அப்படியா..தெரியாதே..நன்றி..இளைஞரணி செயலாளர் பதவி பெரிய பொறுப்பு..உதயநிதி ஸ்டாலின் ரியாக்சன்
சென்னை: திமுக இளைஞரணி செயலாளராக மீண்டும் நியமனம் செய்யப்பட்டிருப்பது தனக்கு தெரியாது என்று கூறியுள்ள உதயநிதி ஸ்டாலின்..அதற்கு நன்றி தெரிவித்ததோடு தனக்கு மிகப்பெரிய பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் துரை முருகன் அறிவித்தார்.
திமுகவில் 15-வது உட்கட்சி தேர்தல் நிறைவடைந்ததை தொடர்ந்து ஒவ்வொரு அணிக்கு செயலாளர்கள் அறிவித்துள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின்
திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இளைஞரணி துணை செயலாளர்களாக ஜோயல், இன்பா ஏ.என்.ரகு, நா.இளையராஜா, அப்துல் மாலிக், பிரகாஷ், பிரபு, சீனிவாசன், பிரதீப் ராஜா, ஆனந்தகுமார் ஆகியோர் நியமனம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

உதயநிதி ரியாக்சன்
இளைஞரணி செயலாளராக மீண்டும் நியமனம் செய்யப்பட்டிருப்பது குறித்து உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கூறி வாழ்த்து கூறினர். அதைக்கேட்ட உதயநிதி ஸ்டாலின்..அப்படியா எனக்கு தெரியாதே என்று ஆச்சரியத்துடன் கேட்டதோடு நன்றி நன்றி.. என்று கூறினார்.

மிகப்பெரிய பொறுப்பு
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளராக மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதை மிகப்பெரிய பொறுப்பாக பார்க்கிறேன் என்றும் தெரிவித்தார்.

திமுக நிர்வாகிகள் வாழ்த்து
திமுக இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டார். தற்போது இரண்டாவது முறையாக அவர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, அவருக்கு கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி












Click it and Unblock the Notifications