சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேதரத்தினத்தை தொடர்ந்து பாஜகவிலிருந்து மேலும் சிலர்... பேச்சுவார்த்தை நடத்தும் திமுக

Google Oneindia Tamil News

சென்னை: பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த வேதரத்தினம், பி.டி.அரசகுமார் வரிசையில் மேலும் சிலர் இடம்பெறக் கூடும் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுக துணை பொதுச்செயலாளராக இருந்த வி.பி.துரைசாமியை பாஜக தன் பக்கம் இழுத்துக்கொண்டதற்கு பதிலடியாக, கட்சிக்கு அப்பாற்பட்டு செல்வாக்கு மிக்க நபரான வேதரத்தினத்தை திமுக தன் பக்கம் வளைத்தது.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மாற்றுக்கட்சிகளில் இருந்தும், புதிதாகவும் பலரை பாஜகவில் இணைக்க அக்கட்சியின் மாநில தலைமை தீவிரம் காட்டி வருகிறது.

அதிமுகவை கழற்றிவிடுகிறோம்-.காங்.க்கு குட்பை சொல்லுங்க-திமுகவுக்கு சிக்னல் கொடுத்தது சிபிஆர். பேட்டி?அதிமுகவை கழற்றிவிடுகிறோம்-.காங்.க்கு குட்பை சொல்லுங்க-திமுகவுக்கு சிக்னல் கொடுத்தது சிபிஆர். பேட்டி?

அரசியல் யுத்தம்

அரசியல் யுத்தம்

தமிழகத்தில் திமுக -அதிமுக இடையே நடைபெற்ற அரசியல் யுத்தம் அண்மையில் திமுக -பாஜக என்கிற வகையில் மாறியுள்ளது. திமுக மீது பாஜக தொடர் விமர்சனங்களை முன் வைப்பதும் அதற்கு ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், துரைமுருகன் போன்றோர் மூலம் திமுக பதிலடி தருவதும் வாடிக்கையாகி வருகிறது. போட்டி திமுகவுக்கும் அதிமுகவுக்குமா இல்லை திமுகவுக்கும் பாஜகவுக்குமா என்கிற ரீதியில் அரசியல் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.

வளைக்க தீவிரம்

வளைக்க தீவிரம்

இதனிடையே திமுக தலைமை மீது அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளையும், முன்னாள் மக்கள் பிரதிநிதிகளையும், வளைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு முன்னோட்டமாக திமுகவில் துணைப் பொதுச்செயலாளராக இருந்த வி.பி.துரைசாமியை பாஜகவில் இணைத்து திமுகவுக்கு அதிர்ச்சி அளிக்கப்பட்டது. மேலும், முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம், முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் உள்ளிட்ட சிலருடன் பாஜக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

இந்நிலையில் பாஜகவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அங்கிருந்து சில முக்கிய பிரமுகர்களை திமுகவில் இணைக்க முயற்சி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மீது அதிருப்தியில் உள்ள நிர்வாகிகள், பொறுப்பு எதிர்பார்த்து கிடைக்காத பிரமுகர்களை வளைக்க திமுக தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பி.டி.அரசகுமாரிடம் இதற்கான அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

புதிய முகங்கள்

புதிய முகங்கள்

இதனிடையே தமிழக பாஜகவில் பல புதிய முகங்களும், தொழிலதிபர்களும் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது. தொழிலதிபர்கள் ஆனந்தீஸ்வரர், மைதிலி ஸ்ரீகாந்தன், டெய்ஸி சரண், திருச்சி ராஜா, என பலரும் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதேபோல் திரைத்துறை பிரபலங்கள் சிலரையும் பாஜகவில் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தெரிகிறது.

English summary
dmk is trying to pull some people from the bjp
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X