Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொங்கல் அன்று நடைபெற உள்ள யுஜிசி நெட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்.. டெல்லிக்கு கடிதம் எழுதிய கனிமொழி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பண்டிகையன்று நடைபெற உள்ள யுஜிசி நெட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கனிமொழி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் நாளன்று தேர்வு நடத்தக் கூடாது என கனிமொழி எம்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கல்லூரி உதவி பேராசிரியர், ஜேஆர்ஃப் மற்றும் பிஎச்.டி சேர்க்கை உள்ளிட்டவற்றுக்கு தகுதித் தேர்வான யுஜிசி நெட் தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாற்றும் டிசம்பர் என இரண்டு முறை இந்தத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

ugc kanimozhi pongal 2025

யுஜிசி நெட் தேர்வு

2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாத தேர்விற்கான அறிவிப்பு கடந்த நவம்பர் மாதம் வெளியானது. இதற்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 11 ஆம் தேதி வரை பெறப்பட்டன. நாடு முழுக்க பல ஆயிரம் பேர் இந்தத் தேர்வுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்தனர். இந்நிலையில் யுஜிசி நெட் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

85 பாடங்களுக்கு ஜனவரி 3 ஆம் தேதி முதல் தொடங்கி ஜனவரி 16 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழர் பண்டிகையான பொங்கல் திருநாள் கொண்டப்படும் ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நெட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொங்கல் அன்று

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை, மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம் வரும் ஜனவரி 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. 85 பாடங்களுக்கு பாட வாரியாக வெளியிடப்பட்ட தேர்வு அட்டவணையில், தமிழர் பண்டிக்கையான பொங்கல் திருநாட்கள் கொண்டாடப்படும் ஜனவரி 15 மற்றும் ஜனவரி 16 ஆகிய தேதிகளில் 2 ஷிப்ட் முறையில் பல்வேறு பாடங்களுக்கு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிக்கை அன்று, பலர் தங்களில் சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்தினருடன் கொண்டாட திட்டமிட்டு இருப்பார்கள். இந்நிலையில், இந்த அறிவிப்பு தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களை சிரமத்திற்கு உள்ளாக்குவதாக அமைந்துள்ளது.

கனிமொழி கடிதம்

பொங்கல் நாளன்று நடைபெற உள்ள யுஜிசி நெட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு கனிமொழி எம்.பி. கடிதம் அனுப்பியுள்ளார். தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் நாளன்று தேர்வு நடத்தக் கூடாது என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களைக் குறிவைத்து ஜனவரி 15, 16ல் யுஜிசி நெட் தேர்வு நடத்த திமுக எம்.பி கனிமொழி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சு.வெங்கடேசன் வலியுறுத்தல்

முன்னதாக, மதுரை எம்.பி சு.வெங்கடேசன், பொங்கல் பண்டிகை அன்று நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நெட் தேர்வை தள்ளி வைக்கக் கோரியுள்ள்ளார். "ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன்? ஒன்றிய அரசின் கீழ் உள்ள தேர்வு முகமைகள் அறிவிக்கிற பல தேர்வுகள் பொங்கல் விடுமுறை நாட்களில் அறிவிக்கப்படுவது தொடர்கதை ஆகிவிட்டது. கடந்த மாதம் தான் பொங்கல் திருநாள் அன்று அறிவிக்கப்பட்டிருந்த பட்டய கணக்காளர் (CA) தேர்வு தேதியை போராடி மாற்றினோம். இப்பொழுது மீண்டும் இன்னொரு அறிவிப்பு வந்துள்ளது.

தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ள "யுஜிசி - நெட்" தேர்வு அட்டவணையில் 30 பாடங்கள் மீதான தேர்வுகள் ஜனவரி 15, 16 தேதிகளில் வருகிறது. ஜனவரி 14 அன்று பொங்கல், ஜனவரி 15 திருவள்ளுவர் தினம், ஜனவரி 16 உழவர் திருநாள் என தொடர் விடுமுறை இருந்தும் மேற்கண்ட தேதிகளில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொங்கல் காலம் என்பது தமிழர்களுடைய பண்பாட்டோடு, உழவர் பெருமக்களின் உணர்ச்சிப்பூர்வமான கொண்டாட்டத்தோடும் தொடர்புடையதாகும். ஆகவே இந்த தேதிகளில் தேர்வுகள் நடத்தப்படுவது மிகப்பெரும் சிரமங்களை தங்களுக்கு தரும் என்று தேர்வர்களும், பெற்றோர்களும் என்னை தொடர்பு கொண்டு தலையீட்டை நாடி உள்ளனர்.

ஆகவே இந்தத் தேர்வு தேதிகளை மாற்றுமாறு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கும், தேசிய தேர்வு முகமை பொது இயக்குனர் திரு பிரதீப் சிங் கரோலா இ.ஆ.ப அவர்களுக்கும் கடிதங்களை எழுதி உள்ளேன்." எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+