பரபரத்த பிடிஆர் ட்வீட்! பணக்காரி.. கொடும் துன்பங்களை அனுபவித்த "தேவதை".. ஆமா யார் இந்த சிண்ட்ரெல்லா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரை பழைய விமான நிலையத்தின் சிண்ட்ரெல்லா தனது ஒற்றைச் செருப்பை என் அலுவலகத்தில் பெற்று செல்லலாம் என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ட்வீட் போட்ட நிலையில் யார் அந்த சிண்ட்ரெல்லா, எதற்காக அமைச்சர் அந்த பெயரை பயன்படுத்தியுள்ளார் என்பது குறித்து பொதுமக்கள் அதிகம் தேடி வருகிறார்கள்.

Recommended Video

    Minister PTR | பாஜகவினர் தாக்குதலுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில்

    மதுரை விமான நிலையத்திற்கு வந்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் காரை பாஜகவினர் நேற்றைய தினம் வழிமறித்தனர். அப்போது பெண் நிர்வாகி ஒருவர் செருப்பை கார் மீது வீசினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜகவினர் செருப்பு வீசியதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். பாஜக தலைவர் அண்ணாமலையே தனது கட்சியினரை கண்டித்து வருகிறார்.

    இந்த நிலையில் இதுகுறித்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், நேற்று நடந்த சம்பவம் குறித்து நான் பிறகு தான் கூறுவேன். ஆனால் இப்போதைக்கு, பாதுகாக்கப்பட்ட இடத்தில் தனது நிர்வாகிகளுடன் சில 100 மீட்டர் வரை நுழைந்த மதுரை பழைய விமான நிலைய முணையத்தின் சிண்ட்ரெல்லாவின் ஒற்றை செருப்பு அவருக்கு வேண்டுமானால் திரும்ப பெற்று கொள்ளலாம்.

    ஊழியர்கள்

    ஊழியர்கள்

    எனது ஊழியர்கள் அதை உங்களுக்காக பத்திரப்படுத்தியுள்ளார்கள் என பிடிஆர் ஒற்றை செருப்புடன் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அது முதல் சிண்ட்ரெல்லா, ஒற்றை செருப்பு உள்ளிட்டவை குறித்து நெட்டிசன்கள் தேடி வருகிறார்கள். சரி யார் இந்த சிண்ட்ரெல்லா என்பதை பார்ப்போம்.

    சிண்ட்ரெல்லா

    சிண்ட்ரெல்லா

    சிண்ட்ரெல்லா என்றால் அறிந்து கொள்ள முடியாத ஒருவரின் பண்புகள், வாழ்க்கையின் பெரும் துன்பங்களைச் சந்தித்த ஒருவர் அதையெல்லாம் வென்று மீண்டு வந்ததையும் குறிக்கும். சிண்ட்ரெல்லா பொம்மைகளை பார்க்கும் போது எத்தனை அழகு பொருந்திய பொம்மையாக அறியப்படும் நிலையில் அவருக்குள் இத்தனை சோகங்களா என கேட்க வைக்கிறது இந்த சம்பவம்.

    சிண்ட்ரெல்லாவுக்கு துன்பம்

    சிண்ட்ரெல்லாவுக்கு துன்பம்

    சிண்ட்ரெல்லா பணக்கார வீட்டில் மகளாக பிறக்கிறாள். அதாவது born with silver spoon என்பதை போல்தான் சிண்ட்ரெல்லாவும். பணம் இருக்கிறதே என்ன துன்பம் என்றால், சிண்ட்ரெல்லா சிறு வயதிலேயே தனது தாயை இழந்துவிடுகிறாள். அவரது அப்பா இரண்டாவதாக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் அந்த புதுப்பெண் நல்ல மனைவியாக நடந்து கொள்கிறார். ஆனால் சிண்ட்ரெல்லாவுக்கு தாயாக நடந்து கொள்ளவில்லை.

    மாற்றான் தாய்

    மாற்றான் தாய்

    தனது மாற்றான் தாய் மனப்பான்மையை சின்னஞ்சிறிய சிண்ட்ரெல்லாவிடம் காட்டுகிறார். சிறுமி என்றும் பாராமல் அத்தனை வேலைகளையும் சிண்ட்ரெல்லாவை செய்ய விடுகிறார். புதுமனைவி மோகத்தால் இதை சிண்ட்ரெல்லாவின் தந்தையும் தட்டி கேட்பதில்லை. தனக்கென இரு மகள்களை இளவரசியாக நடத்தும் மாற்றான்தாய், சிண்ட்ரெல்லாவை மட்டும் அப்படி நடத்தத் தவறிவிட்டார்.

     இளவரசன்

    இளவரசன்

    ஒரு நாள் பக்கத்து நாட்டு இளவரசன் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறான். அதாவது தன் மனம் கவரும் அளவுக்கு யார் நடனம் ஆடுகிறார்களோ அவரையே தான் மணக்க விரும்புவதாக அறிவிக்கிறான். அதாவது சுயம்வரம். உடனே சிண்ட்ரெல்லாவின் சித்தி தனது இரு மகள்களையும் நன்றாக பொம்மை போல் அலங்கரித்து அனுப்புகிறாள். ஆனால் பாவம் சிண்ட்ரெல்லாவோ வியர்த்து விறுவிறுக்க பணிவிடைகளை செய்து வருகிறார்.

    தேவதை

    தேவதை

    அப்போது தேவதை ஒன்று சிண்ட்ரெல்லா முன்பு தோன்றி, அந்த இளவரசனை மணமுடிக்க செல்லுமாறு சொல்கிறது. அதற்கு சிண்ட்ரெல்லா என் முகத்தையும் என் உடையையும் பார்த்தும் என்னை போட்டியில் எப்படி கலந்து கொள்ளுமாறு சொல்கிறாய் என கேட்கிறாள். உடனே அந்த தேவதை அவ்வளவுதானே என கூறி சிண்ட்ரெல்லாவின் தலை முதல் கால் வரை அத்தனை அழகாக மாற்றி நல்ல உடைகளையும் கொடுக்கிறது. மேலும் பயணிக்க குதிரையையும் தேவதை கொடுக்கிறது. அதே சமயம் தேவதை ஒரு கண்டிஷனையும் வைக்கிறது. அதாவது இந்த மந்திர சக்தி நள்ளிரவு வரை மட்டுமே வேலை செய்யும் என தேவதை சொல்கிறது.

    உடைகள்

    உடைகள்

    அந்த உடைகளை அணிந்து கொண்டு சிண்ட்ரெல்லா, இளவரசருடன் நடனம் ஆடுகிறாள். அந்த அழகில் மயங்கும் இளவரசன், சிண்ட்ரெல்லாவை திருமணம் செய்ய விரும்புகிறான். இருவரும் மெய் மறந்து பேசிக் கொண்டிருந்த போது தேவதை சொன்ன விஷயம் சிண்ட்ரெல்லாவுக்கு நினைவுக்கு வர உடனே அவர் பதறியடித்துக் கொண்டு தனது வீட்டிற்கு செல்கிறார். அப்போது அவசரத்தில் தனது ஒற்றை செருப்பை மறந்துவிடுகிறாள்.

    பூட்டி வைக்கும் சித்தி

    பூட்டி வைக்கும் சித்தி

    வீடு வந்த போதுதான் தனது ஒற்றை செருப்பை அரண்மனையில் விட்டுவிட்டு வந்தது தெரிகிறது. இந்த நிலையில் இளவரசன் சிண்ட்ரெல்லாவை தேடுகிறான். ஆனால் கொடுமைக்கார சித்தியோ வழக்கம் போல் சிண்ட்ரெல்லாவை வீட்டில் வைத்து பூட்டி விடுகிறார். இதனால் சிண்ட்ரெல்லாவை காணாமல் இளவரசன் தவிக்கிறான். அப்போது அவனுக்கு ஒரு யோசனை தோன்றுகிறது.

    ஒற்றை செருப்பு

    ஒற்றை செருப்பு

    தனது சிப்பாய்களிடம் சிண்ட்ரெல்லாவின் ஒற்றை செருப்பை கொடுத்து தேட சொல்கிறான். நகரம் முழுவதும் தேடி பார்த்து ஏமாற்றமடைந்த சிப்பாய்கள் கடைசியாக சிண்ட்ரெல்லாவின் வீட்டுக்கு வருகிறார்கள். அப்போது சிண்ட்ரெல்லாவின் கால்களுக்கு பொருத்தமாக உள்ளது அந்த செருப்பு. உடனே மற்றொரு செருப்பை கேட்க சிண்ட்ரெல்லா அதை கொண்டு வந்து கொடுக்க, உடனே இந்த பெண்தான் இளவரசர் தேடியது என்பதை உணர்ந்து விஷயத்தை இளவரசரிடம் சொல்கிறார்கள். அன்று முதல் சிண்ட்ரெல்லாவுக்கு நல்ல காலம்தான். இளவரசனை திருமணம் செய்து கொண்டு ராஜ போக வாழ்க்கை வாழ்கிறாள். வாழ்க்கையில் எத்தனை துன்பம் வந்தாலும் அதை தகர்த்துவிட்டு மேலே வந்தவர். இதுதான் அமைச்சர் பிடிஆர் சொன்ன சிண்ட்ரெல்லாவும் ஒற்றை செருப்பும்!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+