சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமுகவுக்கு '190' இடங்கள்.. பெரும்பான்மை ஆட்சி - P-MARQ தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று (ஏப்.29) வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதில், திமுக ஆட்சியைக் கைப்பற்றும் P-MARQ கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் முதல் முடிவடைந்தது. அரசியல் கட்சிகளின் சூறாவளி பிரசாரத்திற்கு பிறகு 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில், 72.78 சதவீத வாக்குகள் பதிவானது. இது கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலைக் காட்டிலும், 2.03 சதவீதம் குறைவாகும். கடந்த தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், குறைவாகவே இருந்தது.

சல்லி சல்லியாக நொறுங்கிய சல்லி சல்லியாக நொறுங்கிய "பிளான்".. வாக்குகளை பிரித்த கமல், சீமான்.. திமுகவுக்கு பிளஸ்.. அதிமுக ஷாக்

 திமுக அலை

திமுக அலை

இந்த நிலையில், ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்றுடன் முழுமையாக முடிவடைந்த நிலையில், இன்று இரவு 7 மணி முதல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாகவே உள்ளன. இது திமுக தலைமையை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

 அச்சுறுத்திய கமல்

அச்சுறுத்திய கமல்

குறிப்பாக, இம்முறை ஐந்து முனை போட்டி நிலவியதால், திமுக தலைமை சற்று பீதியில் இருந்தது. எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்குமா என்ற கலக்கம் இருந்தது. கமல்ஹாசனின் வருகை, நாம் தமிழர் கட்சியின் எழுச்சி, அமமுக-வின் சைலன்ட் மிரட்டல் போன்றவை திமுகவை சற்று கவலையில் வைத்திருந்தன. ஏனெனில், இவர்கள் அனைவரும் வெற்றிப் பெற்று ஆட்சியை பிடிக்க மாட்டார்கள் என்றாலும், வாக்குகளை கணிசமாக பிரிப்பவர்கள்.

 வெற்றி பாதிக்குமா?

வெற்றி பாதிக்குமா?

கமல்ஹாசனுக்கு நகர்ப்புறங்களில் வாக்குகள் இருப்பதால், சென்னையில் மக்கள் நீதி மய்யம் கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், டிடிவி தினகரன் தென் மாவட்டங்களில் வாக்குகளை பிரிக்க காத்திருக்க, கிராமப்புறங்களில் சீமான் வெயிட்டாக இருந்தார். இவர்கள் பல திமுக வேட்பாளர்களின் வெற்றியை தடுக்கக் கூடும் என்றும் கருதப்பட்டது.

 கமலுக்கு பூஜ்யமா?

கமலுக்கு பூஜ்யமா?

இந்த நிலையில், P-MARQ வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் திமுக 165- 190 இடங்கள் வரை வெற்றிப் பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அதேசமயம், அதிமுக 58 - 68 இடங்களிலும், அமமுக 4 - 6 இடங்களிலும் வெற்றிப் பெற வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. மக்கள் நீதி மய்யத்திற்கு 'பூஜ்யம்' கொடுத்துள்ள P-MARQ, மற்றவர்கள் 0 -2 இடங்களில் வெற்றிப் பெற வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

English summary
dmk will make government p-marq exit poll 2021 - திமுக ஆட்சி
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X