சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சங்கர் ஏன் அங்கே வந்தார்.. திமுக எம்எல்ஏவுக்கு எதுக்கு இந்த வேலை? முதல்வர் ஸ்டாலினிடம் ஓபிஎஸ் கேள்வி

திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ சங்கர் விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: திமுக எம்எல்ஏ சங்கர், சாலைப் பணிகள் மேற்கொண்டபோது ஏன் அங்கு வந்தார்? எதுக்காக வந்தார்கள், ஒப்பந்ததாரரிடம் என்ன பேரம் பேசப்பட்டது? ஏன் இதுகுறித்து யாரும் எந்தப் புகாரும் தரவில்லை ? என்பதையெல்லாம் தீர விசாரித்து, சங்கருக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மறைந்த முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமியின் சகோதரரான கே.பி.சங்கர் திருவொற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏவாகவும், திருவொற்றியூர் மேற்கு பகுதிச் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில், ஒப்பந்ததாரரை தாக்கியது தொடர்பாக சங்கர் மீது புகார் எழவும், நேற்று காலை சங்கர் கட்சிப் பதவி பதவியிலிருந்து நீக்கப்படுவதாக திடீரென திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டார். எனினும், பதவிப்பறிப்பு மட்டும் போதாது, சங்கர் மீது உரிய நடவடிக்கை வேண்டும் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், திமுக அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.. அது தொடர்பான ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கை இதுதான்:

 மும்மொழி கொள்கையை திணிப்பதா..? நீட் மசோதாவிற்கு ஒப்புதல் கொடுங்க: அமைச்சர் தங்கம் தென்னரசு அதிரடி மும்மொழி கொள்கையை திணிப்பதா..? நீட் மசோதாவிற்கு ஒப்புதல் கொடுங்க: அமைச்சர் தங்கம் தென்னரசு அதிரடி

 நடராஜன் தோட்டம்

நடராஜன் தோட்டம்

"சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலத்திற்குட்பட்ட பல சாலைகளை அமைக்கும் பொருட்டு மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் ஓர் ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், நடராஜன் தோட்டம் முதல் தெரு, இரண்டாவது தெரு மற்றும் மூன்றாவது தெரு ஆகியவற்றில் முப்பது இலட்சம் ரூபாய் மதிப்பிலான சாலை அமைக்கும் பணிகள் இரண்டு நாட்களுக்கு முன்பு நள்ளிரவு மேற்கொண்டிருந்த நிலையில், திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கர் மற்றும் அவரது ஆட்கள் அங்கு சென்று அந்தப் பணியை நிறுத்தச் சொன்னதாக கூறப்படுகிறது.

உதவியாளர்

உதவியாளர்

இதைத் தீர்த்து வைக்க சென்னை மாநகராட்சி உதவிப் பொறியாளர் முயன்றபோது சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கர் மற்றும் அவரது ஆட்கள் உதவிப் பொறியாளர் மற்றும் அவரது உதவியாளரை தாக்கியுள்ளதாகவும், சாலைப் பணிகளுக்காக 13 லாரிகளில் நிறுத்தப்பட்டிருந்த கலவை திருப்பி அனுப்பப்பட்டதாகவும், இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்த பிறகு சட்டமன்ற உறுப்பினர் உதவிப் பொறியாளரிடம் வருத்தம் தெரிவித்ததாகவும், இதில் மன உளைச்சலுக்குக் காரணமான உதவிப் பொறியாளர் விடுப்பில் சென்று விட்டதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

 என்ன நடந்தது

என்ன நடந்தது

இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினரிடம் கேட்டபோது, உதவிப் பொறியாளரை யாரும் தாக்கவில்லை என்றும், சாலைப் பணிகள் சரியாக மேற்கொள்ளப்படவில்லை என்ற தகவலின் அடிப்படையில் அவரது ஆட்கள் சாலைப் பணிகள் மேற்கொண்டிருந்த இடத்திற்குச் சென்றதாகவும், தான் அங்கு இல்லை என்றும், லஞ்சம், தரவு குறித்த புகார்களில் உண்மை இல்லை என்றும் கூறியுள்ளார். இது குறித்து கருத்துத் தெரிவித்த வடக்கு மண்டல துணை ஆணையர், ஏதோ பிரச்சனை தொடர்பாக வாய்மொழி புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும், பொறியாளர் தாக்கப்பட்டது குறித்து தனக்குத் தெரியாது என்றும், விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.

 நிறுவனம்

நிறுவனம்

இதுகுறித்து காவல் துறையிடம் ஏன் புகார் கொடுக்கவில்லை என்று ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவரிடம் கேட்டபோது, நிறுவனத்தின் எதிர்காலப் பணிகள் பாதிக்கப்படும் என்றும், சென்னை மாநகராட்சியே இதுகுறித்து மவுனம் சாதிக்கிறது என்றும், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தாக்கப்பட்டதால் அவர்கள் தான் புகார் அளிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

 மரண பயம்

மரண பயம்

ஆக மொத்தம், மாநகராட்சி அதிகாரி, காவல் துறையினர், ஒப்பந்ததாரர் என அனைவரும் மரண பயத்தில் உள்ளனர். சட்டமுறைப்படி நிறுவப்பெற்றுள்ள இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உண்மையான நம்பிக்கையும், பற்றுறுதியும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவேன் என்றும், தான் மேற்கொள்ள இருக்கும் கடமையை நேர்மையுடன் நிறைவேற்றுவேன் என்றும் உறுதி மொழி எடுத்துக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர் அரசு அதிகாரியை தாக்குவது என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தையே அவமதிக்கும் செயலாகும்.

 உதவி பொறியாளர்

உதவி பொறியாளர்

இந்திய அரசமைப்புச் சட்டத்தை முற்றிலும் மீறும் வகையில் செயல்பட்டு இருக்கிறார். சென்னை மாநகராட்சி உதவிப் பொறியாளர் மற்றும் உதவியாளர் மீதான சட்டமன்ற உறுப்பினரின் இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பது போல தன்னலத்திற்காகவும், சுயலாபத்திற்காகவும் அரசு அதிகாரிகள் தி.மு.க.வினராலும், சட்டமன்ற உறுப்பினர்களாலும் ஆங்காங்கே. மிரட்டப்படுகிறார்கள் என்ற எண்ணம் மக்கள் மனங்களில் உறுதியாகி நிலைத்து விட்டது.

முறைகேடுகள்

முறைகேடுகள்

தி.மு.க.வினரும், சட்டமன்ற உறுப்பினர்களும் அரசு ஒப்பந்தங்களில் தலையிடுவது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்பதால், அது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு மக்களிடையே பரவலாக உள்ளது. சாலைப் பணிகளை நிறுத்தச் சொல்ல சட்டமன்ற உறுப்பினருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பதையும், எதற்காக பணிகளை அவர் நிறுத்தச் சொன்னார் என்பதையும், சாலைப் பணிகள் நடக்கும் இடத்தில் தி.மு.க.வினருக்கு என்ன வேலை என்பதையும், அரசு அதிகாரியை தாக்கும் அளவிற்கு நள்ளிரவில் என்ன நடந்தது என்பதையும் தீர விசாரித்து மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய கடமை தமிழ்நாடு அரசிற்கு உண்டு.

 உரிய நடவடிக்கை தேவை

உரிய நடவடிக்கை தேவை

தி.மு.க.வினர் அரசு அதிகாரிகளை மிரட்டுவதும் தாக்குவதும் தொடர் கதையாக ஆகிவிட்டதால், இதனை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டிய பொறுப்பு சட்டம் - ஒழுங்கை தன் வசம் வைத்திருக்கும் முதலமைச்சருக்கும் உண்டு. எனவே, முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, மேற்படி சாலைப் பணிகள் மேற்கொண்டபோது தி.மு.க.வினரும், சட்டமன்ற உறுப்பினரும் ஏன் அங்கு வந்தார்கள்? எதற்காக வந்தார்கள்? ஒப்பந்ததாரரிடம் என்ன பேரம் பேசப்பட்டது? ஏன் இதுகுறித்து யாரும் எந்தப் புகாரும் தரவில்லை ? என்பதையெல்லாம் தீர விசாரித்து, அரசு அதிகாரியைத் தாக்கிய திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கர் மற்றும் அங்கு வந்த தி.மு.க.வினரை சட்டத்தின்முன் நிறுத்தி உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

English summary
DMK Tiruvottiyur MLA KP Shankar issue and ADMK Coordinator OPS statement on it
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X