தமிழகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடனான திமுக கூட்டணி தொடரும்: அழுத்திச் சொன்ன ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆரோக்கியமான கூட்டணி தொடரும் என்றும் இது தேர்தலுக்கான கூட்டணி அல்ல கொள்கைக்கான கூட்டணி என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வருகையால் திமுக பாஜக இடையே கூட்டணி ஏற்பட போவதாக தகவல் வெளியான நிலையில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

Recommended Video

    பாஜக கூட்டணி கிடையாது திமுக கூட்டணி நீடிக்கும்- மு.க.ஸ்டாலின்

    சென்னை மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்திருந்தார்.

    பிரதமர் தமிழகம் வந்த சூழலில், முதலமைச்சரும், பிரதமரும் ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர். அப்போது பிரதமர் மோடியும் முதல்வர் ஸ்டாலினும் பேசி சிரித்தனர். மேடையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் மோடியை புகழ்ந்தார். மத்திய அரசுக்கு எதிராக எந்தவிதமான விமர்சனமும் வைக்கவில்லை. அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலினும் மோடியையோ, மத்திய அரசையோ விமர்சித்து பேசவில்லை. புதிய கல்வி கொள்கைப் பற்றி பேசவில்லை.

     கூட்டணியில் மாற்றமா?

    கூட்டணியில் மாற்றமா?

    இதை பார்த்து பிரதமரின் வருகையால் திமுக மற்றும் பாஜக இடையே நெருக்கம் கூடி விட்டதாகவும் இரு கட்சிகளிடையே கூட்டணி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவின. அதற்கு ஏற்றார் போல செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது.

     அண்ணாமலை

    அண்ணாமலை

    2 பயணமாக சென்னை வந்த பிரதமர் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா முடிந்து சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் பிரதமா் இரவு தங்கினார். அப்போது, மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டவர்களை சந்தித்தார். பிரதமருடனான ஆலோசனைக்கு பின்னர் பாஜத தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியை தமிழக அரசு மிக சிறப்பாக செய்தது என்றார்.

     முதல்வரை பாராட்டிய அண்ணாமலை

    முதல்வரை பாராட்டிய அண்ணாமலை

    இதில் தமிழர்களின் 5 ஆயிரம் ஆண்டு தொன்மை பிரதிபலிக்கப்பட்டது என்பது ஒரு தமிழனாக பெருமைப்படுகிறேன். செஸ் ஒலிம்பியாட் விழா மூலமாக இந்தியாவையும் நமது கலாசாரத்தையும் பெருமைப்படுத்திய தமிழக அரசுக்கும், முதல்வர் மு,க.ஸ்டாலினுக்கும் பாராட்டுகள் என கூறினார். தமிழக முதல்வர், முதல்வராக நடந்துகொண்டார். செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தியதற்காக முதல்வரை பாராட்டுகிறோம் என்றார்.

     கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை

    கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை

    செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் பிரதமருடன் இணக்கம் காண்பித்ததை தொடர்ந்து திமுக - பாஜக கூட்டணிக்கு வாய்ப்புண்டா என்ற கேள்வி அண்ணாமலையிடம் முன்வைக்கப்பட்டது. அதற்கு, "பாஜக ஒரு கொள்கை ரீதியான கட்சி. தன்னுடைய கொள்கையை பாஜக எப்போதும் மாற்றிக்கொள்ளாது. கடந்தமுறை பிரதமர் சென்னை வந்தபோது நடந்த சம்பவங்களை வைத்து 'முதல்வர் பெரிய மனோதோடு நடந்துகொண்டிருக்க வேண்டும். அரசு விழா என்பது அரசியல் பேசுவதற்கான களம் கிடையாது என்றும் கூறினார்.

     முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

    முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

    இந்த நிலையில் தமிழக்தில் திமுக தலைமையிலான கூட்டணி தொடரும் என்று கேரள மாநிலம் திருச்சூரில் மனோரமா நியூஸ் நடத்தும் கான்க்ளேவ் கருத்தரங்கில் காணொளி வாயிலாக பேசிய முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் திமுக உடனான ஆரோக்கியமான கூட்டணி நீடிப்பதாக விளக்கமளித்துள்ளார். சிபிஎம் உடனான கூட்டணி, கொள்கை கூட்டணி, அது தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

     சாத்தியமேயில்லை

    சாத்தியமேயில்லை

    இந்தியா என்பது கூட்டாட்சி கோட்பாட்டை மதித்து நடக்க வேண்டும்; ஆனால், அதற்கு எதிரான செயல்கள் நடைபெறுகின்றன. நாடாளுமன்றத்தில் முக்கிய பொருட்கள் குறித்து பேசுவதற்கு, எம்.பிக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மாநிலங்கள் சுயமாக தன்னிறைவு பெற்றவையாக இருப்பது தான் இந்தியாவிற்கு
    பலம் ஆகும். இந்தியாவுக்கு ஒரே ஒரு தேசிய மொழி என்பது எப்போதும் சாத்தியமில்லைஒரே நாடு, ஒரே மொழி என்போர், நாட்டின் எதிரிகள் இந்தியாவுக்கு ஒரே ஒரு தேசிய மொழி என்பது எப்போதும் சாத்தியமில்லை. மாநிலங்கள் சுயமாக தன்னிறைவு பெற்றவையாக இருப்பது தான் இந்தியாவிற்கு பலம் ஆகும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+