Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதிலும் தமிழ்நாடுதான் முதலிடம்! - ‘க்ரீன் க்ளைமேட் கம்பெனி’ பற்றி தெரியுமா உங்களுக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழ்நாடு அரசு புதிதாக ஒரு கம்பெனியை தொடங்கியிருக்கிறது. அதன் பெயர் என்ன தெரியுமா? 'க்ரீன் க்ளைமேட் கம்பெனி'. அப்படி என்றால் சிலருக்குப் புரியலாம். பலருக்கும் புரிய வாய்ப்பு இல்லை. அதாவது 'பசுமை காலநிலை மாற்ற இயக்கம்' என இதனைத் தமிழில் மொழிபெயர்க்கலாம்.

இந்த இயக்கத்திற்காகத் தமிழ்நாடு அரசு ஆயிரம் கோடியைச் செலவிட உள்ளது. என்னது ஆயிரம் கோடியா? அவ்வளவு பெரிய துறையா இது எனப் பலரும் ஆச்சரியப்படலாம்.

ஆம்!, எதிர்கால உலகையே இதுதான் தீர்மானிக்கப் போகிறது. இயற்கை வளம் காப்பாற்றப்பட்டால்தான், இனி மனிதன் பூமியில் சுகவாசியாக வாழ முடியும்.

 எல்லோருக்கும் முன்னதாக விழித்துக்கொண்ட தமிழ்நாடு

எல்லோருக்கும் முன்னதாக விழித்துக்கொண்ட தமிழ்நாடு

காலநிலை மாற்றத்தால் இந்தப் புவியே காலாவதியாகப் போகிறது எனப் பல்வேறு சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் பல வருடங்களாகவே எச்சரிக்கை மணியை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தச் சத்தம் இந்தியாவிலுள்ள எந்த மாநில அரசையும் எட்டியதாகத் தெரியவில்லை. எல்லோருக்கும் முன்னதாக விழித்துக் கொண்டுள்ளது தமிழ்நாடு.

மிகச் சுருக்கமாகச் சொன்னால், இந்தியாவிலேயே காலநிலை மாற்றத்திற்காக ஒரு இயக்கத்தைத் தமிழ்நாடு அரசுதான் முதன்முறையாகத் தொடங்கி உள்ளது. அந்தளவில் இதற்கும் வழக்கம்போல் தமிழ்நாடுதான் இந்தியாவிற்கே முன்னோடி.

கடந்த டிசம்பர் 8 மற்றும் 9 ஆகிய இரு தேதிகளில் சென்னை எம்.ஆர்.சி. நகரில் தமிழ்நாட்டின் முதல் காலநிலை உச்சி மாநாட்டைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

 மனித குலத்தின் மிகப் பெரிய பிரச்சினை

மனித குலத்தின் மிகப் பெரிய பிரச்சினை

அதில் அவர் உரையாற்றிய போது, "ஐ.நா. அமைப்பாக இருப்பினும் உலகின் பல நாடுகளாக இருப்பினும் ஒரே ஒரு பிரச்சினையைப் பற்றித்தான் அனைவரது கவலையும் உள்ளது. அதுவே காலநிலை மாற்றம். மனித குலத்தின் மிக முக்கியப் பிரச்சினையாகக் காலநிலை மாற்றம் இருக்கிறது. இதையே தமிழ்நாடு அரசும் கருதுகிறது. இதை ஆட்சிக்கு வந்தது முதல் நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். ஆகவே இந்தியாவிலேயே மற்ற மாநில அரசுகளுக்கு முன்மாதிரியாகக் காலநிலை மாற்ற இயக்கத்தைத் துவக்கி வைப்பதில் நான் பெருமை அடைகிறேன்.

 2070- க்குள் தமிழ்நாட்டில் கார்பன் சமநிலை

2070- க்குள் தமிழ்நாட்டில் கார்பன் சமநிலை

மேலும், "2070 க்குள் கார்பன் சமநிலையை அடையும் என இந்தியா அறிவித்துள்ளது. அதற்கு முன்னதாகவே தமிழ்நாடு கார்பன் சமநிலையை அடைந்துவிடும்" என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதற்கான தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் ஆவணத்தையும் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
2070- க்குள் எப்படி சாத்தியம்? எனச் சிலருக்கு யோசனை வரக்கூடும்.

மு.க.ஸ்டாலின் அதற்கான செயலில் இறங்குவதற்காகத்தான் 'பசுமை காலநிலை மாற்ற இயக்க'த்தை தொடங்கி இருக்கிறார். இதற்காகவே ரூ.1000 கோடி நிதியைத் திரட்ட திட்டமிட்டுள்ளார். அதற்காகத் தமிழ்நாடு காலநிலை மாற்ற நிதியை அரசு உருவாக்கி இருக்கிறது. இந்நிதியானது , காலநிலை மாற்ற முயற்சிகள், மற்றும் பசுமை திட்டங்களுக்குச் செயல் வடிவம் தரும். உதவிகள் புரியும். அரசு மேம்பாட்டு நிதி நிறுவனங்கள், சர்வதேச காலநிலை நிதி போன்றவற்றிலிருந்து தேவையான நிதி ஆதாரங்களை இது திரட்டும்.

தமிழ்நாட்டின் பசுமைச் சூழலைக் காப்பாற்ற இந்த ஒரு அமைப்பை மட்டும் ஸ்டாலின் உருவாக்கவில்லை. இதற்கு முன்னதாகவே 'பசுமை தமிழ்நாடு இயக்கம்' கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. அதேபோல தமிழ்நாடு சதுப்புநில இயக்கம் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கமும் தொடங்கப்பட்டுள்ளது.

 தமிழ்நாடு அரசு திட்டம்

தமிழ்நாடு அரசு திட்டம்

இதற்குத் தமிழக அரசு பல்வேறு நிதி ஆதாரங்கள் மூலம் 100 கோடி ரூபாயை முதல் கட்டமாக அளிக்க உள்ளது. அதற்கான அரசாணையைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

மேலும் 10 ஆண்டுக் கால அவகாசத்திற்குள், 2 ஆண்டுகள் வரை நீட்டிப்பு செய்யும்படி வாய்ப்புள்ள பங்கு மூலதனங்கள், கடனீட்டுப் பத்திரங்கள், மாற்றத்தக்க நிதி ஆதாரங்கள் மூலம் இதற்கு நிதி திரட்டப்படும் என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

பாரிஸ் ஒப்பந்தத்தின் படி (Nationally Determined Contribution commitments) 2030 ஆம் ஆண்டிற்குள் காடு மற்றும் மரங்களின் பரப்பில் 2.5 முதல் 3 பில்லியன் டன்கள் வரை கூடுதல் கரியமில வாய்வு மாசு பெருக்கைத்தைக் குறைப்பதற்காகத் தேசிய அளவில் முயற்சிகளை அதிகரிக்கத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

 காட்டின் பரப்பளவு 23.8% லிருந்து 33% ஆக உயர வழி

காட்டின் பரப்பளவு 23.8% லிருந்து 33% ஆக உயர வழி

இந்த மாற்றத்தை எளிதில் செய்துவிட முடியாது. மரங்கள்தான் இயற்கையாகக் காலநிலை மாற்றத்திற்கும், மேலாண்மைக்கும் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே மரம் நடுவது மட்டுமே இதற்குத் தீர்வும் ஆகாது. காடுகளின் பரப்பை அதிகரிப்பதன் மூலமே அதைச் சீர் செய்ய இயலும். ஆகவேதான்

காலநிலை மாற்றம் மிகுந்த கவலை தரும் சவாலாக மனித குலத்தின் முன்னால் நிற்கிறது. அதை நிவர்த்தி செய்ய வேண்டும் எனில் மழைப்பொழிவு, வெப்பநிலை உச்சநிலைக்குச் செல்லாமல் தடுப்பது, பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்தும் பழங்குடிகள் மற்றும் பூர்வ குடிகளின் மரபுகளை ஊக்குவிப்பதன் மூலம் வனப்பகுதியை மறுசீரமைப்பு செய்ய முடியும்.

இதன்படி 2021-2022 ஆம் ஆண்டுக் காலத்தில் காடுகளில் 1.20 கோடி விதைகளை நடுவதற்குக்கான இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுமார் 265 கோடி நாட்டு மரங்களின் விதைகள் 10 ஆண்டுகளுக்குள் நடப்படும் என்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 13,500 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள புறம்போக்கு நிலங்கள் மற்றும் கோயில் காடுகள், காப்புக்காடுகள், அரசுப் பள்ளி நிலங்கள், படுகை நிலங்கள், வனப்பகுதிக்குச் சொந்தமான நிலங்கள் என பல்வேறு பகுதிகளில் இந்த விதைகளை விதைப்பதன் மூலம் இழந்துவரும் பசுமைச் சூழலை மீட்க முடியும் என்று தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேற்கொண்டு தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கரியமில வாய்வின் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான திட்டங்களை வகுப்பது, பொது போக்குவரத்து பயன்பாட்டை அதிகரித்தல், பசுமையான ஆற்றல் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டின் மூலம் உமிழ்வைக் குறைப்பதற்கான உத்திகளை மேம்படுத்துவது இந்த காலநிலை மாற்றத்தின் முக்கிய இலக்காகும்.

 தமிழ்நாடு காலநிலை மாற்றத் திட்டம்

தமிழ்நாடு காலநிலை மாற்றத் திட்டம்

காலநிலை மாற்றத் தகவமைத்தலுக்கான தேசிய நிதி (NAFCC-National Adaptation Fund for Climate Change), காலநிலை பசுமை நிதி (GFC-Green Climate Fund) போன்ற தேசிய மற்றும் சர்வதேச காலநிலை நிதி ஆதாரங்களைத் தமிழ்நாடு காலநிலை திட்டத்தின் முயற்சியால் பெறவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

2021-2022 ஆம் ஆண்டு நிதிநிலையின் போது, 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் உள்ள காடு மற்றும் மரங்களின் பரப்பளவைக் காடுகளின் பரப்பை 23.7% இருந்து 33% ஆக உயர்த்த ஏற்கனவே தமிழ்நாடு அரசால் கொண்டுவரப்பட்டுள்ள பசுமை தமிழ்நாடு இயக்கம் (Green Tamil Nadu Mission), சதுப்புநில பாதுகாப்பிற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள தமிழ்நாடு சதுப்புநில இயக்கம் (Tamil Nadu Wetland Mission) ஆகிய திட்டங்களுடன் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் இணைந்து செயல்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பேரிடர்களைத் திறம்படக் கையாளவும் அதன் பாதிப்புகளிலிருந்து எளிதில் மீட்டுக் கொண்டு வரத் தேவையான கட்டமைப்புகளைத் தமிழ்நாடு காலநிலை மாற்றத் திட்டம் உருவாக்க உள்ளது. கழிவு நீர், திடக்கழிவு, மின்சாதன கழிவு, மருத்துவக் கழிவு ஆகியவற்றை சூழலியலுக்கு கேடு விளைவிக்காத வகையிலும் மேலாண்மை செய்யவும், பிளாஸ்டிக் கழிவு பிரச்சினைக்கான தீர்வினை எட்டவும் இத்திட்டம் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

 ’ஒரே ஆரோக்கியம்’ காண ஏற்பாடு

’ஒரே ஆரோக்கியம்’ காண ஏற்பாடு

பேரிடர்களைத் திறம்படக் கையாளவும் அதன் பாதிப்புகளிலிருந்து எளிதாக மீளவும் தேவையான கட்டமைப்புகளை உருவாக்குதல், கழிவுநீர், திடக்கழிவு, மின்சாதன கழிவு, மருத்துவக் கழிவு போன்றவற்றை சூழலியலுக்கு கேடு விளைவிக்காத வகையிலும் மேலாண்மை செய்ய வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட உள்ளன. மேற்கொண்டு தலையாய பிரச்சினையாக உருவெடுத்துள்ள பிளாஸ்டிக் கழிவுக்குத் தீர்வு காணப்படவும் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

புதுப்பிக்கக்கூடிய ஆற்றலைப் பயன்படுத்தி உற்பத்தியாகும் மின்சாரத்தை அதிகரிக்கவும் அவற்றை எடுத்துச்செல்லவும் தனியான பசுமை வழித்தடம் (Green Corridor) உருவாக்கப்படும் என்றும் காற்றாலைகளைப் புதுப்பிப்பதற்கான புதிய கொள்கை (Re-Powering Policy) எரிசக்தித் துறையால் வெளியிடப்படும் என்றும் அரசின் அனைத்துத் திட்டங்களையும், கொள்கைகளையும் காலநிலை மாற்றப் பார்வையில் பார்த்து, ஆய்வுசெய்தபின் செயல்படுத்தவும் பல பாதைகள் உருவாக்கப்பட உள்ளன.

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் சீர்கேடுகளைப் புரிந்து கொள்வதற்காகவும் மனிதன் மற்றும் விலங்கு நல ஆரோக்கியம் ஆகியவற்றை உள்ளடக்கிய 'ஒரே ஆரோக்கியம்' (One Health) எனும் அணுகுமுறையைப் பின்பற்றும் வகையில் ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன. இவை யாவும் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் முக்கிய இலக்குகளாக இருக்கும் எனத் தமிழக அரசு கூறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+