை : மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து செப். 20ஆம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளன. அவரவர் இல்லம் முன்பு கருப்புக்கொடி ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட கூட்டணி தலைவர்கள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளனர். இந்த போராட்டத்தில் பங்கேற்க வருமாறு திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக, கொமக, மனிதநேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் 20.08.2021 நடைபெற்ற இந்திய அளவிலான எதிர்கட்சித் தலைவர்கள் பங்கேற்ற காணொலி கூட்டத்தில், "மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது பெட்ரோல் டீசல் சமையல் எரிவாவு விலை உயர்வு தொடருவது, விலைவாசி உயர்வு பொருளாதார சீழிவு, தனியார்மயமாக்கம், வேலை இல்லாத் திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பிகாசஸ் ஒட்டுக் கேட்பு" உள்ளிட்ட ஒன்றிய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத - ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து நாடு முழுவதும் செப்டம்பர் 20 முதல் 30ம் தேதி வரை பல்வேறு போராட்டங்களை நடத்துவது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி ஒன்றிய பாஜக, அரசின் செயல்களைக் கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான அனைத்து கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் மாநிலம் முழுவதும் 20-09-2021 (திங்கட் கிழமை) அன்று காலை 10.00 மணி அளவில், தங்களின் இல்லம் முன்பு கருப்புக் கொடி எந்தி கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். ஒருங்கிணைந்து போராடுவோம். மதசார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசைப் பாதுகாப்போம்." இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழக முதல்வரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட் பதிவில், "வேளாண் சட்டம், தொடர் விலையேற்றம், பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கல், பெகாசஸ் ஒட்டுக்கேட்பு உள்ளிட்ட பாஜக அரசின் மக்கள் - ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்து 20-9-2021 அன்று திமுக தலைமையிலான கூட்டணிக்கட்சியினர் தங்கள் இல்லம் முன்பு கருப்புக்கொடி ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டிடக் கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு ட்வீட் பதிவில் கூறியுள்ளார்.
-
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
சொந்த தொகுதியில் டெபாசிட் வாங்க முடியல! எங்களை விமர்சிப்பதா? ஒரே காமெடி! சீமானுக்கு காங்கிரஸ் பதிலடி -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம்












Click it and Unblock the Notifications