சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பழைய ஓய்வூதியம் திரும்ப வரும்.. ஒட்டுமொத்த அரசு ஊழியர்களையும் வளைத்த திமுக!

Google Oneindia Tamil News

Recommended Video

    DMK Manifesto List: திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை - முழுவிவரம்

    சென்னை: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    வழக்கம் போல் ஒவ்வொரு தேர்தலின் போதும் மக்களை கவரும் பல்வேறு திட்டங்கள் அறிக்கையாக தயாரிக்கப்பட்டு அதை முக்கிய கட்சிகள் வெளியிடும்.

    அந்த வகையில் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக- காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றன. இந்த நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கையை இன்று ஸ்டாலின் வெளியிட்டார். அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

    2019 மக்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர் லிஸ்ட்: முழு பட்டியல் 2019 மக்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர் லிஸ்ட்: முழு பட்டியல்

    நிச்சயம்

    நிச்சயம்

    இந்த நிலையில் ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் அனைவரையும் திருப்திப்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை அறிக்கையாக தயார் செய்துள்ளார். அதில் ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க அரசு ஊழியர்கள், அரசு ஆசிரியர்களின் தயவு நிச்சயம் தேவை.

    வளைத்த திமுக

    வளைத்த திமுக

    அவர்களது நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் என்று தேர்தல் அறிக்கையில் உறுதியளித்ததன் மூலம் அரசு ஊழியர்களையும் திமுக வளைத்து போட்டு விட்டது என்றே கூறலாம்.

    கை விரிப்பு

    கை விரிப்பு

    பழைய ஓய்வூதிய திட்டத்தை கோரி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டத்தை நடத்தினர். அப்போது பள்ளிகளும், அரசு அலுவலகங்களும் ஸ்தம்பித்தது. அப்போது அதிமுக அரசோ தற்போது நிதி நிலைமை சரியில்லை, எனவே பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது கடினம் என கூறி கையை விரித்துவிட்டது.

    பூரிப்பு

    பூரிப்பு

    மேலும் அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப எச்சரிக்கை விடுத்தும் யாரும் பணிக்கு திரும்பவில்லை. போராட்டத்தை மேலும் மேலும் தீவிரப்படுத்தினர். இதனால் பல்வேறு தரப்பினரை போலீஸார் கைது செய்தனர். அரசு ஊழியர்கள் தாங்கள் பட்ட கஷ்டங்களுக்கு விடிவுகாலம் பிறந்தால் சரி என திமுக தேர்தல் அறிக்கையை பார்த்து பூரித்து போகின்றனர்.

    English summary
    DMK releases election manifesto by satisfying Jacto Geo association.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X