சென்னை ஐகோர்ட் நீதிபதியின் டிரைவர் வீட்டின் படுக்கையில் இருந்த காட்சி.. ஆடிப்போன உறவினர்கள்
சென்னை: சென்னை மாங்காடு அருகே உள்ள வடக்கு மலையம்பாக்கத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கார் டிரைவராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய அவர், பெற்றோரின் திருமண நாளையொட்டி கேக் வெட்டினார். பின்னர் படுக்கை அறைக்குள் சென்ற சதீஷ்குமார் திரும்ப வரவே இல்லை.. அவரது கோலத்தை பார்த்து உறவினர்கள் ஆடிப்போனார்கள்..
குடும்ப விவகாரங்களில் கணவன் மனைவி இடையே ஏற்படும் புரிதல் சரியாக இல்லாமல்போனால் வாழ்க்கையில் இருவருக்குமே சிக்கல் அதிகமாகிவிடுகிறது. கணவனை பற்றி சரியான புரிதல் இல்லாமல் மனைவி எடுக்கும் சில முடிவுகளும் சரி, மனைவியை பற்றி சரியான புரிதல் இல்லாமல் கணவன் எடுக்கும் முடிவுகளும் சரி, அவர்கள் வாழ்க்கையை மொத்தமாக கேள்விக்குறியாக்கிவிடுகிறது.

சின்ன சின்ன சண்டைக்கு எல்லாம் கணவன் மனைவி சண்டை போட்டு, ஈகோவால் வாழ்க்கையை தொலைக்கிறார்கள். ஈகோ ஒருபுறம் எனில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து செல்லாமல் இருக்கிறார்கள். நான் ஏன் உனக்காக விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும் என்று கணவன் நினைத்தாலோ அல்லது மனைவி நினைத்தாலோ குடும்ப உறவுகள் சிதைத்து போகிறது. இதன் காரணமாக யாராவது ஒருவர் திடீரென தவறான முடிவெடுத்து வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். அப்படித்தான் சென்னையின் புறநகர் பகுதியில் நடந்துள்ளது.
சென்னை மாங்காடு அடுத்த வடக்கு மலையம்பாக்கம் கக்கன்ஜி தெருவை சேர்ந்த 34 வயதாகும் சதீஷ்குமார் என்பவர், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு கார் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும், தனது பெற்றோரின் திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார். பின்னர் அறைக்குள் சென்ற சதீஷ்குமார், தூக்கிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டிரைவர் சதீஷ்குமாருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு பாக்கியலட்சுமி (25) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்திருக்கிறது. பாக்கியலட்சுமி சதீஷ்குமார் தம்பதிக்கு குழந்தை பிறந்ததால் பாக்கியலட்சுமி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். சதீஷ்குமார், பாக்கியலட்சுமி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. கடந்த பிப்ரவரி 5ம் தேதி அன்று, இரவு வழக்கம் போல் வீட்டுக்கு வந்த சதீஷ்குமார் பெற்றோரின் திருமண நாளை கொண்டாடிவிட்டு அது குறித்து தனது மனைவிக்கு வீடியோ காலில் பேசியுள்ளார். அதன்பிறகே அவர் உயிரைவிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
தெரிந்தே இப்படி செய்யலாமா? அருண் ஐபிஎஸ்ஸை கண்டித்த ஹைகோர்ட்! தொழிலதிபர் மீதான குண்டர் சட்டம் ரத்து -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம்












Click it and Unblock the Notifications