Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொய்களை கட்டவிழ்க்கும் திமுக எம்பிக்கள்.. உண்மைக்கு புறம்பாக பேசும் பிடிஆர்.. அண்ணாமலை ஆக்ரோஷம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக அரசின் பொய்களை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தோலுரித்து காட்டிய நிலையில் தமிழக திமுக, காங்கிரஸ் எம்பிக்கள் பொய்களை கட்டவிழ்த்துவிடுகின்றனர். மேலும் ஜிஎஸ்டி, பெட்ரோல், டீசல் விலை தொடர்பாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உண்மைக்கு புறம்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்தார்.

Recommended Video

    மாநில நிதி அமைச்சரின் அறிக்கையில் முன்னுக்குப்பின் முரணாக பல கருத்துகள் இருக்கு - அ ண்ணாமலை குற்றச்சாட்டு

    நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 18 ல் துவங்கி நடைபெற்று வருகிறது. திங்கட்கிழமை விலைவாசி உயர்வு பற்றிய விவாதம் நடந்தது. இதில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.

    அப்போது பேசிய திமுக எம்பி கனிமொழி, ஜிஎஸ்டி, விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை என மத்திய அரசை கடுமையான விமர்சித்து பேசினார். இதற்கு நிதி அமைச்சர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளது என்றார்.

    திமுகவை விமர்சித்த நிர்மலா சீதாராமன்

    திமுகவை விமர்சித்த நிர்மலா சீதாராமன்

    இதுதொடர்பாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‛‛தமிழகத்தில் தேர்தலுக்கு முன்னர் பெட்ரோலுக்கு ரூ.5 குறைப்பதாக திமுக வாக்குறுதியளித்தது. அதேபோல டீசலுக்கு ரூ.4 குறைப்பதாகவும் திமுக வாக்குறுதி தந்தது. எல்பிஜி சிலிண்டருக்கு மானியம் தருவதாகவும் உறுதியளித்தது. இதனை கூறியபடி செய்யவில்லை. லையை உயர்த்தியதற்காக ஜிஎஸ்டியை காரணம் காட்டும் நீங்கள், பழியை ஜிஎஸ்டி கவுன்சில் மீது போட்டு விட்டு அதிக விலைக்கு பொருட்களை விதிக்கிறீர்கள். ஆனால், ஜிஎஸ்டி என்பது மத்திய அரசாங்கம் கிடையாது. அதில் அங்கமாக இருப்பது உங்களுடைய அமைச்சரும்தான். அவரும்தான் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். ஏகமனதாக எல்லோரும் ஒருமித்த அடிப்படையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுகிறது." என்றார்.

     பதிலடி கொடுத்த பழனிவேல் தியாகராஜன்

    பதிலடி கொடுத்த பழனிவேல் தியாகராஜன்

    இதற்கு தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை விட்டார். அதில், ‛‛மத்திய நிதியமைச்சர் கூறியது கால்வாசி உண்மை. ஜிஎஸ்டியில் வரி மாற்றம் கொண்டு வர வேண்டுமானால் அதற்கு முதற்படி பிட்மண்ட் கமிட்டி. அதில், ஐஏஎஸ் அதிகாரிகள் இருப்பர். அக்குழுவில் தமிழகத்தின் வணிக வரி ஆணையரான ஐஏஸ் அதிகாரி இருக்கிறார். கூட்டத்தில் அவர் எழுத்து பூர்வமாகவும், வாய் மொழியாகவும் எதிர்ப்பு தெரிவித்தார். அடுத்த படிநிலை, வரி அளவை சீர்திருத்துவதற்காக உருவாக்கப்பட்டது. அதில் நான் இல்லை'' என கூறியிருந்தார். அதோடு, ‛‛கடந்த ஏழு ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசல் மீது ஒன்றிய அரசு தனது வரியை மிக அதிகமாக பலமுறை உயர்த்தி வந்தது. இதனால்,ஒன்றிய அரசிற்கு வருவாய் பல இலட்சம் கோடி ரூபாய் உயர்ந்திருந்தாலும், அதற்கேற்ப, மாநில அரசுகளின் வருவாய்களில் உயர்வு ஏற்படவில்லை. ஏனென்றால், மாநில அரசுகளுடன் பகிரக்கூடிய கலால் வரியைக் குறைத்து, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்களை ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது'' எனவும் விமர்சனம் செய்திருந்தார்.

    அண்ணாமலை விளக்கம்

    அண்ணாமலை விளக்கம்

    இதுதொடர்பாக சென்னையில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி விளக்கம் அளித்தார். அப்போது அண்ணாமலை கூறியதாவது: ஜிஎஸ்டி கவுன்சில் என்பது மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து செயல்படுவது. இதில் எந்த மாநிலமும் எந்த மாநிலத்தையும் வஞ்சிக்க முடியாது.

    பொய்கள் கட்டவிழ்க்கப்படுகிறது

    பொய்கள் கட்டவிழ்க்கப்படுகிறது

    2017ல் இருந்து 2022 ம் ஆண்டு வரை ஒவ்வொரு மாநிலத்துக்கும் 14 சதவீதம் வரை வருவாய் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த வளர்ச்சி இல்லாவிட்டால் ஜிஎஸ்டிக்கான இழப்பீட்டை மத்திய அரசு கொடுக்கும் என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்துள்ளது. கொரோனா காலத்தில் மத்திய அரசு கூறியதுபோல் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சார்பில் இன்றைய தேதிக்கு தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி என்பது ஜீரோ. ஏனென்றால் அனைத்தும் கொடுத்தாகிவிட்டது. ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பாக பொய்கள் கட்டவிழ்த்து விடப்படுகிறது. தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் எம்பிக்கள் பொய்களை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

    உண்மைக்கு புறம்பானது

    உண்மைக்கு புறம்பானது

    தமிழக நிதி அமைச்சரின் அறிக்கை உண்மைக்கு புறம்பாக உள்ளது. ஆடத்தெரியாதவர் மேடை கோணல் என கூறுவது போல் தமிழக நிதி அமைச்சரின் அறிக்கை உள்ளது. குறிப்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநில அரசின் பொய்களை தோலுரித்து காட்டியுள்ளார். திமுகவின் தேர்தல் அறிக்கை 2021 மார்ச் மாதம் வெளியிட்டனர். பெட்ரோல் மீது ரூ.5ம், டீசலுக்கு ரூ.4 குறைப்போம், எல்பிஜி சிலிண்டர் விலையை ரூ.100 குறைப்போம் என கூறியிருந்தனர்.

    வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக

    வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக

    திமுகவின் தேர்தல் அறிக்கை வருவதற்கு முன்பு பாஜகவின் பட்ஜெட் 2021 பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்டது.அப்போது எங்கும் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பற்றி குறிப்பிடவில்லை. இந்நிலையில் தற்போது திமுகவால் தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்ற முடியாமல் மத்திய அரசை திமுகவின் குறை கூறுகின்றனர். மத்திய அரசு கடந்த 6 மாதமாக பெட்ரோல் மீது ரூ.14.50 பைசா, டீசலுக்கு ரூ.17 குறைத்துள்ளது. மாநில அரசு பெட்ரோலுக்கு ரூ.3 மட்டுமே குறைத்துவிட்டு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மத்திய அரசு மீது திமுக குற்றம்சாட்டுகிறது.

    தமிழகத்துக்கு தான் அதிகம்

    தமிழகத்துக்கு தான் அதிகம்

    மத்திய அரசு சார்பில் தமிழகத்தில் நெடுஞ்சாலை, துறைமுகம், ரயில்வே துறையில் ரூ.2.3 லட்சம் கோடி நிதி வழங்கி வேலை நடக்கிறது. கடந்த 8 ஆண்டில் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ரூ.7.5 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. தமிழக நிதி அமைச்சர் நிதி பகிர்வு ஒன்றை மட்டும் 4.09 என குறிப்பிடுகிறார். மத்திய அரசு நேரடியாக வழங்குவது மற்றும் சிறப்பு நிதி மற்றும் ரயில்வே, கதி சக்தி உள்ளிட்டவற்றுக்கு நிதி வழங்குகிறது. கடந்த 8 ஆண்டில் பட்ஜெட்டில் எந்த மாநிலத்துக்கும் ரூ.7.5 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்கியதே இல்லை'' என்றார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+