திருந்தாத திமுக... ஓராண்டு ஆட்சி சாதனையல்ல... மக்களுக்கான சோதனை.. டிடிவி தினகரன் கொதிப்பு
சென்னை: ‛‛திமுக பதவிக்கு வந்த கொஞ்ச காலத்துக்காவது நல்லது செய்வார்கள் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அப்படி எந்த அறிகுறியும் இந்த ஆட்சியில் தெரியவில்லை. காரணம் திமுக இன்னும் மாறவில்லை. இன்னும் திருந்தவில்லை. திமுகவின் ஓராண்டு ஆட்சி சாதனையல்ல. தினம் தினம் மக்களுக்கான சோதனை'' என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் காட்டமாக கூறியுள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றார். திமுக தமிழகத்தில் ஆட்சியை பிடித்து ஓராண்டு முடிவடைந்துள்ளது.
இந்த ஓராண்டில் திமுக பல சாதனைகளை செய்துள்ளதாக கூட்டணி கட்சியினர் கூறி வரும் நிலையில் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் திமுக ஆட்சியின் குறைகளை பட்டியலிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது:

சாதனையல்ல சோதனை
திமுகவின் ஓராண்டு கால ஆட்சி விளம்பரப்படுத்தி கொள்வதை போல சாதனையல்ல. தமிழ்நாட்டு மக்களுக்கு தினம் தினம் சோதனையாகவே அமைந்திருக்கிறது. திமுக தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த முக்கிய வாக்குறுதிகள் பலவற்றை காற்றோடு பறக்கவிட்டுள்ளது. சொத்து வரியை உயர்த்த மாட்டோம் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னவர்கள் இப்போது மனசாட்சியே இல்லாமல் சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்தி மக்களை வதைக்கிறார்கள்.

பொய் வாக்குறுதிகள்
ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ஒழிப்போம் என்றவர்கள் இப்போது தீர்மானம் நிறைவேற்றியதாக பெருமைப்பட்டு கொள்கிறார்கள். 5 பவுன் வரை கூட்டுறவு வங்கிகளில் வைத்த நகைக்கடன் எல்லாம் தள்ளுபடி என்றார்கள். இப்போது எதேதோ கணக்குகளை சொல்லி நகைக்கடன்களை தள்ளுபடி செய்தாகிவிட்டது என்று வாய்க்கூசாமல் அடித்து விடுகிறார்கள். மாணவர்கள் வாங்கிய கல்விக்கடன்களை எல்லாம் தள்ளுபடி செய்துவிடுவோம் என்று இவர்களால் முடியாது என்று தெரிந்தும் பச்சையாக பொய் வாக்குறுதியை கொடுத்தார்கள்.

பழைய ஓய்வூதிய திட்டம்
அரசு ஊழியர்களுக்க பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவோம் என்று சொன்னார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு அதைபற்றி மூச்சே விட மறுக்கிறார்கள். கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து முன்களப்பணியாளர்களாக சேவையாற்றிய மருத்துவர்களையும், செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்வோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் இப்போது அவர்களை உதாசீனப்படுத்துகிறார்கள். அம்மா மினி கிளினிக்குகளை மூடி அதில் வேலைபார்த்த மருத்துவர்களையும் செவிலியர்களையும் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.

நிலுவை தொகை...
நெல்லுக்கு ஆதார விலையை உயர்த்தியுள்ளோம் என்கிறார்கள். ஆனால் நெல் கொள்முதல் நிலையங்களை சரியான நேரத்தில் திறக்காமலும் முறையாக கொள்முதல் செய்யாமலும் விட்டதால் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் வீணாகின. கரும்புக்கான கொள்முதல் விலையை சிறிதளவு உயர்த்தி விட்டோம் என்கிறார்கள். ஆனால் ஆண்டுக்கணக்கில் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் நிலுவை தொகையை பெற்றுத்தர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஊதியம் இல்லை
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விவசாயிகளுக்கு தொடர்ந்து இடையூறுகளையும் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தும் வகையில் எண்ணெய் நிறுவனங்கள் ராட்சத குழுாய்களை கொண்டு வந்து இறக்குவதற்கு துணை போகிறார்கள். டிஆர்பி தேர்வில் தேர்ச்சி பெற்று பல ஆண்டுகளாக காத்திருப்போருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் சொல்லிவிட்டு இப்போது மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். திமுக காவல்துறையின் பணிப்பளுவை குறைக்கும் வகையில் பங்காற்றும் ஊர்காவல்படை வீரர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.

திட்டங்களுக்கு மூடுவிழா
ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை நிறுத்துவதும் பெயர் மாற்றம் செய்வதுமான வேலையை திமுக அரசு சத்தமில்லாமல் செய்து வருகிறது. ஏழை, எளிய மக்கள், தொழிலாளர்கள் முதியவர்கள் என எத்தனையோ பேரின் பசியை போக்கிய அம்மா உணவகங்களை மூட துடிக்கிறார்கள். அதற்கு பதிலாக கருணாநிதி பெயரில் புதிய உணவகங்களை திறக்கப்போகிறார்களாம். இப்படி அடுத்தவர் திட்டங்களை திருடி தங்கள் பெயரை வைத்து கொள்வதுததான் திராவிட மாடலா?. தாலிக்கு தங்கம் திட்டம், அம்மா இருசக்கர வாகன திட்டம், விலையில்லா ஆடு, மாடு வழங்கும் திட்டம், தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட பரிசு பெட்டகம் திட்டம், மாணவர்களுக்கான மடிக்கணினி திட்டம், அம்மா குடிநீர் திட்டம், அம்மா சிமெண்ட் திட்டம் இப்படி பல்வேறு தரப்பு மக்களுக்கும் பயன்தரக்கூடிய வகையில் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களுக்கு எல்லாம் ஸ்டாலின் அரசு மூடுவிழா நடத்தி வருகிறது.

இருண்டுவிடும் தமிழ்நாடு
தீயசக்தியான திமுக ஆட்சிக்கு வந்தாலே தமிழ்நாடு இருண்டுவிடும் என்பது மீண்டும் நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது. மின்சாரமில்லாமல் மக்களை விடியவிடிய விழித்திருக்க வைப்பதுதான் விடியல் அரசு என்று சொல்கிறார்கள் போலும். சென்னையில் தொடங்கி பல இடங்களில் திமுக கவுன்சிலர்கள் புதிதாக வீடு கட்டுபவர்களிடம் மிரட்டி பணம் பறிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். சேலத்தில் திமுக பெண் கவுன்சிலர் நைட்டியோடு கோவிலுக்கு சென்று அர்ச்சகரை மிரட்டி இருக்கிறார்.

திரைத்துறையில் கபளீகரம்
தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளை ஸ்டாலின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க தொடங்கிவிட்டார்கள் என்றும் இந்த ஜெயிண்ட்களை மீறி எதுவும் செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் திரையரங்க உரிமையாளர்கள் விழிபிதுங்கி நிற்பதாகவும் செய்திகள் வருகின்றன. யார் தயாரித்தாலும் படத்தை இவர்களிடம் தான் விற்க வேண்டும் என்ற எழுதப்படாத விதி உருவாகியிருப்பதாகவும், இவர்கள் தான் எந்த படம் எந்தெந்த திரையரங்குகளில் திரையிட வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. மொத்தத்தில் 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் செய்ததை போல் மீண்டும் திரைத்துறையை கருணாநிதி குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக கபளீகரம் செய்ய துடிக்கிறார்கள் என்றும், கருணாநிதி குடும்பத்தினரின் ஆக்டோபஸ் கரங்கள் ஒவ்வொரு துறையாக நீளத் தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒத்தடம் கொடுக்கும் திமுக
திமுகவின் மூத்த அமைச்சர் ஒருவர் பட்டியலின சமூகத்தை சேர்ந்த அதிகாரியை பொதுவெளியில் சாதிப்பெயரை சொல்லி திட்டுகிறார். ஆனால் அவரை சமூகநீதியை காப்பாற்ற வேண்டிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றி ஸ்டாலின் ஒத்தடம் கொடுக்கிறார். சிறுவணிகர்களை பாதிக்கும் என்று இவர்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது எதிர்த்த அமெஸான், லூலூ நிறுவனங்களை இப்போது தமிழ்நாட்டுக்கு கொண்டு வருகிறார்கள். இதனால் சிறு வணிகர்கள் பாதிக்கப்படமாட்டார்களா?.

சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு
உதவித்தொகையை உயர்த்த கேட்டு அமைதியாக போராட்டம் நடத்தி வந்த மாற்றத்திறனாளிகளை காவல்துறையினரை வைத்து கைது செய்து துன்புறுத்துகிறார்கள். காவல் நிலைய லாக்அப் மரணங்கள் அதிகமாகி வருகின்றன. கொலை, கொள்ளை, பெண்கள் - சிறுமிகளுக்கு எதிராக குற்றங்கள் அதிகரிப்பு என சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.

அணைகளில் உரிமை இழப்பு
தமிழகத்தின் ஒரே ஜீவாதார நதியான காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுவதற்கு 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கும் அளவுக்கு கர்நாடகா வந்துவிட்டது. இதனை தடுத்து நிறுத்த உருப்படியான ஒரு நடவடிக்கையையும் திமுக அரசம் முதல்வர் ஸ்டாலினும் எடுத்தததாக தெரியவில்லை. நூறாண்டுகளுக்கு மேலாக முல்லைப்பெரியாறு அணை கட்டப்பட்ட காலத்தில் இருந்து தமிழ்நாட்டிடம் இருந்து வரும் தண்ணீர் விடும் உரிமையையும் கேரளாவிடம் விட்டு கொடுத்துவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.
திமுக பதவிக்கு வந்த கொஞ்ச காலத்துக்காவது நல்லது செய்வார்கள் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அப்படி எந்த அறிகுறியும் இந்த ஆட்சியில் தெரியவில்லை. காரணம் திமுக இன்னும் மாறவில்லை. இன்னும் திருந்தவில்லை. மக்களை ஏமாற்றும் மனப்பான்மை இவர்களை விட்டு விலகவில்லை என்பதைத்தான் இந்த ஓராண்டு கால ஆட்சி நமக்கு சொல்லும் செய்தி. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அதுபோலத்தான், இந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சிக்கு கடந்த ஓராண்டு காலம் தான் உதாரணம்
இவ்வாறு கூறியுள்ளார்.
-
ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கு வருவாரா? நேரடியாக கேட்ட திமுக.. பதில் சொல்ல தயங்கும் காங்கிரஸ்! -
"எனக்கும் மரணம் வரும்.. என்னைப் புதைத்தாலும் எனது திட்டங்களைப் புதைக்க முடியாது” - முதல்வர் ஸ்டாலின் -
234 தொகுதியிலும் திமுக கூட்டணிதான்.. யார் என்ன செய்தாலும் வெற்றியை தடுக்க முடியாது - ஸ்டாலின் உறுதி -
ஸ்டாலினா? எடப்பாடியா? உண்மையிலேயே யார் 'கெத்து'? ரெக்கார்டு என்ன சொல்லுது? -
Corona: முதல்வர் ஸ்டாலினே கொரோனாவால் போயிருப்பார்! ஆனால்..! எடப்பாடி பழனிசாமி சர்ச்சை பேச்சு! -
சென்னையில் எந்தெந்த சமூகத்தினருக்கு எம்.எல்.ஏ சீட்? திமுக பிரதிநிதித்துவ ஃபார்முலா! -
சென்னை மெட்ரோ ரயிலில் திடீரென சர்ப்ரைஸ் கொடுத்த ஸ்டாலின்.. செல்ஃபி எடுத்த பயணிகள் -
அடித்தாடும் ஸ்டாலின்.. இன்று 4 ஆம் கட்ட பரப்புரை.. தஞ்சாவூரில் தொடங்குகிறார் முதல்வர் -
"எடப்பாடி பழனிசாமி விருப்பப்படி நான் மண்ணுக்கு போகலாம், ஆனால்.." ஸ்டாலின் தந்த பதிலடி -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி












Click it and Unblock the Notifications